உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, May 15, 2012

இந்த பதிவில் இணைத்துள்ள ஆறு நிமிட வீடியோ உங்களின் வாழ்வை மாற்றக் கூடியது.

Courtesy : http://drstevebest.wordpress.com

இந்த பதிவில் இணைத்துள்ள ஆறு நிமிட வீடியோ உங்களின் வாழ்வை மாற்றக் கூடியது. எச்சரிக்கை மென்மையான மனதுடையவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்

அமெரிக்காவில் மட்டும் வருடத்திற்கு பத்து பில்லியன் (10 000 000 000) மிருகங்கள் உண்பதற்காக கொல்லப்படுகின்றன. இவைகளில் வான்கோழி, கோழிகள் மட்டும் கிட்டத்தட்ட ஒன்பது பில்லியன். மாடுகள் கிட்டத்தட்ட 33 மில்லியன்கள். அதாவது மூன்று கோடியே முப்பது லட்சம்.

உணவு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் மிருகங்களை எப்படி கொல்லுகிறார்கள் என்று படித்த பொழுது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இது சம்பந்தமாக  ஓப்ரா ஷோவில் மாடுகளை கொன்று உணவு Ground Beef தயாரிக்கும் தொழிற்சாலையில் எடுத்த வீடியோவைப் பார்த்து  நான் மிகவும் அதிர்ந்துதான் போய் விட்டேன். என்ன தான் நாங்கள் இம்மிருகங்களை ஒழுங்காக பராமரித்து மிக கொடுரமில்லாமல் தான் கொல்கிறோம் என்றெல்லாம் அவர்கள் சொன்னாலும், கொலை கொலை தான் .

எச்சரிக்கை மென்மையான மனதுடையவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்

Inside a Slaughterhouse   என்னும் இந்த ஆறு நிமிட வீடியோ உங்களின் வாழ்வை மாற்றக் கூடியது. ஜாக்கிரதை. Investigative reporter Lisa Ling goes behind the scenes of a slaughterhouse to see how meat is made. http://www.oprah.com/oprahshow/Inside-a-Slaughterhouse-Video#ixzz1uuChk7RM


ஏதோ அமெரிக்கர்கள்தான் இப்படி அதிக அளவில் மிருகங்களை கொன்று தின்கிறார்கள் என்று நினைத்து கொள்ள வேண்டாம். உலகின் பல நாடுகளிலும் ஏன் சீனா, இந்தியா போன்ற நாடுகளிலும் தின்பவர்கள் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறார்கள். யூ.எஸ் , யூகே போன்ற நாடுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது சீனா இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இதன் வளர்ச்சி அதிகரித்து கொண்டு இருக்கிறது.

பசுவை தெய்வமாக வணங்கும் நாடான இந்தியாவில் அதை கொன்று தின்பவர்கள் அதிகரித்து கொண்டிருப்பதை படிக்கும் போது கேவலமாகத்தான் இருக்கிறது நமக்கு..


நான் படித்த சில செய்திகளை நான் அப்படியே கிழே தந்து இருக்கிறேன்


http://drstevebest.wordpress.com/2011/10/21/animals-killed-for-food-consumption-in-us-and-worldwide-continues-to-increase/
The gross inadequacies of looking only at countries like the UK and US, where meat consumption is leveling off, compared to China and other developing nations, is clear in this 2009 Guardian report:

“Increased meat-eating has followed rising affluence in many parts of the world. China’s levels doubled between 1990 and 2002. Back in 1961, the Chinese consumed a mere 3.6kg per person, while in 2002 they reached 52.4kg each; half of the world’s pork is now consumed in China.

The US and the UK are among the few countries whose meat consumption levels have remained relatively stable. Surprisingly, it is not the US with the largest consumption (124.8), but Denmark with a shocking 145.9kg per person in 2002 (http://www.guardian.co.uk/environment/datablog/2009/sep/02/meat-consumption-per-capita-climate-change).

India [now] displaces the United States as Third Largest Exporter. Beef exports are forecast to rise 5 percent in 2012 on robust global demand, particularly by Southeast Asia, the Middle East and North Africa. India accounts for nearly half of world growth in 2012 of increased supplies and price-competitive shipments to emerging markets.

எச்சரிக்கை மென்மையான மனதுடையவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்

From Farm To Fridge  மற்றொமொறு அதிர்ச்சி அளிக்கும் வீடியோ


இந்த செய்தியை நான் வெளியிடுவதன் நோக்கம் இதை பார்த்தாவது சிலர் மனம் மாறினால் நல்லது என்பதினால்தான்.

7 comments :

 1. சீன சிறைச் சாலையிலுள்ள மனிதர்களை கொன்று ஏற்றுமதி செய்கின்றார்களாம் சீனாவில்.

  ReplyDelete
 2. வணக்கம் நண்பரே நம் ஊரிலும்( மதுரை) ஆடு வெட்டும் தொட்டி இதே மாதரி வந்துவிட்டது மாநகராட்சி சார்பில் போடப்பட்டு உள்ளது

  ReplyDelete
 3. சீனா, இந்தியா போன்ற நாடுகளிலும் தின்பவர்கள் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறார்கள்
  >>>
  உண்மைதான் முன்னலா சில பிரிவினர் அசைவம் சாப்பிட மாட்டாங்க. ஆனால், இப்போ அவங்களும் சாப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. இருந்தாலும் உயிர்வதை தடுக்க வேண்டியதுதான். ருசிக்காக நாம் எவ்வளாவு உயிரை கொல்கிறோம் என்பதை நினைக்கும்போது வருத்தமாதான் இருக்கு

  ReplyDelete
 4. வருந்தக்கூடிய செய்திதாங்க ஒரு பக்கம் மாட்டுப்பொங்கல் என்ற பெயரில் கோமாதாவுக்கு படையலிட்டு அதையே கொன்று தின்னும் மக்கள் என்ன செய்வது ...

  ReplyDelete
 5. மனிதன் உண்பதற்காக எத்தனை உயிரினங்களை கொன்னுக்கிட்டிருககான்? நினைச்சாவே வருத்தமாவும், கோபமாவும் இருக்கு. நான் அசைவம் சாப்பிடுறதில்லங்கறதுல ஒரு சந்தோஷம்.

  ReplyDelete
 6. முழு காணொளியையும் பார்க்க முடியவில்லை
  நிச்சயம் இந்தக் காணொளி சிலரின் மனத்தில்
  மாறுதல் ஏற்படுத்தும்
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 7. ethanai koduram ulam......
  ivarkaluku anniyan style la thanadanai kodutha than puriyum uyirah chitravathai seiravangaluku KIRUMIBOSHANAM..... i cant see the full video...

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog