Sunday, May 27, 2012




மனதை ஒருமுனைப்படுத்தி மெல்லிடை பெற விரும்பும் அழகான பெண்களுக்கு

கோலங்கள் போடுவது என்பது  வீட்டின் முகப்பை அழகுபட்டித்துவதற்கு மட்டுமல்ல. அது மனிதனின் உடலுக்கும் மனதுக்கும் தரும்  மிக சிறந்த பயிற்சி ஆகும். கோலம் போடுவதன் மூலம் கவனம் செலித்தி மனதை ஒரு முகப்படுத்த முடுகிறது. இது மிகச் சிறந்த பயிற்சி ஆகும்.

இந்த எளிமையான பயிற்சி நம் முன்னோர்களால் அறிமுகப்படுத்த பட்டு பெண்களால் கடைபிடிக்கப் பட்டு சமிப காலம் வரை கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் அது இந்த அவசர உலகின் காலை பரபரப்பு காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்து கொண்டிருக்கிறது.

இது மிக முக்கியமாக பெண்களின் வேலையாகவே சொல்லப்பட்ட காரணம் பெண்கள்தான் குடும்பத்தை நடத்தி செல்லும் நிர்வாகியாக கருதப்பட்டதுதான் காரணம். இதை பெண்கள் அதிகாலையில் செய்ததினால் சுத்தமான காற்றை சுவாசிச்சு மனதை மிகவும் ஒருமுகப்படுத்தி குனிந்து நிமிர்ந்து செய்ததினால் மனமும் உடலும் மிக வலுப் பெற்றது.


இதானால் அந்த காலப்பெண்கள் எந்த வித மன அழுத்தம் எதுவும் இல்லாமல் எல்லா முடிவுகளையும் சரியாக எடுத்து கணவருக்கும் குழந்தைகளுக்கும் சிறந்த ஆலோசனை சொல்லும் நிர்வாகியாக இருந்தனர். அது மட்டுமல்ல இதை செய்வதினால் அவர்களின் இடை மெலிந்து கணவரின் கண்களுக்கு என்றும் கனவுக்கன்னியாகவே இருந்தனர்.


ஆனால் இன்று எல்லோரும் மிகவும் மன அழுத்தம் உடையவர்களாகவும் இடைகள் என்று ஓன்று இருந்தற்கு அடையாளம் ஏதும் இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள்.

பெண்களுக்கு ஒரு வேண்டுகோள் இதை நீங்கள் உங்கள் வாசலில் போடகூட வேண்டாம் அதற்கு பதிலாக ஒரு நோட்டில் போட்டு பழகினால் மனதுக்கு ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும். இதை உங்கள் குழந்தைகளுக்கு கற்று தரலாம். அமெரிக்காவில் இதை குழந்தைகளின் மனத்தை ஒருமுனைப்படுத்தும் பயிற்சியாக கற்று தருகிறார்கள்.


நமக்கு நாம் செய்தவைகளை அமெரிக்கன் செய்த பின் தான் அதன் அருமை பெருமையெல்லாம் தெரியும் அதுவரை அதன் அருமை பெருமைகள் ஏதும் தெரியாது.

கோலம் எப்படி போடுவது என்று தெரியாத இந்த காலப் பெண்கள் இங்கே சென்று கற்று தம் குழந்தைகளுக்கு கற்றுதரலாம். இது ஒரு நல்ல வலைத்தளம்.


கோலசுரபி எனப்படும் இச்செயலியின் மூலம் பலவிதமான கோலங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கலாம். பிடித்தக் கோலங்களை வரைந்து அல்லது ஸ்கிரின்சாட் மூலமாக சேமித்துக் கொள்ளலாம். 3X3 முதல் 20X20 புள்ளிகள் வரை  இதன்மூலம் வளை கோடுகள் மற்றும் கம்பிக் கோடுகள் கொண்ட கோலங்களை வேண்டிய அளவுகளில் பெற்றுக் கொள்ளலாம். சதுரம் அல்லது சாய்சதுர வடிவிலும் உருவாக்கிக் கொள்ளலாம். இதன் மூலம் Random மாக கோலங்கள் வரும் என்பதால் ஒருமுறை வந்த கோலங்கள் மறுமுறை வருவது மிக அறிதாகும். அதற்கான லிங்க் கோலசுரபியின் முகவரி http://tamilpoint.blogspot.com/p/kolam.html

மற்றும் ஒரு கோலத்திற்கான வலைத்தளம். கோலங்கள் http://www.udhayam.in/ This site is the good resource for Indian traditional art lovers.

நம்ம கோலத்தை மூளைக்கான பயிற்சி என்று சொல்லித்தரும் மேலைநாட்டின் வலைத்தளம் இங்கே உங்கள் பார்வைக்காக



டிஸ்கி :மனதை ஒருமுனைப்படுத்தி தொப்பையை குறைக்க  விரும்பும் ஆண்களும் இந்த முறையை கடைபிடிக்கலாம் 


அன்புடன்,
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்


4 comments:

  1. வாசல் பெருக்கி கோலமிடுவதர்க்கும் ஆள் வைக்கும் சமூகம் என்ன செய்வது இப்படி உட்காருங்க ,இப்படி சாப்பிடுங்க என்று சொல்லித்தரவும் வேண்டிஉள்ளது .

    ReplyDelete
  2. நமக்கு நாம் செய்தவைகளை அமெரிக்கன் செய்த பின் தான் அதன் அருமை பெருமையெல்லாம் தெரியும் அதுவரை அதன் அருமை பெருமைகள் ஏதும் தெரியாது.//

    உண்மைதான் நம்மா ஆளுங்களுக்கு எப்பவுமே வெள்ளைக்காரன் மேலதான் கண்ணு...!!!

    ReplyDelete
  3. Ippo thoppu kaaranam poduvadhu kooda USA vil super brain. Yoga nu peyar vaithu sollik koduthu paNam vasoolikkiraargal.

    ReplyDelete
  4. Ippo thoppukaranam poduvadhai kooda super brain yoga nu peyar vaithu sollik koduththu USA vil kaasu

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.