உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, May 22, 2012

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளிலேயே சிறந்த பள்ளிகூடம் எது? 
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளிலேயே சிறந்த பள்ளிகூடம் எது?


நீங்கள் அதிக பணம் செலவழிக்காமல் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளிலேயே சிறந்த பள்ளிகூடத்தில் உங்கள் பிள்ளைகளை சேர்க்கலாம். அதுமட்டும் இல்லாமல் அவர்கள் அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெறுவார்கள். இதோ அந்த பள்ளிக்கூடத்தை பற்றிய செய்தி

தமிழ்நாட்டு சிறையில் பிளஸ் 2 தேர்வெழுதிய தண்டனைக் கைதிகள் 35 பேரும், வெற்றி பெற்றனர். கடந்தாண்டு, இதேபோல் 19 பேர் தேர்வு எழுதி, அனைவரும் வெற்றி பெற்றனர்.

சிந்திக்க : தவறு செய்துவிட்டு சிறைக்கு வருபவர்களுக்கு நல்லது சொல்லி படிக்கச் செய்து அறிவை வளர்த்து அனுப்பும் சிறைக்கூடம் உள்ள நாட்டிலே படிக்க வரும் மாணவர்களுக்கு பரிட்டைசையில் சீட்டிங்க் பண்ண உதவி அதிக மதிப்பெண் கிடைக்க தவறான செயலை கற்று கொடுக்க செய்யும் பள்ளி ஆசிரியர்கள் உள்ள புகழ் பெற்ற பள்ளிகூடங்கள் உள்ளதும் தமிழ்நாட்டில்தான்

சிறையில் படித்தால் செலவு இல்லாமல் சென்டம்' கிடைக்கும்


இந்த லிங்கை க்ளிக் செய்தால் கேரளாவின் சிறந்த பள்ளி கூடத்தில் படித்து கிராஜுவேட் & போஸ்ட் கிராஜுவேட் (MBA ) படித்து பட்டம் பெற்ற மாணவர்களைப் பற்றி அறியலாம் (http://www.deccanchronicle.com/channels/cities/others/locked-central-jail-study-well-800 )


அன்புடன்
உங்கள் அபிமானதிற்குரிய
மதுரைத்தமிழன்6 comments :

 1. சிறையில் படித்தால் செலவு இல்லாமல் சென்டம்' கிடைக்கும் /

  பல பள்ளிக்கூடங்கள் கூட சிறைகள் போலத்தான்
  கண்டிப்பும் கறாராகவும் இருக்கின்றன
  அறிய வேண்டிய செய்தியை வித்தியாசமான முறையில்
  பதிவ்வாகித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. ஆஹா இது புதுசா இருக்கே ம்ம்ம்ம் பேசாம எவனையாவது போட்டு தள்ளிட்டு போயி சிறையில் உக்காந்துரலமோ.

  ReplyDelete
 3. ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது சார்.கவனச்சிதறல் இல்லாததும் அவர்கள்
  பாஸானதற்கு ஒரு காரணமாய் இருக்கலாம்/

  ReplyDelete
 4. @ ரமணி சார்

  //பல பள்ளிக்கூடங்கள் கூட சிறைகள் போலத்தான்
  கண்டிப்பும் கறாராகவும் இருக்கின்றன
  அறிய வேண்டிய செய்தியை வித்தியாசமான முறையில்
  பதிவ்வாகித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்///

  உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இதற்கு முக்கிய காரணம் டிவி மற்றும் வேறு யாரு தொந்தரவு இல்லாமல் இருப்பதினால் அவர்கள் அதிக கவனம் செலுத்தி படிக்க முடிகிறது.

  ReplyDelete
 5. @ நாஞ்சில் மனோ

  ///ஆஹா இது புதுசா இருக்கே ம்ம்ம்ம் பேசாம எவனையாவது போட்டு தள்ளிட்டு போயி சிறையில் உக்காந்துரலமோ.//

  உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மனோ யாரையும் நீங்கள் போட்டு தள்ள வேண்டாம். அதற்கு பதிலாக பணம் படைத்த தலைவர்களிடம் உள்ள பணத்தை நீங்கள் போட்டு என்னிடம் தள்ளிவிட்டு உள்ளே போய் நன் கு படித்து பட்டம் பெற்று வரவும்...

  நீங்கள் பட்டம் பெற்று வெளி வரும் போது நீங்கள் கொடுத்த பணத்தினால் நான் ஆரம்பித்த கம்பெனியில் உங்களுக்கு மேனேஜிங் டைரக்டர் பதவி தருகிறேன்...சரிதானே

  ReplyDelete
 6. @ விமலன் .

  ///ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது சார்.கவனச்சிதறல் இல்லாததும் அவர்கள்
  பாஸானதற்கு ஒரு காரணமாய் இருக்கலாம்/

  உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  நீங்கள் மிகச் சரியாக சொன்னீர்கள். அதேதான் நானும் நினத்திருந்தேன்

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog