சமைக்க தெரியாத ஆண்கள் எளிதாக சமைக்க & அசத்த அற்புத வழிகள் (பெண்களும் முயற்சி செய்யலாம்)
கணவரை அசத்தவிரும்பும் பெண்களும் (அப்படி ஒரு பெண் இருந்தால்) இதை பின்பற்றாலாம்.
இந்த காலத்தில் ஆண்களுக்கு எது தெரிதோ இல்லையோ கண்டிப்பாக சமைக்க தெரிந்து இருக்க வேண்டும். இது பல சமயத்தில் உபயோகமாக இருக்கும். கல்யாணம் ஆன மனைவி நல்லா சமைப்பா என்று மட்டும் கனவு காணாதீர்கள் இந்த காலப் பெண்கள் வாழ்க்கையில் நுழையாத ஒரு இடம் இருந்தால் அது கிச்சனாகதான் இருக்கும். இந்த காலப் பெண்களுக்கு இரண்டு மட்டும் நல்லா தெரியும் ஓன்று கணவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆர்டர் போடுவதும் இரண்டு உணவை எந்த ஹோட்டலில் ஆர்டர் போடவேண்டுமென்றும் தெரியும்.
அதனால்தான் வருங்காலத்தில் ஆண்கள் கஷ்டப்படக் கூடாது என்று மிக எளிதாக எப்படி சமைக்கலாம் & அசத்தலாம் என்று இங்கு பார்ப்போம்.
முதலில் சாத வகைகள்
தண்ணியை கொதிக்க வைத்து அதில் அரிசியைப்போட்டு உப்பு இல்லாமல் வடித்து கொட்டினால் அது வெறும் சாதம். அந்த சாதம் குழைந்து போனால் அதில் மிளகு, இஞ்சி, மஞ்ச தூள் , மிளகாய் போட்டு ஒரு கலக்கு கலக்கி வைத்தால் அதுதாங்க வெண்பொங்கல் . ஆனால் இந்த மிளகு, இஞ்சி, மஞ்ச தூள் , மிளகாய்க்கு பதிலாக சர்க்கரைப்பாகு முந்திரிபருப்பு, நெய், உலர் திராட்சை போட்டு கிளறி இறக்கி வைத்தால் அதுதாங்க சர்க்கரைப் பொங்கலுங்க...
குழையாமல் வந்த வெள்ளை சாதத்தில் கொஞ்சம் புளியை கொதிக்க வைத்து அதில் கடலையும் காய்ந்த மிளகாயும் போட்டு கிளறினால் அதுதாங்க புளிசாதம்
புளிக்கு பதிலாக லெமன் ஜூஸ் ஊற்றி கிளறினால் அதுதாங்க லெமன் சாதம்.
குழையாமல் வந்த வெள்ளை சாதத்தில் சிக்கனை உப்பு உறைப்பு போட்டு வேகவைத்து கொஞ்சம் நெய் ஊற்றி ஒரு கிளறி கிளறிவைத்தால் அது சிக்கன் பிரியாணி சிக்கனுக்கு பதிலாக எந்த விலங்குகளை போட்டால் அந்த விலங்கு பிரியாணி என்று அழைக்கலாம்.
குழம்பு வகைகள் :
துவரம் பருப்பு அல்லது பாசிப்பருப்பு போட்டு அதில் உங்களுக்கு பிடித்த காய்களை போட்டு சிறிது மஞ்சள் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வைத்தால் அதுதாங்க சாம்பார்
மேலே சொன்ன முறையில் காய்கறியை மட்டும் போடாமல் நிறைய தண்ணிர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால் அது பருப்பு ரசம். பருப்பை போடாமல் மிளகு சேர்த்து இறக்கினால் மிளகு ரசம், தக்காளி போட்டால் தக்காளி ரசம், லெமன் ஜுஸ் சேர்த்து லெமன் ரசம் அவ்வளவுதாங்க
புளிக்குழம்பு அல்லது வற்றல் குழம்பு
பருப்பு எதும் போடாமல் பூண்டு வெங்காயம் போட்டு கொஞ்சம் புளி அதிகம் சேர்த்து கொஞ்சம் கெட்டியாக வைத்தால் அதுதாங்க புளிக்குழம்பு அதில் கொஞ்சமாக சுண்டைக்காய்,அல்லது மிளகு தக்காளி போன்ற வத்தல் போட்டு கருக்கி கருப்பு நிறத்தில் வந்தால் அது வத்தல் குழம்பு.
அடுத்தாக நான் சொல்லித்தருவது பாயசம் காபி டீ போடும் முறை
தண்ணியையும் பாலையும் கொதிக்க வைத்து அதில் சுகர் சேர்த்து காபி பொடி போட்டால் காபி, டீ தூள் போட்டால் டீ. இந்த காபி டீ தூளுக்கு பதிலாக சுகர் சிறிது அதிகம் சேர்த்து அதில் சேமியா அல்லது துவரம் பருப்பு போட்டு இறக்கினால் அதுதாங்க பாயசம்
பாத்திங்களா மக்களே சமைப்பது எவ்வளவு எளிது ஆனால் இது பெரிய கம்பசூத்திரம் போல பொண்னுங்க அலட்டி பீலாவுடுறாங்களே அதுதாங்க தாங்க முடியல....... சரிவுடுங்க மக்கா நான் சொன்ன இந்த முறைகளை பயன்படுத்தி முதலில் உங்களுக்கு பிடிக்காதவர்களுக்கு அடிக்கடி சமைத்து போட்டுபாருங்க அப்புறம் உங்களூக்கு பிடித்தவங்க வரும் போது அதுதானுங்க உங்க மனைவி வரும் போது அருமையாக சமைப்பீங்க ( அது யாருப்பா மனைவியை பிடித்தவங்கன்னு இந்த மதுரை சொல்லுறான்ன்னு சவுண்டவுடுறது...அப்படி சொன்னாதான் மக்கா ஏதோ நாம் வீட்டுகுள்ள தூங்க முடியும் இல்லைன்னா கார் காராஜ்லதான் தூங்கணும் அதுதான் இப்ப நம்மபளை புரிஞ்சுரீப்பீங்க)
அப்ப நான் வரட்டா?
அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்
அட ... நம்ம வீட்டுல சாதம் குழைந்து போனா இதையெல்லாம் செய்யச் சொல்றேனுங்க. (அடி விழுந்தா நீங்க தான் பொறுப்பு) :)
ReplyDeleteநான் கொடுத்த குறிப்பு எல்லாம் நீங்க் செய்யுறதுக்குங்க ....
Delete//இதையெல்லாம் செய்யச் சொல்றேனுங்க//
உங்களுக்கு ரொம்ப துணிச்சலுங்க...வாழ்க்கையிலே ரொம்ப ரிஸ்க் எடுக்குறீங்க
நீங்க பண்ணுற தப்புக்கு நான் எப்படி பொறுபேற்க முடியுமுங்க
//இந்த காலப் பெண்களுக்கு இரண்டு மட்டும் நல்லா தெரியும் ஓன்று கணவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆர்டர் போடுவதும் இரண்டு உணவை எந்த ஹோட்டலில் ஆர்டர் போடவேண்டுமென்றும் தெரியும்//.
ReplyDeleteநீங்க அனுபவத்துல சொல்றிங்கள இல்ல கேள்விப்பட்டத சொல்றிங்களநு தெரியல, ஆனா இது உண்மைங்கோவ்....
சார் நான் என்ன முட்டாளா என் அனுபவங்கள் என்று சொல்லிவீட்டுல வாங்கிகட்டிகிறதுக்கு அதுதானால இதை நான் கேள்விபட்ட அனுபவங்கள் என்று சொல்லி தப்பிகிறேங்க
Deleteநல்ல குழைவான சமையல் டிப்ஸ்.
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி
Deleteஉங்க வீட்டுக் காரம்மா தினமும் பண்றதை குறிப்பெடுத்து பதிவு போட்டுட்டீங்கன்னு மட்டும் தெளிவா தெரியுது!! why blood, same blood.
ReplyDeleteஅப்படியே இதையும் நோட் பண்ணிக்கோங்க. நீங்க வச்ச சாம்பாரை பத்திரத்தில் மேலே முதலில் எடுத்தால் அது ரசம், அடுத்து போகப் போக நடுவில் சாம்பார், கீழே இருப்பது கூட்டு.
எங்க வீட்டுகாரம்மா தினமும் ஆர்டர் போடுறதைதாங்க குறிப்பா போட்டுருக்கேன்
Deleteஉங்க குறிப்பைபடித்தேன் நீங்களும் என்னப்போல ஒரு கிச்சன் கில்லாடி என்று அறிந்து கொண்டேன்.. நீங்கதான் இப்ப நம்ம கட்சி
சமைக்குறது இவ்வளவு ஈசியா , தெய்வமே நீங்க எங்கேயோ போய்ட்டிங்க இவ்வளவு நாள் நீங்க எங்கே இருந்திங்க ,
ReplyDeleteசமையல் கலை வெகு சுலபமாகிய மருதக்கார்கு எல்லாரும் ஒரு ஒ போடுங்க பார்க்கலாம் .
ஏன்னாய்யா என் மேலே இந்த வெறுப்பு என்னை தெய்வமாக்க்கி போட்டோல போட்டு மாலை போடுற ஆசை நான் இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்து இந்த மாதிரி மொக்கை பதிவுகள் போட்ட்டு இந்த சமுதாயத்தையே மொக்க்கை சமுதாய மாக்க ஆசை படுறேன் அதை கெடுத்துடாதீங்க
Deleteyou are appointed as the chief cook of the excellent HOTEL
ReplyDeleteJBS
ஸ்டார் ஹோட்டலில் சமைக்கும் ஆட்களை விட நல்லா சமைக்கும் திறமௌ உண்டு ஸ்டார் ஹோட்டலில் உப்பு உறைப்பு நன்றாக சேராது
Deleteஏதோ இந்த சமுதாயத்தை காப்பாற்ற என்னால் ஆனா முயற்சி செய்கிறேன்.
ReplyDeleteஉங்கள் முயற்சிக்கு நல்லது
Deleteஅட சிம்பிளா அரிசி சாதம் பற்றி பல ரெசிபி சொல்லிபுட்டிய்யா....! மதுரையா கொக்கான்னானானம்...!
ReplyDeleteநீங்க அருவா தூக்குறவரூ நான் கத்தி தூக்குற மதுரைக்காரன் ஆனா கத்தியை சமையல் அறையில் மட்டும் பயன்படுத்தி வருகிறென் வெளியே பயன்படுத்த சந்தர்ப்பம் வாய்க்கவில்லை
Deleteதங்கள் சமையல் அனுபவத்தை
ReplyDeleteதெளிவாகத் தெரிந்து கொண்டோம்
சுமாராக சமைப்பவர்களால் இப்படித் தெளிவாக
பதிவிட முடியாது
பெண்களும் தெரிந்து கொள்ளலாம் எனப் போட்டிருந்தது
மனம் கவர்ந்தது.வாழ்த்துக்கள்
//சுமாராக சமைப்பவர்களால் இப்படித் தெளிவாக பதிவிட முடியாது///
Deleteநீங்க ரொம்ப ஸ்மார்ட் சார். நான் நன்றாக இல்லை மிக நன்றாக சமைப்பவந்தான் சார்
sooper post.
ReplyDeleteநன்றி
Deleteஅற்புத வழிகள் தான்....
ReplyDeleteகூடவே ஆண்களுக்கு
அடிவாங்கும் படியாக
அமைத்திருக்கிறீர்கள் “உண்மைகள்“
பாவம் உங்கள் மனைவி...
இதையெல்லாம் எப்படித்தான் சாப்பிடுகிறார்களோ...!!
இதெல்லாம் புதுசா சமைக்கிறவங்களுக்குதான். நாங்க எல்லாம் அடிவாங்கிற ஸ்டேஜை தாண்டியாச்சு அதாகப்பட்டது நாங்க எல்லாம் இப்ப நல்லா சமிக்கிறோமுங்க
Deleteஆண்களுக்கு உதவற மாதிரி பதிவ போட்டு உதை வாங்க ஐடியா பண்றதே உங்க பொழைப்பா போச்சு.இருந்தாலும் ஐடியா எல்லாம் நல்லத் தான் இருக்கு.
ReplyDelete
ReplyDeleteaahaa... makkaa...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : ஏஞ்சலின் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காகித பூக்கள்
வலைச்சர தள இணைப்பு : சமையலில் நளபாகம் :)