படிக்காதீங்க அப்படியே படிச்சாலும் சிரியாய் சிரிக்காதிங்க
(எச்சரிக்கை
உங்கள் வாய் சுளுக்கி கொண்டால் நான் பொறுப்பு அல்ல )
என்னங்க அமெரிக்காவை
கண்டுபிடிச்சது கொலம்பஸ்-ன்னு தெரியும், ஆனா அமெரிக்காவை தொலைச்சது யாருன்னு உங்க
அம்மாகிட்ட கேட்டேனுங்க? அதுக்கு அவங்க என்னை சரியான்ன லூசுன்னு
எப்ப பாத்தாலும் சொல்லுறாங்க
அடியே செல்லம்
உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே! வருத்த படாதே! ஃபீல் பண்ணாதே! உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு திருப்பி
கேளடி
சரி சரி இந்த கம்பியூட்டரில் உள்ள கற்பூரம் படத்தை ஸ்மெல் பண்ணு...
என்ன உனக்கு கற்பூர வாசனை அடிக்கல்லையா? அதுசரி,
சும்மாவா சொன்னாங்க "கழுதைக்கு தெரியுமா கற்பூர
வாசனை!"
என்ன நக்கலா உங்களுக்கு
தெரியுமா மண்டையில போடுறது
DYE... மண்டைய போட்டா DIE...!! ஆனா நான் உங்க மண்டையில
ஒரு போடு போட்டா அப்ப தெரியும்
இந்த பேச்சுக்கு
மட்டும் குறைச்சல் இல்லைடி
...பாம்பாட்டி பாம்பைக் காட்டி பொழப்பு நடத்றான். குரங்காட்டி வித்தை காட்டி பொழப்பு நடத்றான். நீ மட்டும்
எப்படி பல்லைக் காட்டியே
பொழப்பை ஓட்டுறடி
நீங்க மட்டும்
என்ன சாதிச்சிட்டீங்க
? மனுஷனாப் பிறந்தா வாழ்க்கையில ஏதாவது பெரிசா சாதிக்கணுமுங்க...
ஹீ. ஹீ நல்லவேளை…நான் குழந்தையாகத்தான் பிறந்தேன்டி
ஆமா எப்ப பாருங்க
இப்படி அச்சு பிச்சுன்னு பேசறதே உங்க பொழப்பா போச்சு
ஏய்ய் உனக்கு வாய்
ரொம்ப நீளமாய் போய்யிடுச்சு நீ அடி வாங்கி சாகப் போற...அநாவசியமா!
எனக்குள்ள தூங்கிகிட்டு இருக்கிற மிருகத்தை எழுப்பாத! தாங்க மாட்ட!.
அட போங்க பூனைக்குட்டிக்கு
எல்லாம் நான் பயப்பட மாட்டேன்!. அதுக்கு வேற ஆளைபாருங்க
அப்போது வீட்டுக்குள்
நுழைந்த மாமா என்ன மாப்பிள்ளை யாரை சாக அடிக்கப் போறீங்க...
இல்ல மாமா வர வர
உங்க பொண்ணுக்கு வாய் நீளமாய் கொண்டே போகிறது மாமா
என்னம்மா இது மாப்பிள்ளைகிட்ட
நல்லபடியா நடந்துக்க கூடாதா
இல்லைப்ப அவர பற்றி
உங்களுக்க் தெரியாதுப்பா நேற்று என் சாப்பாட்டுல விஷத்தை வைக்க பார்த்தாருப்பா
என்ன மாப்பிள்ளை
இது இது உண்மையா
?
அப்புறம் என்ன
மாமா தினமும் காலையில் உப்புமாவா செஞ்சி என்னை அவ கொல்லுறதுமட்டும் சரியா மாமா
மாப்பிள்ளை கல்யாணத்துக்கு
முன்ன சாப்பாடு கிடைக்காம கஷ்டப்பட்டேளே அது உங்களுக்கு மறந்துடுச்சா
மாமா கல்யாணத்துக்கு
முன்ன சாப்பாடு கிடைக்காம கஷ்டப்பட்டதுதென்னவோ நிஜம்தான் ஆனா இப்ப என்னோட பிரச்சனையே 'நல்ல சாப்பாடு
கிடைக்காம கஷ்டப்படுறதுதான் மாமா
அப்பா பாத்தீங்களாப்பா
அவர் பேசுறதை கொஞ்சம் அவரிடம் சொல்லி வைங்கப்பா நான் யாருடைய பொண்ணு என்று
சரிம்மா கோவிச்சுக்காதே
மாப்பிள்ளை மிக தங்கமானவரம்மா அவரை
கணவராக அடைய நீ "கொடுத்து வைத்தவள்" அம்மா
மாமா ...உங்ககிட்ட
வரதட்சணை வாங்கியதை இப்படி சந்தர்ப்பம் கிடைக்கும் போது நைசா குத்திக் காட்டுறிங்களே
மாமா
இல்லை மாப்பிள்ளை
நான் உங்களை குத்தி காட்ட்டுவேனா நாம அப்படியா பழகிவருகிறோம்.
ஒகே மாமா மன்னிச்சிக்கோங்க...ஆமா நெற்றியில
என்ன விபூதி கோயிலுக்கு போயிட்டு வந்தீங்களா ?
ஆமாம் மாப்பிள்ளை
கோயிலுக்கு போயிமாமி பேருல ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வந்தேன்
அது ஏன்மாமா எப்ப
பாத்தாலும் மாமிக்கு பேருக்கு மட்டும் அர்ச்சனை பண்ணுறேள்
மாப்பிள்ளை மாமி
நான் வீட்டுல இருக்கிற போதெல்லாம் எனக்கு அர்ச்சனை பண்ணிக்கிட்டே இருப்பா அதுக்கு நன்றி
கடனாகத்தான் நான் கோயிலுக்கு போகும் போது அவ பேருல அர்ச்சனை பண்ணுறேண் ஹீ.ஹீ.ஹீ...
மாப்பிள்ளை நான்
கோயிலுக்கு போகும் போது உங்கள் இருவரின் ஜாதகத்தை எடுத்து போனேன் அங்குள்ள குருக்கள்
அதை பார்த்து விட்டு ஜோசியம் சொன்னார் நீங்கள் இருவரும் நீண்டகாலம் சேர்ந்து வாழ்விர்கள்
என்று அதில் இருப்பதாக சொன்னார்.
அப்படியா மாமா
அவரிடம் அதற்கு ஏதும் பரிகாராம் இருக்குதா என்று கேட்டு வந்தீர்களா?\
மாமா ஙே என விழித்தார்.... அதன்
பிறகு கொஞ்சம் தெளிவு அடைந்து தன் பெண்ணிடம் அம்மா கொஞ்சம் குடிக்க வெந்நீர் கொடும்மா
என்றார்
எதுக்குமாமா தீடிரென்று
வெந்நீர் குடிக்க ஆரம்பிச்சுட்டிங்க?
அதா மாப்பிள்ளை
ஊரெல்லாம் மூளை காய்ய்சல் பரவுதாம் அதனால் ஜாக்கிரதையா இருக்கலாமென்றுதான். தன் பெண்ணிடம்
அம்மா மாப்பிள்ளைக்கும் இனிமே வெந்நீரே குடிக்க கொடும்மா....
அப்பா அதெல்லாம்
மூளை உள்ளவங்கள் மட்டும் தானாப்பா கடைபிடிக்க வேண்டும் அவருக்கெல்லாம் அது தேவையில்லப்பா.
சரி சரி ரொம்ப
பேசாதே வாயை மூடு...
அதுசரி இரவு டின்னருக்கு என்ன பண்ணி இருக்கே...
உங்களுக்காக.....ஒரு
டம்ளர் விஷம்!... ஓ....அப்படியா அப்ப நீயே அதை சாப்பிட்டு சீக்கிரம் படுத்துக்கோ....நாங்க ரெண்டு பேரும் வெளிய சாப்பிட்டுகிறோம்..நான் வர
கொஞ்சம் லேட்டாகும்
மாப்பிள்ளை வெளியே
போறோமா ?
இன்று மழை வரும்னு செய்தியில சொன்னாங்க. .. நீங்க
கேட்டீங்களா மாமா? .. இல்ல மாப்பிள்ளை . நான் கேக்கல. அவங்களாதான் சொன்னாங்க...
அய்யோ மாமா இன்னும்
நாம சரக்கு அடிக்க கூட ஆரம்பிக்கல அதுகுள்ள உளற ஆர்ம்பிச்சுட்டீங்களா
என்னங்க நீங்க
ரெண்டு பேரும் அந்த கருமம், கண்றாவியா எப்படித்தான் குடிக்கிறீங்களோ?
அடியே இப்பவாவது புரிஞ்சுக்கிட்டியே,
ஏதோ நாங்கள்லாம் ஜாலியா குடிச்சுட்டுருக்கோம்னு நினைத்தாயா?!
@பாரில் மாமா என் மனைவி எனக்கு அடங்கி ஒடுங்கி
நடக்க நீங்க தான் சாமியார் கிட்ட போய் எனக்கு அரு ள் புரியஸ் சொல்லுங்க
.....
அது முடியாமத்தான் அவரே சாமியாராகி விட்டார் மாப்பிள்ளை ஹீ.ஹீ. ஹீ.ஹீ.
அது முடியாமத்தான் அவரே சாமியாராகி விட்டார் மாப்பிள்ளை ஹீ.ஹீ. ஹீ.ஹீ.
யோவ் பார் டெண்டர்
சினிமா பாட்டுபோட்டுய்யா"
"
சரி சார் எந்த
படத்துல இருந்து?"
யோவ் அதுதான் சினிமா
படத்துல இருந்துதான் என்று சொன்னேனே புரியலையா
"அய்யோ!" இவனுங்க ரொம்ப குடிச்சிருக்காங்க
அதனால இப்ப THE END!!
அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்
(நான் படித்த
நகைச்சுவைகளை கலந்து எனது வழியில் இங்கே தந்து இருக்கிறேன். படித்து
சிரியுங்கள். சிரிப்பு வரவில்லையென்றால் நமது இந்திய தலைவர்களின்
பேச்சை கேளுங்கள் அது மிக நகைச்சுவையாக இருக்கும்)
இந்த பேச்சுக்கு மட்டும் குறைச்சல் இல்லைடி ...பாம்பாட்டி பாம்பைக் காட்டி பொழப்பு நடத்றான். குரங்காட்டி வித்தை காட்டி பொழப்பு நடத்றான். நீ மட்டும் எப்படி பல்லைக் காட்டியே பொழப்பை ஓட்டுறடி...
ReplyDeleteஓவராத்ததான் போறீங்க இருங்க இருங்க வந்து உங்க வீட்டம்மாவிடம் சொல்லிட்டு வரேன்.
தாராளமாக வாங்க ..வந்து சொல்லி நீங்களும் வாங்கி கட்டி கொள்ளுங்க
Deleteவித்தியாசமான நகைச்சுவை பகிர்வு...சூப்பர்!
ReplyDeleteவருகை தந்தற்கும் படித்து ரசித்தற்கும் மிக நன்றிகள்
Deleteபதிவில் நிறைய ஜோக்குகளை நீங்கள் அழகாக உரையாடலில் கோர்த்துத் தந்திருந்த விதத்தை ரசித்துச் சிரித்துக் கொண்டே வந்தேன். கடைசியாக நீங்கள் தந்திருக்கும் பின்குறிப்பு அதுவரை படித்த ஜோக்குகளையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விட்டது. இன்னும சிரிச்சுட்டே இருக்கேன். ஹா... ஹா...
ReplyDeleteவருகை தந்தற்கும் படித்து ரசித்தற்கும் மிக நன்றி. அப்ப நீங்களும் நம்ம மாதிரி ஸாரி கேட்கிற ஆளுதானா ஹீ.ஹீ
Deleteஇதையெல்லாம் வீட்டில் மேடம் படிக்கிறாங்களா? அப்புறம் எப்படி இன்னமும் உசிரோட இருக்கீங்க??!!
ReplyDelete\\மாமா கல்யாணத்துக்கு முன்ன சாப்பாடு கிடைக்காம கஷ்டப்பட்டதுதென்னவோ நிஜம்தான் ஆனா இப்ப என்னோட பிரச்சனையே 'நல்ல சாப்பாடு கிடைக்காம கஷ்டப்படுறதுதான் மாமா\\ Same blood.
எங்க வீட்டு மேடம் ரொம்ப பிஸி யாரவது எங்கள் குடும்ப நண்பர்கள் படித்துவிட்டு போனில் பேசும் போது உங்களை கிண்டல் பண்ணி அல்லது மிக நல்ல பதிவு எழுதி இருக்கிறார் என்று சொன்னால் மட்டுதான் வந்து எட்டிபார்பார்
Deletekalakkal
ReplyDeleteநன்றி மதுரைக்காரரே
Deleteஹா... ஹா... செம...
ReplyDeleteமுடிவில் தத்துவம் - மாறி விட்டதை நினைத்து ஹா... ஹா...
என்னங்க கல்யாணம் என்று ஆகிவிட்டாலே கடைசியில் நாம் பெண்களிடம் சரண்டர் ஆகிவிடுவதுதானே நலம். நாம் நன்றி சொல்ல வேண்டிய ஆள் யாருன்னா அந்த ஸாரி என்ற வார்த்தையை கண்டுபித்தவர்தான். அவர் மட்டும் அதை கண்டு பிடிக்கலைன்னா பூரி கட்டையால நாட்டுல எத்தனை ஆண்கள் உயிர் பலியாகி இருக்குமோ?
Delete//சிரிப்பு வரவில்லையென்றால் நமது இந்திய தலைவர்களின் பேச்சை கேளுங்கள் அது மிக நகைச்சுவையாக இருக்கும்///
ReplyDeleteக்ளாஸ்!
நன்றி புரிந்தது ரசித்தற்கு
Deleteஹா ஹா ஹா ஹா சிரிச்சி கண்ணுல தண்ணி வருதுய்யா.....
ReplyDeleteஅருவா தூக்கிற ஆளையும் சிரிக்க வைச்சுடுச்சா....
Deleteஙே.........
ReplyDeleteஙே.........
Deleteஅர்ச்சனை சிரிப்போ சிரிப்பு.
ReplyDeleteஅனைத்துமே டாப் சிரிப்ப்ஸ்.
நன்றி !
அடுத்த பதிவுக்கு தலைப்பு கொடுத்திட்டீங்களே
Deleteநல்ல நகைச்சுவைக் குவியல்.
ReplyDeleteரசித்து படித்தற்கு நன்றி
Deleteஒரு நகைச்சுவை நாடகம் போதலாம்னு இருக்கேன் உங்க மேட்டரை சுட்டு, நீங்க அனுமதி கொடுத்தா.
ReplyDeleteநான் நாளு இடத்தில் படித்தது கேட்டதை வைத்துதான் கோர்வையாக தொடுத்து எழுதியுள்ளேன். அதுமட்டுமல்லாமல் இதை நாடகமாக போட்டு நாளு பேரை சிரிக்க வைக்க நீங்கள் முடிவு செய்திருப்பதால் மிக தாராளமாக எடுத்து கொள்ளுங்கள். உண்மையில்லேயே நீங்கள் நாடகம் போட்டால் ஒரு வேளை வீடியோ எடுத்தால் என்னிடம் பகிரவும் மிக சந்தோஷம் அடைவேன்.
Deleteஹ...ஹ...ஹ...ஹ...ஹ...ஹ...ஹா!
ReplyDeleteநகைச்சுவைக்கு எடுத்துக் காட்டான பதிவு! படித்த போதே இடைவிடாமல் சிரித்தேன்!
ReplyDeleteநல்ல நகைசுவை பதிவு..படித்து முடியும் வரையில் சிரித்து கொண்டே இருந்தேன்...இன்னும் நிறைய நகைசுவையை எழுதுவீங்கன்னு நம்புறேன்...வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
நல்ல நகைச்சுவை பகிர்வு.
ReplyDelete