உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, May 30, 2012

புதுக்கோட்டை தேர்தலில் அதிமுகவுக்கு ரஜினி ஆதரவா?புதுக்கோட்டை தேர்தலில் அதிமுகவுக்கு ரஜினி ஆதரவா?

அதிமுகவுக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த செயலாளர் கே.ஸ்ரீதர் இந்த தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதை அறிந்ததும் அவரை உடனே போட்டியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்டளையிட்டிருந்தார். ரஜினிகாந்தின் கட்டளையை தொடர்ந்து ஸ்ரீதர் போட்டியில் இருந்து விலகினார். ""சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் போட்டியில் இருந்து விலக முடிவு செய்தேன்''  என்று ஸ்ரீதர் தெரிவித்தார். ""தமிழ்நாட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண முதலமைச்சர் ஜெயலலிதா பாடுபட்டு வருவதால் அவருக்கு ஆதரவளிக்க முடிவு செய்யப்பட்டது'' என்றும் அவர் கூறினார்."பாபா' படம் திரையிடப்பட்டபோது பாமகவினர் மிரட்டல் விடுத்தனர். அப்போது தியேட்டர்களுக்கு போதிய பாதுகாப்பை கொடுத்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்றும் ஸ்ரீதர் கூறினார். புதுக்கோட்டை இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக நேரில் தெரிவித்தார். அதிமுக தேர்தல் அலுவலகத்திற்கு சென்று அமைச்சர்களும், நிர்வாகிகளுமான ஓ.பன்னீர்செல்வம், கே..செங்கோட்டையன், நத்தம் ஆர்.விசுவநாதன் ஆகியோரையும் சந்தித்து தங்கள் மன்றத்தின் ஆதரவை அவர் தெரிவித்துக் கொண்டார்.

இந்த செய்தி இன்றைய (மே 29: )பத்திரிக்கையில் வந்திருக்கிறது.

ரஜினியின் சொல்படி போட்டியில் கே.ஸ்ரீதர் விலகினார்.ஆனால் அதே  கே.ஸ்ரீதர் அதிமுக வேட்பாளரை நேரில் சந்தித்து ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பில் ஆதரவை தெரிவித்திருக்கிறார்.

எனது கேள்வி  இந்த அதிமுக வேட்பாளரை ஆதரிக்கும் முடிவு .கே.ஸ்ரீதர் மட்டும் எடுத்த முடிவா? அல்லது இது ரஜினிகாந்த எடுத்த முடிவை இந்த ரசிக மன்ற செயலாளர் அறிவித்து இருக்கிறாரா?

இது ரஜினிகாந்தின் முடிவு என்றால் ஜெயலலிதாவின் ஒராண்டு ஆட்சி தமிழகத்தை முன்னேற்றத்திற்கு கொண்டு செல்கிறது என்று நினைத்துதான் ஆதரவு அளித்து இருக்கிறார் என்றுதான் நாம் கருத வேண்டியிருக்கிறது. அல்லது இவர் அந்த முடிவை எடுக்க வில்லையென்றால் அவர் இன்னொரு அறிக்கை அளித்து தாம் அந்த முடிவை எடுக்க வில்லை என்று அறிவித்து அந்த ரசிக மன்ற செயலாளர் மீது நடவடிக்கை எடுப்பாரா?

இது ரஜினி ஆடும் கண்ணாமுச்சி ஆட்டமா அல்லது அவர் ரசிக மன்ற செயலாளர் ஆடும் கண்ணாமுச்சி ஆட்டமா? பொருத்து இருந்து பார்ப்போம்.

1 comment :

  1. ம்ம்ம்ம் ரஜினி ரசிகர்களும் தேர்ந்த அரசியல்வாதி போலதான் நடக்கிறார்கள் இல்லையா...?

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog