உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, May 25, 2012

அமெரிக்க டீச்சரின் வாயை அடைத்த இந்திய சிறுமி

                                                       அமெரிக்க டீச்சரின் வாயை அடைத்த இந்திய சிறுமி

அமெரிக்கர்களைவிட நாம் புத்திசாலியா இல்லையா என்பதைவிட நமக்கு அவர்களைவிட வாய்திறமை மிக அதிகம் உள்ளது என்பதை ஒத்துக் கொள்ளதான் வேண்டும்

அமெரிக்காவில் ஒரு பள்ளியில் டீச்சர் குழந்தைகளுக்கு அந்த நாட்டின் அருமை பெருமையெல்லாம் சொல்லிக் கொண்டு வந்தார்.அதன் பின் எல்லாக் குழந்தைகளையும்  ... யார் யார் எந்த நாட்டுக்காரர்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தார் ..எல்லாம் குழந்தைகளும் தாங்கள் அமெரிக்கர்கள் என்றே சொல்லிவந்தனர்

கடைசியாக ஒரு சிறுமியிடம் கேட்டார் ..  நீ யார்.. ?

அந்தச் சிறுமி சொன்னாள் .. நான் ஒரு இந்தியன் .

டீச்சர் சந்தேகமாகக் கேட்டார் .. நீ ஒரு அமெரிக்கன் என்றல்லவா நான் யூகித்தேன் "

சிறுமி சொன்னாள்.. ." இல்லைங்க .. டீச்சர்.... என் அம்மா ஒரு இந்தியர் , என் அப்பா ஒரு இந்தியர் .. எனவே நானும் இந்தியர் "

அதை கேட்டு மிக ரோசம் கொண்ட டீச்சர் கொஞ்சம் கிண்டலாக.. " உன் அம்மா முட்டாள் , அப்பாவும் முட்டாள் என்றால் நீ யார் ... ?"

அந்த தமிழக சிறுமி சிரித்துக்கொண்டே சொன்னாள்...  ...ஹும்ம்ம்ம்ம் ... அப்படியானால் நான் ஒரு அமெரிக்கனாக இருப்பேன் ...


அமெரிக்கர்களைவிட தமிழனுக்கு வாய்திறன் அதிகம்தானே?


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய 
மதுரைத்தமிழன்

12 comments :

 1. ஹாஹ்ஹா... சரியான மூக்குடைப்பு டீச்சருக்கு. நம்மவர்களுக்கு வாய்ஜாலம் மட்டுமில்லை... புத்திசாலித்தனமும் கொஞ்சம் அதிகம்தான் நண்பா!

  ReplyDelete
 2. அருமையான பதில்
  பதிவு சிறிதாயிருந்தாலும் காரம் அதிகம்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. அமெரிக்காகாரன் முக்கால்வாசி இந்திய மூளையைதானே இப்போது பயன்படுத்திட்டு இருக்கான்...!!!

  ReplyDelete
 4. அதானே நம்ம கிட்டயே இப்படி எடக்கு மடக்கா கேக்கலாமோ ?

  ReplyDelete
 5. ஹா ஹா !நல்ல பதில்தான்!

  ReplyDelete
 6. டீச்சர் பாவம்.இன்னும் வாயைத் திறக்கவே மாட்டார்கள்.

  ReplyDelete
 7. hello sir/madam
  i read your post interesting and informative. i am doing research on bloggers who use effectively blog for disseminate information.i glad if u wish to participate in my research. if you are interested please contact me through mail. thank u

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog