Saturday, January 26, 2013





கமல் அறிவாளி ரஜினி புத்திசாலி அது எப்படிங்க?

அறிவாளி தன் சொந்த பணம் 100 கோடியை செலவழித்து அதில் தானே நடித்து தனக்கு தானே சூன்யம் வைத்து  அழுதுகிட்டிருப்பார்

புத்திசாலி அடுத்தவனிடமிருந்து  100 கோடியை வாங்கிவிட்டு அவனின் படத்தில் நடித்து விட்டு படம்  எப்படி போனாலும் எதற்கும் கவலைப்படாமல் சிரித்து கொண்டிருப்பார்.


நிறைய படிப்பதினால், சிந்திப்பதினால் அறிவாளிகளாக இருக்கலாம் ஆனால் அறிவைமட்டும் வைத்துக் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது ஆனால் தனக்கு இருக்கும் அறிவை  வைத்து புத்திசாலிதனமாக எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்று தெரிந்தால் மட்டும் வெற்றி பெற முடியும்.


அன்புடன்
மதுரைத்தமிழன்

12 comments:

  1. உண்மைதான். இப்பதான் புரியது படம் தோல்வியுற்றாலும் அந்தப் பணத்தை திருப்பிக் கொடுத்து அடுத்த படத்தில் அந்தப் பணத்தை எடுகிற டெக்னிக் ரஜினியிடம் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. ரஜினியிடம் எல்லோரையும் தட்டி கொடுத்து அரவணைக்கும் பண்பாடு இருப்பதால்தான் அவர் இன்னும் வெற்றிக் கொடியை நட்டிக் கொண்டிருக்கிறார்

      Delete
  2. விஸ்வரூபம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் நஷ்டமாகும் பணத்தை வெகு எளிதாக ஒரு நகைச்சுவை படம் எடுத்து கமல் சம்பாதித்து விடுவார்...

    ReplyDelete
    Replies
    1. இந்த படத்தில் நஷ்டம் அடைந்தால் அவர் எழுந்து வருவது மிக கடினமே...இதில் அவர் தன்னிடம் இருந்த அனைத்து பணத்தையும் கொட்டி எடுத்து இருப்பதாக செய்திகள். அதனால் அவர் வெற்றி அடைய நாம் பிரார்த்திக்க வேண்டும்

      Delete
  3. அனாவசியமா ஒரு மனிதரை இப்படித் தாக்ககுவது எனக்கு சரியாகப் படவில்லை. கமல் காசு போட்டு படம் எடுத்தார் என்பதற்காக ரஜினியும் எடுக்க வேண்டுமென்று சொல்வது அநியாயம். அவர் சம்பாதித்தப் பணத்தைத் தானே பெங்களூருவில் முதலீடு செய்தார்? அரசியவியாதிகள் மாதிரி கொள்ளையடித்து, வெளிநாட்டில் வைத்தாரா? சிவாஜி மறைவுக்குப் பின்னர் அவரது வீடு எரிந்து அவர்கள் முதலீடுகள் இழந்து நடுத்தெருவுக்கு வந்தபோது சந்திரமுகி என்ற படத்தை எடுத்து ரஜினி அவர்களை கரை சேர்த்தார். தனது படங்கள் சரியாக ஓடாத போதெல்லாம் பணத்தை திரும்பத் தந்திருக்கிறார். அவரை வேண்டுமென்றே அவதூறு செய்வது தகாது.

    ReplyDelete
    Replies
    1. ஜெயதேவ் நீங்க தவறா புரிஞ்சு இருக்கீறீங்க... நான் கமலுக்கு சொன்னது ரஜினியாட்டம் புத்திசாலியாக பணத்தை மூதலீடு செய்து சந்தோஷமாக சிரித்து இருங்கன்னு....

      இதில் அவதூறு எங்கே வருகிறது என்று எனக்கு தெரியவில்லை முடிஞ்சா கொஞ்சம் திரும்பவும் படிக்கவும்

      Delete
    2. You dont mean to but you certainly do bring down Rajni here. As you can see Kaml fans enjoying your post! Your title should be Rajni budhdhisaali but kamal adhibudhdhisaali! :)

      The worst greediness is going after FAME!

      Kamal does all these things for obtaining more and more fame! It is a hard path. He pays a big price for his greediness!

      Delete
    3. வருண் நீங்க சொன்ன தலைப்பு நன்றாக இருக்கிறது ஆனால் பதிவிற்கு தலைப்பு வைக்கும் போது அது எனக்கு தோணவில்லை

      Delete
  4. மதுரைத் தமிழன், இப்படியெல்லாம் அரசியல்வாதிங்க மாதிரி பேசி சமாளிக்கிறது எல்லோராலும் முடியும். உங்கள் பதிவில் நேரடியா நீங்க தாக்கவில்லை, என்று தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் உள்குத்து என்று ஒன்று இருக்கிறது அதைத்தான் செய்திருக்கிறீர்கள், கமலஹாசன் படம் எடுப்பதற்கும் ரஜினிகாந்த் பெங்களூருவில் சொத்து வாங்கிப் போட்டதற்க்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? ரஜினியை வைத்து நூறு கோடிக்கும் மேல் செலவழித்து யாராவது நொடிந்து போனதாகவோ, அதைப் பார்த்து அவர் சிரித்து மகிழ்ந்ததாகவோ நீங்கள் காட்ட முடியுமா? இதையெல்லாம் புரிந்து கொள்ள முடியாத விரல் சப்பும் பாப்பாக்கள் என்று படிப்பவர்களை நினைக்க வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. நான் என் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை சொல்லிவிடுவேன் உள்குத்து பதிவு எல்லாம் நான் போடுவதில்லை. இதற்கு மேல் உங்களுக்கு என்ன சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை

      Delete
  5. ஐயோ ஐயோ அவிங்க இரண்டு பேரும் நல்லாதான்யா இருக்காங்க எவ்வளவுதான் குத்தினாலும் அது அவிங்கலுக்கு கொசு கடிச்ச மாதிரி

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.