உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, January 19, 2012

மம்மி ஜெயலலிதா தைரியலட்சுமியா?மம்மி ஜெயலலிதா தைரியலட்சுமியா?

''ஒரு தவறு நடக்கிறது என்றால், அதன் மீது ஜெயலலிதா எவ்வளவு துணிச்சலாக நடவடிக்கை எடுக்கிறார் என்பதற்கு நல்ல உதாரணம் சசிகலா குடும்பத்தினரைக் கட்சியில் இருந்து நீக்கியது. இது நல்லதொரு ஆபரேஷன். இந்தத் துணிச்சல் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு'' என்று தற்போது நடந்த துக்ளக் பத்திரிக்கை விழாவில் அவரது நண்பரும் துக்ளக் பத்திரிக்கை ஆசிரியருமான சோ அவர்கள் பேசியுள்ளார்.

இதை கேட்கும் போது எனக்கு நல்லா சிரிப்புதாங்க வருது. கட்சியில் இருந்து ஒருவரை நீக்குவதற்கு கட்சி தலைவருக்கு என்னங்க தைரியம் வேணும்??? அடுத்த கூட்டத்தில் சோ சொல்லபோவது இதுதான் மக்களே தமிழக பள்ளி கூடத்தில் ஒரு டீச்சரம்மா தன் வகுப்பில் தவறு செய்த மாணவனை வகுப்பில் இருந்து வெளியேற்றினார் அதனால் அவரை நாம் இந்தியாவின் மத்திய கல்வி துறை அமைச்சராக ஆக்க வேண்டும் என்று ஏதாவது கிறுக்குதனமாக பேசுவாரய்யா....

இப்போது நான் வசிக்கும் அமெரிக்காவில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி இப்போது ஞாபகத்திற்கு வருகிறது .இங்கு குழந்தைகள் தவறு செய்தால் குழந்தைகளை அடிக்காமல் குழந்தையை Go to Corner என்று சொல்லி வீட்டின் ஒரு ஒரத்தில் நிற்க செய்வார்கள். அது போலதான் இந்த அம்மா ஜெயலலிதா செய்து இருக்கிறார்கள். இதற்கு என்ன தைரியம் வேண்டும்?
நீங்கள் கேட்கலாம் தவறு செய்த குழந்தையை அடித்து திருத்த வேண்டியதுதானே என்று கேட்கலாம். இங்கே நாம் குழந்தையை அடித்தால் அவர்கள் போலிஸிடம் ரிப்போர்ட் பண்ணினால் பெற்றோர்கள் உள்ளே போகவேண்டியதுதான். அதை பின்பற்றிதான் இந்த ஜெயலலிதா அவர்களும் செய்து இருக்கிறார்கள். அப்படி இல்லாமல் சசிகலா குழுவை சட்ட நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த அம்மாவும் உள்ளே போக வேண்டி இருந்திருக்கும்.

இப்ப சொல்லுங்கய்யா இந்த மம்மி உண்மையிலே தைரிய லட்சுமிதானா?

சட்டம் அனைவருக்கும் சமம் என்றால்  சங்கமம் நடத்தியவர்கள் திகாருக்கு போகும்போது, மன்னார்குடி கும்பலை புழலுக்கு அனுப்ப வேண்டும். இது எல்லாம்  இந்த தைரியலட்சுமி  மம்மி மனசு வச்சாத்தான் முடியும். பெயரளவுக்கு தைரியலட்சுமியாக இல்லாமல் தைரியமாக நடவடிக்கை எடுக்க இந்த மம்மியால் முடியுமா?

"முதல்வர் மம்மி" அமைதி காப்பதின் அர்த்தம் என்ன? பெங்களூர் கோர்ட்டில் நடந்து வரும் சொத்து சேர்த்த வழக்கின் தீர்ப்பை பொறுத்துதான்  சோ அவர்களின் டைரக்ஷ்னில் நடிகை தைரியலட்சுமி நடிக்கும்  நாடகத்தின் அடுத்த கட்ட காட்சி அமையும். ஆகமொத்தம் அ.தி.மு.க தொண்டனும், ஓட்டு போட்ட பொதுமக்களும் முட்டாள்பசங்க


1 comment :

  1. நீங்கள் சொல்வது போலும் இருக்குமோ
    சுவாரஸ்யமான அலசல்
    பகிர்வுக்கு நன்றி
    த.ம 1

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog