உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, May 31, 2012

பொய்களும் அதன் நிஜ முகங்களும் ( உங்களை சுற்றி வரும் டாப் பொய்கள் )
பொய்களும் அதன் நிஜ முகங்களும் ( உங்களை சுற்றி வரும் டாப் பொய்கள் )

இதோ அந்த டாப்  பொய் பட்டியல்  எந்தச் சூழ்நிலையில், இந்தப் பொய்கள் சொல்லப்படுகின்றன என்பதை நீங்கள்  சுலபமாக யூகிக்கலாம்.

இங்கு கறுப்பு கலரில் இருப்பவைகள் நீங்கள் சொன்ன பொய்கள் சிவப்பு கலரில் இருப்பது உங்கள் மைண்ட் வாய்ஸ்

1.நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க ( பன்னி மாதிரி )

2.உங்க டிரெஸ் ரொம்ப அழகா இருக்கு (நல்லா இல்லாத டிரெஸ்சை நல்லா இருக்குன்னு சொல்லியாச்சு அதேயே போட்டுகிட்டு திரிவா ஹஹஹா)

3.கவலைபடாதீங்க ...எதிர்காலத்தில் எல்லாம் சரியாக போய்விடும் ( ஆமாம் உங்க கனவுலமட்டும்தான் )

4.உங்க ஹேர் ஸ்டைல், உங்களுக்கு ரொம்ப  நல்லா இருக்கு! ( தலையில உள்ள வழுக்கையை மறைக்கிறதே இருக்கிற நாலு முடிதான்)

5.முப்பது வயசுனு சொல்லவே முடியாது! ( நாப்பதுன்னு சொல்லலாம்.)

6.இவரு பொய்யே பேச மாட்டாருங்க (மௌன விரதத்தின்போதுமட்டும்தான்!)

7.இந்த விருதை நான் எதிர்பார்க்கவே இல்லை.(எத்தனை பேரைப் பார்த்து, எத்தனை லஞ்சம் கொடுத்தானோ)

8.இன்று நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க ( கடைசியா ஒரு நல்ல டிரெஸ் போட்டுட்டு வந்திருக்கா )

9.எங்கள் குழந்தையின் விருப்பத்தில் நாங்கள் தலையிடுவதில்லை  எந்த பாடம் பிடிச்சுருக்கோ அந்த பாடத்தை கல்லுரியில் எடுத்து படிக்க சொல்லிட்டோம் ( அம்மா தாயே பரிட்டைசையில் மார்க் ரொம்ப குறைவா வாங்கி இருக்கான்னு நேரடியா சொல்லலாமில்லை)

10 ஊழல் இல்லாத ஆட்சி தருவோம் ( ஆனா அதை எப்ப தருவோம் என்ற உறுதி மொழி தரமாட்டோம்)

11. நான் அவசர அவசரமாக சமைத்தேன் அதுனால இன்னைக்கு சமையல் ரொம்ப சுமார்தான்( ஆமாம் இவ மெதுவா சமைச்சாலும் கூட வாய்யில வைக்க முடியாது இதுல வேற )

12. நீங்க சமைச்ச சாப்பாடு ரொம்ப சூப்பர் ( இப்பவே வயித்த வலிக்க ஆரம்பிச்சுடுச்சு)

13. உங்க  ஐடியா  மிக நல்ல ஐடியாவா இருக்கு ( இவனும் இவன் ஐடியாவும் குப்பையிலதான் கொண்டு போடனும்)

14. நீங்க உபயோகிக்கிற பெர்பியூம் பேர் என்ன ரொம்ப நல்லா இருக்கு (குப்பைதொட்டியின் வாசனையே நல்லாதான் இருக்கு.நான் அந்த செண்டை வாங்கி இருந்தால் இந்நேரம் அதை தாயாரித்தவன் மீது வழக்கு தொடர்ந்து இருப்பேன்)

15. உனக்கு உதவி எதாவது தேவைப்பட்டால் என்னை கூப்பிடு ( அப்பதான் எனக்கு பிஸி என்றூ சொல்லிவிட்டு போக முடியும்)

மக்காஸ் இது போல பல பல பொய்கள் யாரையும் பாதிக்காமல் தினம்தினம் சொல்லப்படுகின்றன.

இந்த மாதத்தில் நீங்கள் சொன்ன பொய்கள் ஏதாவது இருந்தால் அதை இங்கு பின்னுட்டத்தில் சொல்லலாம். அட நான் எல்லாம் பொய் சொன்னதே இல்லை என்று இங்கு வந்து பொய் சொல்லவேண்டாம்


இறுதியாக நான் ரொம்ப நன்றாக எழுதுகிறேன் அதனால் நீங்கள் நாவல் எழுதலாம் என்று பின்னுட்டத்தில் சொல்லிவிட்டு (உங்கள் மனதுக்குள் இவனெல்லாம் எழுத வந்துட்டான் என்று நீங்க நினைப்பது என் மைண்ட்டுக்கு புரிந்துவிட்டது மக்காஸ் அதுனால நல்லா உள்ளதை நன்றாக இருக்கு என்றும் இல்லாததை இல்லை என்ற உண்மையை மட்டும் பின்னுட்டதில் போடவும்.

டிஸ்கி ; நீங்க நல்லா எழுதவில்லை என்று பின்னுட்டத்தில் சொன்னாலும் நான் எழுதுவதை விடப் போவதில்லை. என்ன அவ்வள்வு சீக்கிரம் நான் உங்களை விட்டு போய்விடுவேன் என நினைத்தீர்களா? விட்டு போய்விடமாட்டேன் மக்கா விட்டு போய்விடமாட்டேன்

அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

4 comments :

 1. karpanai nalla irukku!

  en manasulayum athuthaan irukku!

  ReplyDelete
 2. மைண்ட் வாய்ஸ் எல்லாம் சூப்பர்தான் ஹா ஹா

  ReplyDelete
 3. நீங்க நல்லா எழுதறிஙகன்னு சொல்லிட்டு மனசுக்குள்ள பெரிசா எழுதிக் கிழிச்சிட்டான் இவன்னு நாங்க நினைக்கலாம். நீயெல்லாம் என்னய்யா எழுதறன்னு சொல்லிட்டு நம்மைவிட நல்லாவே எழுதறானே ராஸ்கல்னும் நினைக்கலாம். அதனால் பெர்ய்யை உண்மையா எழுதறாங்களா, இல்ல உண்மைய பொய்யா எழுதறாங்களான்னு எப்படி கண்டுபிடிப்பீங்க நண்பா... ஆனா நான் உண்மையாவே சொல்றேன்... நீங்க எழுதறது அருமையா இருக்கு.

  ReplyDelete
 4. பொய்கள் சில சமயங்களில் மற்றவர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். யாரையும் பாதிக்காம இருந்தா சரி.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog