Sunday, October 14, 2012





தமிழக மக்கள் நினைப்பதும் vs முதல்வர்கள் நினைப்பதும்


மக்கள் : 12 மணிநேரம் இன்று கரண்டு கட்
முதல்வர் : 12 மணிநேரம் இன்று கரண்டு கட் பண்ணாமல் இருந்திருக்கிறோம் அதற்காக இந்த மக்கள் நம்மை பாராட்டுவதில்லை


மக்கள் : கூடங்குளம் பாதுகாப்பானது அல்ல
முதல்வர். அது கூடங்குளத்தில் இருப்பது எங்களுக்கு பாதுகாப்புதான்

மக்கள் : முதல்வர் மக்களை வந்து சந்தித்து குறை கேடப்தில்லை;
முதல்வர் : ஆமாம் நாம ஆட்ட்சியில் இல்லாதப்ப நம்பளை எத்தனை பேர் வந்து பார்த்து உங்களுக்கு குறை ஏதும் இருக்கா என்று கேட்டாங்க.. இப்ப நமக்கு பதவி வந்ததும் இப்ப வந்து ஒட்டிக்க பார்க்குறாங்க...

மக்கள் ; எங்க பாரு டிராபிக் ஜாம்
முதல்வர் : நானும் காரில்தான் சென்னையை சுற்றுகிறேன் நான் சுற்றும் போகும் போதுமட்டும் டிராபிக் ஜாம் ஏற்படுவதில்லை. இந்த மக்களுக்கு ஏதாவது குறை சொல்வதே பழக்கம்

மக்கள் ; மக்களுக்கு பாதுகாப்பு இல்லை
முதல்வர் : நான் சாலையில் காரில் பயணிக்கும் போது எப்போதும் சாலையோரத்தில் 20 அடிக்கு ஒரு போலிஸ் நின்று மக்களை பாதுகாக்கிறார்கள். அதையெல்லாம் மக்கள் பார்த்தும் என் இப்படி அநியாமாக பொய் சொல்லுகிறார்களோ ?. என்னவோ நான் காசு கொடுத்து இவர்களை என்னை பார்க்க வைக்கிறது மாதிரி நினைக்கிறார். நாட்டு மக்கள் கெட்டு போயிட்டாங்க


மக்கள் ; ரோடுகள் சரியில்லை
முதல்வர் : விலைக்குறைவான கார்களை வாங்கி உபயோகப்படுத்தி நல்ல ரோடை பாழ்படுத்தி விட்டு இப்படி குறை சொல்வதே அவர்களின் பழக்கம். ஒன்று நல்ல விலையுர்ந்த வாகனங்களை வாங்கணும் அல்லது எல்லோரும் நடந்து போகப் பழகினால் ரோடை குறை கூற அவசியமே இல்லை இதை எப்போதான் புரிஞ்ச்சுக்குவாங்களோ ஹும்ம்ம்ம்ம்

மக்கள் : கவர்மெண்ட் ஹாஸ்பிடல் சரியாக செயல்படுவதில்லை
முதல்வர் : ஒரு இடம் சரியில்லைன்னா அந்த இடத்துக்கே மீண்டும் மீண்டும் போய் அதையே குறை கூற வேண்டுமா என்ன  எத்தனை ஹாஸ்பிடல் மிக அழகாக பாரின் ஹோட்டல் போல கட்டி வைத்து இருக்கிறார்கள் அங்க போக வேண்டியத்துதானே. இது கூட தெரியாதா... இந்த நல்ல ஹாஸ்பிடலுக்கு போகும் வழி சொல்வதற்காக நான் முதல்வரா வந்து இருக்கேன்

மக்கள் : வாழ்க்கை தரம் இந்த ஆட்சியில் குறைவு
முதல்வர் : குறைவு குறைவு என்று சொன்னதுனாலதான் பால் விலை பஸ்கட்டண விலையை உயர்த்தினேன் அதை கூட புரிஞ்சுக்கமா அய்யோ குய்யோன்னு கத்துறாங்க

மக்கள் ; தண்ணி வசதி சரியில்லை
முதல்வர் : எத்தனை டாஸ்மாக் கடைகள்  திறந்தாலும் திருப்தி இல்லாத ஜனங்கள்

மக்கள் : காவிரி நீர் மின்சாரவசதிக்ககாக முதல்வர்கள் சரியாக போராடுவதில்லை.
முதல்வர் : என்னமோ இந்த ஜனங்கள் இன்னும் நாம வாலிப பருவத்தில் இருக்கிற மாதிரி நினச்சுகிறாங்க நமக்கு வயசு ஆகிவிட்டத இவங்க எப்பதான் புரிஞ்ச்சுபாங்களோ... அப்படியே நாம போராட்டம் நடத்தினாலும் இவங்க, அவங்க அம்மா அப்பா பாட்டி தாத்தாவை கூப்பிட்டா வராங்க. அவங்களுக்கு ஒரு நியாம் நமக்கு ஒரு நியாம்

மக்கள் : அடுத்த தேர்தல் வரட்டும் அப்ப நாங்க யாருன்ணு காண்பிக்கிறோம்.
முதல்வர் : நீங்க என்ன பண்ணுவிங்கண்ணு எனக்கும் தெரியும் எங்க அண்ணன் கலைஞருக்கும் தெரியும்



அன்புடன்
உங்கள் அபிமானதிற்குரிய
மதுரைத்தமிழன்

 டிஸ்கி : எனது கிறுக்கல்கள் நீங்கள் படித்து ரசிக்க மட்டும்தான் . நான் தமிழ் சமுதாயத்தை திருத்த அல்லது புரட்சியை தமிழ் சமுதாயத்தில் ஏற்படுத்த எழுதவில்லை அல்லது சங்கம் அமைத்து தமிழை வளர்க்க அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதை இங்கே நான் மிகவும் தெளிவு படுத்த விரும்புகிறேன். இங்கே இதை நான் கூறக் காரணம் நான் இதற்கு முந்திய பதிவில் எனக்கு தெரிந்த தமிழில் எழுதிவிட்டேன். அதை நமது சக பதிவாளார் தவறாக புரிந்து என்னை மொக்கு மொக்கு என்று மொக்கி ( நல்ல வேளை நான் தமிழகத்தில் இல்லை அப்படி இருந்து இருந்தால் விஜயகாந் மாதிரி அந்த தம்பி என்னை தலையில் கொட்டு கொட்டிவென கொட்டி இருப்பார்) பல பட்டங்களை கொடுத்து விட்டார். இதற்கு நான் அவரை குறை சொல்லவில்லை எனக்கு தெரிந்த தமிழைதான் குறை சொல்ல வேண்டும்

அதன் பிறகு அவர் மனது காயப்பட்டுவிட்டதோ என்று எண்ணி அவருக்கு ஒரு பெரியயயயயயயய விளக்கம் தர வேண்டியது நிலமை ஏற்பட்டது.. அதனால் தான் இந்த டிஸ்கி

6 comments:

  1. நீங்க என்ன பண்ணுவிங்கண்ணு எனக்கும் தெரியும் எங்க அண்ணன் கலைஞருக்கும் தெரியும்.

    அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.

    ReplyDelete
  2. எல்லா முதல்வர்களும் இப்படித்தான் நினைப்பார்களோ.சாமார்த்தியமான பதில்கள் சூப்பர்

    ReplyDelete
  3. nenga sonnathu sari than anal edhu tamilnatil mattum ellai arasil engu ellam erukutho anguellam eruku , atha pathi kavalai padakudathu

    ReplyDelete
  4. /// Blogger stats counts gone (missing )கூகுல் ப்ளாக்கர்ஸின் ஸ்டேடஸ் மிஸ்ஸிங்க் கோவிந்தா கோவிந்தா ///

    ?????

    ReplyDelete
  5. மக்கள் ; தண்ணி வசதி சரியில்லை
    முதல்வர் : எத்தனை டாஸ்மாக் கடைகள் திறந்தாலும் திருப்தி இல்லாத ஜனங்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  6. தமிழ்நாட்டில் பலரது கேள்விகளுக்கு உங்களுடைய பதில் பிரமாதம்

    வாழ்த்துக்கள்

    http://sankar-information-security.blogspot.com/

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.