உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, October 17, 2012

500. பதிவர்களே உஷார் உஷார் உஷார்
500.  பதிவர்களே உஷார் உஷார் உஷார்ஒரு பொழுது போக்குக்காக  வேடிக்கையாக  நான் படித்த ரசித்த பார்த்த அனுபவித்த விஷங்களை கிறுக்கி பதிவிட ஆரம்பித்த நான் இப்போது வாடிக்கையாக வாரத்தில்  5 நாட்கள் பதிவிட்டு 500 யைத் தொட்டுவிட்டேன்.  குழந்தையாக தவழ்ந்து கொண்டிருந்த நான் இப்போதுதான் நடக்க ஆரம்பித்து இருக்கிறேன் உங்களால் முடிந்தால் என்னுடன்  சேர்ந்து கைபிடித்து  அழைத்து செல்லுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்

எனது கிறுக்கல்கள் நீங்கள் படித்து ரசிக்க மட்டும்தான் . நான் சமுதாயத்தை திருத்தவோ  அல்லது புரட்சியை உண்டாக்கவோ  அல்லது சங்கம் அமைத்து தமிழை வளர்க்கவோ அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.


இந்த தளத்தின் வளர்ச்சி என்பது என்னால் ஏற்பட்டது அல்ல இங்கு வருகை தந்தவர்களால் ஏற்பட்டது. அதிலும் முக்கியமாக "சைலண்ட் ரீடர்களை" இங்கு குறிப்பிட்டு சொல்லாம். அதுமட்டுமல்லாமல் மேலும் "சிலர்" எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இங்கே தொடர்ந்து வந்து படித்து தங்களது  உள்ளத்து உணர்வுகளை  பின்னூட்டம் மூலம் உணர்த்தி  தொடர்ந்து ஆதரவை தந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரின் பெயரை தனித்தனியாக குறிப்பட்டு எழுதவேண்டுமென்று ஆசை இருந்தாலும் நேரமின்மையால்  எழுத இயலவில்லை. இருந்தாலும் எனக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் எனது இதயம்கனிந்த  நன்றியை  சொல்லிக் கொள்கிறேன்.

இவர்கள் தவிர தமிழ்மணத்திற்கும் இண்டலிக்கும் எனது தனிப்பட்ட நன்றிகள்


வலையுலகில் எனக்கென்று எந்த குழுவையும் அமைத்துக் கொள்ளாமல், வலையுலக அரசியலில் சிக்கிக் கொள்ளாமல், மதத்தை விட மனித இதயங்களை நேசித்தும் பல  விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பலருக்கும் விருப்பமான தளமாக  இன்று வரையிலும் இணையத்தில் வலம் வந்துகொண்டிருகிறது எனது தளம்
 


எனது பதிவின்  தலைப்புக்கள் சில சமயங்களில்  ஒரு "மார்க்கமாகவே இருந்தாலும்" என்றாலும்  அதில் உள் இருக்கும் விஷயம்  மிக நல்லவையாகதான் இருக்கும் என்பதற்கு எப்போதும் உத்திரவாதம் அளிக்கிறேன்

பாரில்  நிற்கும் என்னிடம்
ஒயின் கேட்கிறவர்களுக்கு
நான் திராட்சை பழ ஜுஸை பரிசளிக்கிறேன்

என்னிடம் ஒயின் கேட்பவர்களுக்கு
ஒயின் டேஸ்டும் தெரிந்திருக்கவில்லை
திராட்சை பழ ஜுஸின்  டேஸ்டும் அறியந்திருக்கவில்லை

அதானல் குறைந்தபட்சம்
அவர்களுக்கு திராட்சை பழ ஜுஸை
அறிமுகம் செய்துவைக்கிறேன்.


அவ்வளவுதாங்க.......

இறுதியாக ஒரு விஷயம் சொல்ல ஆசைப்படுறேன்.....அதற்கு முன்னால் என் மனைவி தூங்கிட்டாளா என்று பார்த்து விட்டு வருகிறேன்.......ஒரு நிமிஷம்....


அப்பாடி என் மனைவி தூங்கிட்டா. இப்ப அந்த விஷயத்தை சொல்லுறேன்
காதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல!
ஒரு முறை ஜெயித்து பார்த்தால்தான் தெரியும் தோல்வியே எவ்வளவோ பரவாயில்லை என்று!!


ஹீ..ஹீ.ஹீ  ஹீ..ஹீ.ஹீ அப்ப நான் வரட்டாங்கஅன்புடன்
உங்கள் அபிமானதிற்குரிய
மதுரைத்தமிழன்

46 comments :

 1. 500 வ்து பதிவுக்கு இனிய வாழ்த்துகள் !

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

   Delete
 2. திரும்பிப் பாருங்க ... உங்க மனைவி லேப்டாப்பை பார்த்திட்டு இருக்காங்க.. :)

  நானும் சைலண்ட் ரீடர் தான்... 500i தொட்டதற்கு வாழ்த்துக்கள்...1000 எட்டிடும் தூரம் தான்...தொடருங்க.

  ReplyDelete
  Replies
  1. எனது சைலண்ட் ரீடரான நீங்கள் வருகைதந்து உங்களது கருத்துக்களை இட்டதற்கும் வாழ்த்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

   என் மனைவிக்கு என்னிடம் பிடித்ததே நான் செய்யும் கிண்டல்கள்தான் அதனால்தான் என் மனைவியை கிண்டல் செய்து என்னால் பதிவுகள் இட முடிகிறது....

   Delete
 3. 500 வது பதிவு என்பது ஒரு இமாலய சாதனைதான்
  இது பல்லாயிரமாய்த் தொடர
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்களை போல உள்ள "சிலர்"எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இங்கே தொடர்ந்து வந்து படித்து தங்களது உள்ளத்து உணர்வுகளை பின்னூட்டம் மூலம் உணர்த்தி தொடர்ந்து ஆதரவை தந்து கொண்டிருக்கிறீர்கள், உங்களின் வருகைக்கும் ஆதரவிற்கும் வாழ்த்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

   Delete
 4. வாழ்த்துக்கள்
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

   Delete
 5. நண்பரே,

  500 விரைவில் 5000 ஆகட்டும். மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ஸ்ரீ....

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

   Delete
 6. வாழ்த்துக்கள் இந்நூறு இல்லை ஐயாயிரம் பதிவகளைத் தாண்டியும்
  உங்கள் எழத்துக்கள் வெற்றி நடை போடட்டும் .மேலும் சிறப்பான
  ஆக்கங்களை பதிவிடுங்கள் சகோதரரே .......!

  ReplyDelete
  Replies
  1. ///சிறப்பான ஆக்கங்களை பதிவிடுங்கள் சகோதரரே .......!///

   கண்டிப்பாக என் அறிவுக்கு எட்டிய அளவில் சிறந்த பதிவுகளை இட முயற்சிக்கிறேன் . உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

   Delete
 7. Replies
  1. உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

   Delete
 8. வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. எனது மனமார்ந்த நன்றிகள் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் நன்றிகள்

   Delete
 9. உங்கள் 500-வது பதிவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

   Delete
 10. machi kalakitta!! congrts! keep it up!
  from www.thottarayaswamy.net

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

   Delete
 11. கிறுக்கியே 500 பதிவா ?

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. கிறுக்குவதுதான் பதிவு கிறுக்காதது இலக்கியம் அது நமக்கு வராதுங்க
   . உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

   Delete
 12. ஐநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்....ஆயிரம் பதிவை நீங்கள் சீக்கிரம் தொட வேண்டும் !!

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

   Delete
 13. மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

   Delete
 14. அடாடா... 500 பதிவுகள் தொடர்ந்து எழுதுவது பெரிய விஷயம். 200க்கு மேல என்ன எழுத என்று விழித்துக் கொண்டிருக்கும் எனக்கல்லவா தெரியும் அதன் அருமை. என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு. தொடர்ந்து அடித்து ஆடுங்கள். கைதட்டக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ///200க்கு மேல என்ன எழுத என்று விழித்துக் கொண்டிருக்கும் எனக்கல்லவா தெரியும்

   200 காக இருந்தாலும் அது வைரம் அல்லவா. நீங்கள் எழுத்தில் இமயத்தை தொட்டவர் நான் எல்லாம் அப்ப்டியல்ல.

   . உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

   Delete
 15. அசாத்திய சாதனை.

  பாராட்டுகள்.

  சாதனை தொடர வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

   Delete
 16. ஐநுாறாவது பதிவா...!!!

  வாழ்த்துக்கள் “உண்மைகள்“
  உங்களின் மனைவிக்கும் என் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்.

  அவர்களால் தான் நீங்கள் இவ்வளவு மேலே உயர்ந்து உயர்ந்து...
  மேலும் மேலும் உயருங்கள்.
  திரும்பவும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. கல் சிற்பமாக வேண்டுமென்றால் அதன் மேல் விழும் உளியின் அடிகளை தாங்கித்தான் ஆக வேண்டும் அது போல நான் தொடர்ந்து பதிவுகள் இட வேண்டுமென்றால் அடிகளை என் மனைவியிடம் தொடர்ந்து வாங்கிதான் ஆக வேண்டும் அவரிடம் நீங்கள் வாழ்த்தியதாக சொல்லிவிடுகிறேன். அதற்கும் சேர்த்தும் இரண்டு அடிகளை வாங்கி கொள்கிறேன்.

   உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

   Delete
 17. 500வது பதிவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்...உங்க வீட்டுக்காரம்மாவுக்கும் உங்க மானேஜருக்கும் சிலை வைக்கணும்...-:)

  ReplyDelete
  Replies
  1. எனது வீட்டுகாரம்மாதான் எனக்கு பாஸும் ஆவார். நான் பதிவுகள் இடுவது படிப்பது எல்லாம் வீட்டு நேரத்தில்தான் ஆபிஸ் நேரத்தில் அல்ல

   உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

   Delete
 18. Replies


  1. உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

   Delete
 19. ஆத்தாடி 500 ஆஆஆஆஆ

  வாழ்த்துகள். உங்கள் நட்பு கிடைத்தது எனக்கு பெரிய பலம் மற்றும் மகிழ்ச்சி. எதிர்பாராமல் உதவி செய்யும் உங்கள் மனதைப் போல 1000 தொட வாழ்த்துகள் நண்பா.

  ReplyDelete
  Replies
  1. நல்ல சிந்தனையுடைய கடும் உழைப்பாளியின் நட்பு கிடைத்தற்கு நான் தான் சந்தோஷப்படணும்...நீங்க சொன்னபடி நான் எதுவும் பெரிய உதவிகள் செய்யவில்லை. என்னைவிட மிக அதிகமாக உதவி செய்யும் பதிவாளர்கள் அதிகம் ஜோதிஜி

   உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

   Delete
 20. நீங்க போடும் டிசைன்கள் நல்லாயிருக்கு, எவ்வளவு கஷ்டப் பட்டு போடுறீங்களோ தெரியலை!! நான் உங்க பதிவுக்கு புசாத்தான் வந்தேன்.

  இன்னொரு மேட்டர், அதையும் யாருக்கும் தெரியாம படிங்க.

  லேப் டாப்பை மடியில் வைக்காதீங்க [நெவர் நெவர்...........] பெட் மேலோ, கீழேயோ, டேபிள் மேலோ, வச்சி ஒர்க் பண்ணுங்க.........

  ReplyDelete
  Replies
  1. //நீங்க போடும் டிசைன்கள் நல்லாயிருக்கு, எவ்வளவு கஷ்டப் பட்டு போடுறீங்களோ தெரியலை!!///

   சில டிசைன்கள் சொந்தமாகவும் சில நெட்டில் சில படங்களை சுட்டு அதன் ஒரிஜனலை அப்படியே எனது தேவைக்கு ஏற்ற மாதிரி மாற்றி ரிமிக்ஸ் செய்து போடுகிறேன். இதற்காக மைக்ரோசாப்ட் இமேஜ் சாப்ட்வேரை பயன்படுத்துகிறேன் நான் கிராபிக்ஸ் டிசைனர் அல்ல... அவ்வள்வுதாங்க


   //லேப் டாப்பை மடியில் வைக்காதீங்க// லேப்டாப்பை மடியில் வைக்க அதற்கென இருக்கும் பேடை உபயோக்கிறேன்..அதனால் மடிக்கு எதும் டேமேகஜ் ஆகாது

   உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

   Delete
 21. 500வது பதிவுக்கு வாழ்த்துக்கள். மேலும் 1000 ஐ தொட வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

   Delete
 22. 500 க்கு வாழ்த்துக்கள்.
  கடைசியா சொன்னீங்க பாருங்க காதலைப் பத்தி! அசத்தல்.

  ReplyDelete
  Replies
  1. முரளிதரன் உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

   Delete
 23. உங்களின் கருத்துகளை ரசித்த சைலண்ட் ரீடரின், 500-வது பதிவிற்கான இனிய வாழ்த்துகள்...
  பதிவுகள் தொடரட்டும்.....

  ReplyDelete
  Replies
  1. சைலண்ட் ரீடர் திவ்யாவுக்கு உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog