Monday, May 21, 2012

இப்படி ஒரு நிலமை எந்த தாயாருக்கும் வர வேண்டாம்.


சிறுபிள்ளைத்தனமாக மாணவன் செய்த தவறு மீடியாக்களால் பெரிது படுத்தப்பட்டு இந்திய தாய்  பிள்ளைக்காக கோர்ட்டில் கண்ணிர் விட்டு கதறும் நிலமை ஏற்பட்டுள்ளது. அந்த தாய் அழுத காட்சியை பார்த்த எனது மனம் நெகிழ்ந்து என் கண்ணில் இருந்தும் கண்ணிர் வரத் தொடங்கியது. இது வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு மிகப் பெரிய பாடம். இந்த தவறு ஒரு அமெரிக்க மாணவனால் செய்து இருந்தால் இந்தளவு பெரிதும் பேசப்பட்டிருக்காது.

Dharun Ravi's Mom Gives Tearful Plea
Former Rutgers student's mother tells judge her son has suffered enough
http://abcnews.go.com/US/video/dharun-ravis-mom-gives-tearful-plea-to-judge-16395904


Dharun Ravi Sentenced to 30-Day Jail Term
Rutgers webcam spying suspect's time in jail will be followed by probation.
http://abcnews.go.com/US/video/dharun-ravi-sentenced-to-30-day-jail-term-16396397


இந்த செய்தியை நான் வெளியிடுவதன் காரணம் அந்த சிறுவன் செய்தது தவறு அல்லது இல்லை என்று விவாதிக்க அல்ல. நாட்டைவிட்டு வெளிநாடு செல்பவர்கள் அங்கு சென்று எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அறிந்து கொள்ளவே. இல்லையென்றால் அவர்களுக்கு துயரம் ஏற்படுவதோடுமட்டுமல்லாமல் வளர்த்த பெற்றோர்களுக்கும் பெரும் துயரம் ஏற்படும் என்பதால்தான்



அந்த தாயாருக்கு மிக மனவலிமை தர எனது பிரார்த்தனைகள்

8 comments:

  1. ஒரு இடத்துக்கு செல்லும்போது அங்கு இருக்கும் பழக்க வழக்கங்களையும், கலாச்சாரத்தையும் ஓரளவுக்காவது யார்கிட்டயாவது கேட்டு தெரிஞ்சு வச்சுக்குறது நல்லது. அதை தன் பிள்ளைகளுக்கும் சொல்லித்தர வேண்டியது பெற்றோரின் கடமை. இதை இனிவரும் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  2. பெற்றோருக்கும் கஷ்டம், மாணவனுக்கும் கஷ்டம்!!!!

    ReplyDelete
  3. //நாட்டைவிட்டு வெளிநாடு செல்பவர்கள் அங்கு சென்று எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அறிந்து கொள்ளவே// நாட்டை விட்டு வெளி நாடு சென்றவர்கள் என்று மட்டுமில்லை, அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்திருதாலும் அவர்களுக்கும் இது பொருந்தும். நல்ல வேளையாக தருன் ரவிக்கு 30 நாட்கள் சிறை வாசம் மட்டுமே தண்டனை என்ற அளவில் அவருக்காக சந்தோஷப் படுகிறேன். மற்ற படி இந்தியாவில் இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. பணம் இருந்தால் செய்வதெல்லாம் சரியே.

    ReplyDelete
  4. @மனோ.

    இங்கே வசிக்கும் எல்லா பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இது ஒரு நல்ல பாடம்.

    உங்களின் வருகைக்கும் மன எண்ணங்களை இங்கு கருத்தாக பகிர்ந்தற்கு நன்றி.

    ReplyDelete
  5. @ராஜி .


    இந்த நிகழ்ச்சியை எங்களது வீட்டு குழந்தைகளுக்கும் சொல்லி அந்த தாய் அழுததை அந்த சிறுவன் வீட்டில் தனியே இருந்து கஷ்டப்படுவதை சொல்லி வருகிறோம். மற்றவர்களின் அனுபவங்களில் இருந்தும் நாம் பாடம் கற்று கொள்ள வேண்டும்

    ReplyDelete
  6. @அமர பாரதி .

    //நாட்டைவிட்டு வெளிநாடு செல்பவர்கள் அங்கு சென்று எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அறிந்து கொள்ளவே// நாட்டை விட்டு வெளி நாடு சென்றவர்கள் என்று மட்டுமில்லை, அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்திருதாலும் அவர்களுக்கும் இது பொருந்தும். நல்ல வேளையாக தருன் ரவிக்கு 30 நாட்கள் சிறை வாசம் மட்டுமே தண்டனை என்ற அளவில் அவருக்காக சந்தோஷப் படுகிறேன். மற்ற படி இந்தியாவில் இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. பணம் இருந்தால் செய்வதெல்லாம் சரியே///

    உங்களின் வருகைக்கும் மன எண்ணங்களை இங்கு கருத்தாக பகிர்ந்தற்கு நன்றி.

    இந்தியாவில் பணம்ம் இருந்தால் சட்டமும் மாறுபடும் எனப்து உண்மைதான் நண்பரே

    ReplyDelete
  7. @Seeni ..

    // neenga sonnathu unmaithaan!//

    உங்களின் வருகைக்கும் மன எண்ணங்களை இங்கு கருத்தாக பகிர்ந்தற்கு நன்றி.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.