உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, July 10, 2013

மதுரைத்தமிழன் எழுதிய காதல் கடிதம்

மதுரைத்தமிழன் எழுதிய காதல் கடிதம்

நம்ம சீனு தம்பி காதல் கடிதம் பரிசு போட்டி வைத்திருக்கிறார். அதில் வந்த கடிதங்களை படித்த பின் எல்லா கடிதங்களும் மிக அருமையாக இருந்தது என்ற போதிலும் அது எல்லாம் காதல்மன்னன் ஜெமினிகணேசன் காலத்திற்கு ஏற்ற மாதிரி இருப்பதாக என் மனதில் தோன்றியது. அதனால் நான் இந்த காலத்திற்கு ஏற்றவாறு நான் ஒரு கடிதம் எழுதி இருக்கிறேன் நீங்கள் படித்து ரசிக்க.. 

love letter


இது நகைச்சுவைக்காக எழுதப்பட்டது. அதனால் சினுவின் போட்டியில் கலந்து கொள்பவர்கள் தப்பாக எடுத்து கொள்ள வேண்டாம்அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி: நானும் ஒரு காதல் கடிதம் எழுதி உள்ளேன் அதை நான் அனுப்பலாமா வேண்டாமா என்று யோசித்து கொண்டிருக்கிறேன்

27 comments :

 1. இப்பிடித்தான் காதல் கடிதம் எழுதணும் ஒரு பய உயிரோட இருக்கப்டாது ஆமா...

  ReplyDelete
  Replies
  1. எனது பதிவைவிட நீங்கள் இட்ட கருத்து என்னை சிரிக்க வைத்தது நன்றி மனோ

   Delete
 2. இது நல்லாவே இருக்கு - புதுமையானது.
  அதையும் அனுப்பி வைங்க.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. இந்த கடிதம் நகைச்சுவைக்காக எழுதியது.. காதல் கடிதம் எழுதாமல் காதலித்து கல்யாணம் பண்ணி வெற்றி பெற்று குடும்பம் நடத்தி வரும் நான் ஒரு காதல் கடிதம் எழுதியுள்ளேன் அதை சில தினங்களில் வெளியிட முயற்சிக்கிறேன்
   உங்கள் வருகைக்கு நன்றி அப்பாதுரை அவர்களே

   Delete
 3. face book ல இப்படி பண்றவன் ஏராளமா இருக்காங்களே! அடிக்கடி பேப்பர்ல நியுஸ் வந்துகிட்டுதான் இருக்கு.
  போஸ்ட் கார்டுல லவ் லெட்டர் . ஆஹா வித்தியசம்னா அவர்கள் உண்மைகள்தான். ஷேர் பண்ணுங்க ஏரளாமான லைக்ஸ் விழும்

  ReplyDelete
  Replies
  1. பேஸ்புக்குல நான் ஷேர் பண்ணினா எனக்கு ஒன்றோ இரண்டோ லைக்குதான் கிடைக்கும். அவ்வளவுதாங்க... நான் பதிவுலகில் யாருக்கும் ஜால்ரா போடுவதில்லை மற்றும் எந்த குருப்போடும் சேர்ந்து கும்மி அடிப்பதில்லை போனில் பேசுவதில்லை என்பதால் எனக்கு யாரும் லைக் போடுவதில்லை. ஒரு பேஸ்புக் தளத்தில் நான் வடிவமைத்து இட்ட ஒருபடத்தை ஒருவர் அந்த படத்தில் உள்ள அவர்கள் உண்மைகள் என்ற பெயரை நீக்கிவிட்டு தமது சொந்த படம் போல வெளிடிட்டு இருக்கிறார் சொன்ன நம்ப மாட்டிங்க அதை 1727 நபர்கள் ஷேர் செய்தும் 668 பேர் லைக் செய்தும் 75 பேர் கமெண்ஸும் போட்டுள்ளனர் எப்படியோ என் கற்பனைகள் பலரால் ரசிக்கப்படுகிறது என்பதே எனக்கு சந்தோஷம்

   Delete
 4. நானும் லைக் போட்டுட்டுட்டேன். அதாவது ஒட்டு போட்டுட்டேன். ஒரு வருடத்துக்கு முன்னாடி இதே மேட்டரை கவிதையா போட்டிருக்கேன். நேரம் இருந்தா பாருங்க
  தெய்வீகக் காதல்?

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பதிவை படித்து பார்த்தேன். நீங்களும் நடக்கும் உண்மையை அப்படியே சொல்லி இருக்கிறீர்கள்

   Delete
 5. ஹா ஹா... தினம் தினம் மதுரைத் தமிழனின் இணையக் குறும்புகள் ரசிக்க வைக்கின்றன...

  ReplyDelete
  Replies
  1. எதையும் கொஞ்சம் வித்தியாசமாகவும் கொடுக்கவில்லை என்றால் ஸ்கூல் பையன் கூட வேறுபக்கம் ஒடிவிடுவார் அல்லவா? அதனாலதான் குறும்புத்தனதோடு கொடுக்க வேண்டி இருக்கிறது. தினமும் வருகைதருவதற்கு மிகவும் நன்றி

   Delete
  2. ஹா ஹா ஹா செம செம

   Delete
 6. நல்ல குறும்பு மதுரை தமிழன். ரசித்தேன்....

  காதல் கடிதத்தினையும் வெளியிடுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. ரசித்து படித்தற்கு நன்றி...காதல் கடிதத்தை வெளியிட்டால் எல்லா பெண்களும் என்னை காதலிக்க தொடங்கி விடுவார்களே என்ற பயம்தான்...நீங்களே வெளியிடு என்று சொன்னதற்கு அப்புறம் வெளியிட்டுவிடுகிறேன்

   Delete
 7. உங்கள் விஞ்ஞான வளர்ச்சி கண்டு யாம் வியக்கோம், அது சரி இன்னுமா உங்க வீட்ல பூரிகட்ட பறக்காம இருக்கு, ஆமா அது என்ன தலையில என்ன லேசா ஒரு தையல் தெரியுதே...!

  ReplyDelete
  Replies
  1. தம்பி உங்களுக்கு கண்ணு நல்லா தெரியல போல டாக்டரை பாருங்க நீங்க பார்த்தது ஒரு தையல் இல்லைங்க. நீங்க பார்த்த இடத்தில் மட்டும்தான் தையல் இல்லை மீதி இடம் பூராவும் தையலுங்க

   Delete
 8. இது காதல் கடிதம் மாதிரித் தெரியவில்லையே
  வேண்டுதல் அல்லது கோரிக்கைக் கடிதம் மாதிரி
  அல்லவா இருக்கிறது
  விண்டவர் கண்டிலர் என்பதுபோல
  காதலிக்காதவர்கள்தான் காதல் கடிதம்
  சிறப்பாக எழுதுவார்களோ ?
  (சும்மா ஜாலிக்காக )

  ReplyDelete
  Replies
  1. ரமணி சார் இந்த கால காதல் கடிதம் எல்லாம் வேண்டுகோள் அல்லது கட்டளை மாதிரிதான். சில பேரின் கட்டளைகள் மிகவும் பயங்கரமாக இருக்கும். என்னை காதலித்தால் உன் கழுத்தில் தாலி ஏறும் ஆனால் மறுத்தால் உன் மூஞ்சியில் ஆசிட்தான்


   'காதலி' என்ற வார்த்தையை சற்று உற்று நோக்கினால் அது கட்டளை வாக்கியம் போல அல்லவா இருக்கிறது

   சார் நீங்கள் எப்பொழுதும் என்னை கலாய்க்கலாம்....

   Delete
 9. Replies
  1. உங்களின் தா.ம க்கு நன்றி .உங்களையும் நான் கலாய்த்து என் பதிவில் எழுதி இருக்கிறேன். இதை படிச்சிட்டு உங்களுக்கு அழுகை வந்தால் மதுரை தமிழன் பொறுப்பல்ல என்ற பதிவை பார்க்கவும் உங்களுக்கு நேரம் இருந்தால் http://avargal-unmaigal.blogspot.com/2013/07/blog-post_9.html

   Delete
  2. லிங்க் கொடுத்துட்டு ரைட் கிளிக் disable பண்ணி வச்சா எப்படி பாஸ் பதிவை படிக்கிறது

   Delete
 10. வடிவமைப்பு சிறப்பு . நீங்கள்
  நிஜமாகவே காதலிக்கும் போது சொல்ல நினைத்ததை
  எல்லாம் கொட்டி விட ippo ஒரு அருமையான வாய்ப்பு ....உங்களுக்கும்
  .... வாசிக்கப் போகும் எங்களுக்கும் ...... ம்ம் .ம்ம்ம் .. சீக்கிரம் வெளியிடுங்க ...
  ஆவல் மீறுகிறது .

  ReplyDelete
  Replies
  1. நிஜமாக காதலித்த போது பிரமிப்பில் சொல்ல முடியவில்லை. இப்ப சொல்ல நினைக்கும் போது எல்லாம் உளரலாக இருப்பது போல இருக்கிறது.. ஆனால் உங்களை போல வார்த்தைகளில் உணர்வை கொண்டு வர என்னால் இயலாது. முடிந்தால் நாளை வெளியிடுகிறேன். அதை படித்துவிட்டு போய்யா நீயும் உன் காதலும் என்று துப்பாதீர்கள்.

   நீண்ட நாள் கழித்து நீங்கள் எனது தளத்திற்கு வருகை தந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி

   Delete
 11. சூப்பரு... காதல் சக்சஸ் ஆச்சா டவுட்டு...

  ReplyDelete
 12. காமெடி கடிதம் கலக்கல்! நிஜ கடிதம் எழுதி வெற்றி பெறவும்(போட்டியில்) வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. இபாடி உருகி உருகி லெட்டர் எழுதி இருக்கீங்களே இது வீணாய் போகலாமா?! அதனால, இதையே போட்டி கடிதமா எடுத்துக்கட்டும். இதன் முன் மத்த கடிதம்லாம் தூசு, அதனால நாங்கலாம் வாபஸ் வாங்கிடுறோம்.

  ReplyDelete
 14. விரைவில் போட்டிற்கான கடிதத்தையும் எதிர்ப்பார்க்கிறேன்...

  ReplyDelete
 15. வித்தியாசமான இந்தக் கடிதமே போட்டிக்கு அனுப்பியிருக்கலாமே? .... நகைச்சுவை கேட்டகரியில் செலக்ட் ஆகிடுமே...

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog