Friday, October 19, 2012



திருநெல்வேலி இருட்டடி அல்வா கடைக்கு ஜெயலலிதாவால்  பிரச்சனையா?


தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி இருட்டடி அல்வா கடை அல்வாவிற்கு உலகப் புகழ் பெற்றது என்பதை எல்லோரும் அறிவார்கள். அந்த கடைக்கு அதிமுகவின் திறமையில்லாத ஆட்சியினால் அந்த கடை மிக பிரச்சனைக்குள்ளாகிவருகிறது.பல்லாண்டு காலமாக அவர்கள் எடுத்து வந்த நல்ல பெயர் இப்பொது கெட்டு வருகிறது. அதற்கு காரணம் தமிழக அரசாங்கம்தான் என்ரு படித்தவர்கள் மத்தியில் தீயாக செய்தி பரவி வருகிறது.

இப்போது திருநெல்வேலியில் யாரு போய் இருட்டடி கடை எங்கே இருக்கிறது சொல்லுங்கள் நாங்கள் அங்கே சென்று அல்வா வாங்க வேண்டுமென்று கேட்டால் எல்லோரும் எங்க கடைதான்  இருட்டடிக்கடைதான் என்று சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். விஷயம் தெரிந்தவர்கள் கேட்கும் போது இந்த ஆட்சியில் எங்கள் கடையில் கரண்ட் இல்லாததால் இதை நாங்களும் எங்கள் கடையை இருட்டடி கடைதான் என்று கூறிவருகிறோம் இதில் என்ன தவறு என்று கேட்கிறார்கள்.அவர்கள் சொல்வதும் நீயாம்தானே?????


இந்த பிரச்சனையை ஜெயலலிதா அவர்களால்தான் தீர்க்க முடியும் என்று நான் நினைக்கிறேன் . அப்ப நீங்க என்ன நினைக்கிறீங்க என்பதை முடிந்தால் சொல்லவும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : என் நண்பர் ஒருவர் அனுப்பிய ஜோக்கை எனது வழியில் மாற்றி  நக்கல் பதிவாக மாற்றியுள்ளேன்

7 comments:

  1. நல்லா கெளபுரீக பீதியை

    ReplyDelete
  2. அருமையான கான்செப்ட்!! அந்தக் கடை பேரு "இருட்டுக் கடை". அவங்க பல்பு எல்லாம் போட்டு பார்த்திருக்காங்க, வியாபாரம் படுத்திடுச்சாம், அப்புறம் பழையபடியே பழைய விளக்குகளோட கடையை செமி இருட்டா வைக்க ஆரம்பிக்க மீண்டும் வியாபாரம் ஓஹோன்னு ஆயிடிச்சாம். இப்போ, துக்கு போட்டியா எல்லாமே இருட்டுக் கடையாப் போச்சு!!

    ReplyDelete
  3. அல்வா கொடுக்க நினைத்தால் அப்படித்தானாம்.

    ReplyDelete
  4. எல்லாக் கடையுமே இப்போ இருட்டுக் கடை ஆயிட்டதால எது இருட்டுக் கடைன்னு கண்டுபிடிச்சு அல்வா வாங்க முடியலையா... நல்ல டமாஸு!

    ReplyDelete
  5. நீங்கள் சொல்வது சரிதான்
    தமிழ் நாட்டில் இப்போது
    எல்லா கடையும் இருட்டுக் கடைதான்
    அருமையாக வித்தியாசமாக யோசிக்கிறீர்கள்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. மின்சாரம் இல்லாததால் அலுவலகத்தில் பெரும்பான்மையான நேரம் வேலை நடப்பதில்லை. பணியாளர்களின் வேலை பளுவை குறைத்த அம்மாவின் ஆட்சிக்கு கோடானு கோடி நன்றி ஏசப்பா கோடானு கோடி நன்றி!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.