Wednesday, October 24, 2012



கரண்ட் இல்லாத நேரத்தில் நீங்கள் என்ன என்ன செய்யலாம்?


உங்கள் வீட்டில் கண்ணாடி இருந்தால் அதன் முன் நின்று அழுகலாம் அல்லது சிரித்து பார்க்கலாம்.

சாமி முன்னால் நின்று ஏன் இப்படி எங்களுக்கு நடக்கிறது என்று கேட்டு கதறி அழலாம்.

விசிறி இருந்தால் உங்களுக்கு பிடித்தவர்களுக்கு விசிறி கொண்டு விசிறி விடலாம்.

மாமியார் கூட நல்லா சண்டை போடலாம்.

பக்கத்துவீடுகளில் போய் வம்பு பேசலாம் கரண்டு வந்த பின் அதையே பதிவாக போடலாம்


இரவு நேரத்தில் கரண்டு இல்லையென்றால் அந்த நேரத்தில் மெழுகு வத்தி வெளிச்சத்தில் குழந்தைகள் கூட எதையாவது தூக்கி எறிந்துவிளையாடலாம் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி பிடிக்காத மாமியார் மீது அல்லது கணவன் மீது தூக்கி ஏறிந்து அவர்களைப் காயப்படுத்தலாம்

இரவு நேரமாக இருந்து கரண்டு இல்லாமல் இருந்தால் மனைவியின் அழகை தைரியமாக  வர்ணிக்கலாம்.

உங்கள் குழந்தைகள் படிப்பில் முதன்மையாக வர பார்வையற்றோர் பள்ளிகூடத்தில் சேர்க்கலாம்.(பிரெய்லி முறையில் படிக்கலாம்)


கல்யாணம் ஆன இளம்தம்பதிகளாக இருந்தால் அதிலும் இந்த கால நாகரிக தம்பதிகளாக இருந்தால் கரண்டு போன சமயத்தில் டேபிளில் இரண்டு மெழுகு வர்த்தியை ஏற்றி வைத்து தோட்டத்தில் மலர்ந்த மலரை கொத்தாக பறித்து ஒரு கண்ணாடி ஜாரில் வைத்து ஆளுக்கொரு க்ளாஸ் ஒயின் எடுத்து அருந்தியாவாறு மீதி இரவை ரொமண்டிக்காக கழிக்கலாம்


அன்புடன்
மதுரைத்தமிழன்

12 comments:

  1. இத்தனையும் செய்யும் உங்களுக்கு பாராட்ட வார்த்தைகள் வரவில்லை...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. இப்படி எல்லாம் செய்ய ஆசைதான் ஆனா பவர்கட்டே ஆகமாட்டுங்குதே....நண்பரே

      Delete
  2. இதை காப்பி எடுத்து மதுரையில் விநியோகம் செய்யலாம்.சூப்பர் பதிவு.

    ReplyDelete
    Replies
    1. மதுரைய்காரங்க பாவங்க அவுங்கள விட்டுடுங்க

      Delete
  3. ஓ.... இப்படியெல்லாம் தான் நீங்கள் செய்கிறீர்களா...?

    அப்பவே உங்க மாமியார் சொன்னாங்க...
    கரண்ட் போயிட்டா என் மேல கல்லு கட்டையெல்லாம் வந்து விழுது என்று.
    அது உங்க வேலைதானா...
    இப்போ எங்களுக்குப் புரிஞ்சி போச்சி.

    ReplyDelete
    Replies
    1. //அது உங்க வேலைதானா.//

      அது என் மாமனார் வேலைய்ங்க அவரு ரொம்ப நல்லவரு கல்லை மாப்பிள்ளை எடுக்க சந்தர்பம் தர மாட்டாருங்க

      Delete
  4. ஆஹாஹா... எத்தனை அருமையான யோசனைகள். சொன்ன உமக்குப் பரிசாக தமிழகத்தின் தென் கோடியில் ஒரு மாதம் தங்குவதற்கு ஏற்பாடு செய்து விடலாம். சரிதானே...

    ReplyDelete
    Replies
    1. //தமிழகத்தின் தென் கோடியில் ஒரு மாதம் தங்குவதற்கு ஏற்பாடு செய்து விடலாம். சரிதானே...//
      மறக்காம ஒரு பெரிய ஜெனரேட்டரை வைக்க ஏற்பாடு செய்துவிடுங்கள் நண்பரே

      Delete
  5. வித்தியாசமான யோசனைகள்! நல்ல நகைச்சுவை பதிவு!

    ReplyDelete
  6. ஆண்களுக்கு, பெண்களுக்குன்னு தனித் தனியா போட்டிருந்தா தேவலை. மிக்ஸ் பண்ணியதால லைட்டா குழம்பிடுச்சு!!

    ReplyDelete
    Replies
    1. ஸ்மார்ட்டான உங்களுக்கே குழப்பமா?

      Delete
  7. ரூபாய்க்கு நாலு ஐடியா வரும் போல இருக்கே ...ஐடியா அய்யாசாமிக்கு !
    நீங்க வேற அப்போ தான் தெரியுது பக்கத்து வீட்டுல
    ஆளுங்க இருக்காங்களா இல்லையான்னு ...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.