Thursday, October 25, 2012




உங்கள் கணவரை நீங்கள் சொன்னபடி கேட்க வைப்பது எப்படி?

மாலை நேரத்தில் உங்கள் கணவர்  வருவதற்கு முன்னால் நன்றாக குளித்து தலையில் பூ வைத்து சேலையை நன்கு தழைய தழைய உடுத்தி  ரெடியாகி கொள்ளுங்கள். அவரின் பைக் சத்தம் கேட்டவுடன்  உடனே போய் அவர் கதவை தட்டுமுன் கதவை திறந்து புன்னகையுடன் நில்லுங்கள். அவர் வீட்டின் உள் நுழையும் போது அவர் கையில் உள்ள ஆபிஸ் பேக்கை வாங்கி வைத்துவிட்டு அவரை சேரில் உட்கார வைத்து காலில் உள்ள ஷாக்சை கழற்றி வைத்து விட்டு அவருக்கு ஒரு செல்ல முத்தம் ஒன்றை தந்துவிட்டு அவரிடம்  பாத்ரூமில் குளிபதற்கு ஏற்ற சூட்டில் வெந்நீர் வைத்திருப்பதாகவும் சொல்லுங்கள். அவர் குளித்து விட்டு வந்தவுடன் டிவியை ஆன் செய்துவிட்டு சுடான காப்பியை கொடுங்கள்..

அவர் காபி அருந்தி கொண்டு டிவி பார்க்கும் போது அவர் செல்போன் ஒலித்தால் ஒடிப் போய் அதை எடுத்து அவரிடம் கொடுங்கள். அவர் தன் நண்பர்களிடம் பேசிவிட்டு அவரின் நண்பர்கள் இரவு டின்னருக்கு வருவதாக சொன்னால் ஆஹா அப்படியா ரொம்ப சந்தோஷமாக இருக்குங்க என்று முகம் மலர்ந்து சொல்லியவாறு என்னங்க  நான் சிக்கிரமாக டாஸ்மாக் போயி உங்கள் நண்பர்களுக்கு வேண்டிய சரக்கை உடனே வாங்கி ப்ரிஜ்ஜில் வைத்து விட்டு சமைக்க ஆரம்பிக்கிறேன்.. நீங்களே சொல்லுங்க என்ன சமைக்கலாம் கேளுங்க


என்னங்க சரக்கு அடிக்கும் போது உடன் சாப்பிட மீன் வருவல் வேண்டுமா ஓகேங்க...அதன் பிறகு சாப்பிட சிக்கன் பிரியாணி வேணுமா அது ரொம்ப ஈஸீங்க.... புரோட்டா  மட்டன் குருமாவும் வேண்டுமா? ஒகே அதெல்லாம் ஒரு நொடியில பண்ணிடலாம்
நீங்க கவலைப்டாதீங்க உங்க சந்தோஷம்தான் என் சந்தோஷமுங்க

என்ன நம்ம குழந்தைகள் எங்கே என்று கேட்கிறீர்களா? உங்களை அவர்கள் தொந்தரவு பண்ணக்கூடாது என்று அவர்கள் வாயில் டேப் போட்டு ஒட்டி ஹோம் வொர்க் செய்ய சொல்லி அந்த ரூமில் பூட்டி வைத்துள்ளேன் அவங்க ரொம்ப சமத்துங்க....


நீங்க டிவி பார்த்துட்டு ரெஸ்ட் எடுங்க நான் எல்லா வேலையும் முடிச்சுடுறேனுங்க என்று சொல்லி அவருக்கு ஒரு செல்ல முத்தம் கொடுத்துவிட்டு உங்க வேலையை பாருங்க..

இந்த வேலைகளை செய்யும் போதே குழந்தைகளுக்கு இரவு உணவை கொடுத்து தூங்க வையுங்கள். அதன் பின் நண்பர்கள் வந்தவுடன் அவர்களை உபசரித்து அவர்கள் போன பிறகு இரவு ஆடையை அணிந்து பெட்ரூமில் அமர்ந்து கணவருக்காக வெயிட் பண்ணுங்கள் அவர் வந்ததும் அவர் ஆபிஸில் அவருடன் பணி புரியும் பெண்களை பற்றி விசாரித்து விட்டு என்னங்க என் தோழி ஒரு ஸ்பெஷல் சீடி கொடுத்தாள் என்று சொல்லி 'அந்த' ஸ்பெஷல் மூவியை போட்டு பார்த்துவிட்டு இரவை இன்பமாக கழித்து சந்தோசமாக இருங்கள் இப்படி எல்லாம் செய்தால்  உங்கள் கணவர் நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்பார்.


நாங்கள் பூரிக்கட்டையை கையில் எடுத்தால்  வாயை மூடிக் கொண்டு நாங்கள் சொல்வதை செய்வார்கள் என்று நீங்கள் சொல்லவருவது எனக்கு புரிகிறது. இது பூரிக்கட்டையை கையில் எடுக்க தெரியாதவர்களுக்காக மட்டுமே..


ஹீ..ஹீ..ஹீ..ஹீ..ஹீ..ஹீ.. அப்ப நான் வரட்டுமா...




அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழனின் மொக்கைகள் நீங்க படிக்க

8 comments:

  1. முதலில் மிகை என்றாலும் முடிவு அருமை!நடை நன்று!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா

      Delete
  2. இப்படி ஒரு நாள் செய்தாலே
    கணவன்மார்கள் என்னவோ ஏதோவென்று
    எனப் பயந்து போய் ஒழுங்காக இருப்பார்கள்
    என நினைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. கணவர் சொல்லும் ஒரு சொல்லை இவர்கள் தட்டாமல் கேட்டாலே இன்று ஏதோ வாழ்க்கையில் அதிசயம் நேர்ந்தது என்று சொல்லி சொல்லி மாய்ந்துபோவார்கள்

      Delete

  3. நாங்கள் பூரிக்கட்டையை கையில் எடுத்தால் வாயை மூடிக் கொண்டு நாங்கள் சொல்வதை செய்வார்கள் என்று நீங்கள் சொல்லவருவது எனக்கு புரிகிறது.

    புரிந்தால் சரி. எனக்கு முதல் வேலை உங்க பதிவுகளை உங்க வீட்டம்மாவிற்கு படித்து காண்பிக்கவேண்டும்.

    ReplyDelete
  4. இதையெல்லாம் மனைவிய சொல்ல வைக்கறது எப்படின்னு ஒரு பதிவு போடுங்க சார்!

    ReplyDelete
  5. இப்படில்லாம் உங்க வூட்டம்மா நடக்கனும்ன்னா அவங்ககிட்ட இதமா பதமா சொல்லுங்க(பூரிக்கட்டையை ஒளிச்சு வெச்சுட்டு) எங்ககிட்ட ஏன் சொல்றீங்க சகோ.., என் ஆளு பூரிக்கட்டை எடுக்காமலே அடக்கம் ஒடுக்கமாத்தான் இருக்கார்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.