உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, January 25, 2012

தலை குனிந்த இந்தியர்கள்....இவர்களில் நீங்களும் ஒருவரா ? ஒவ்வொரு இந்தியனும் அவசியம் படிக்க வேண்டிய பதிவுதலை குனிந்த இந்தியர்கள்....இவர்களில் நீங்களும் ஒருவரா ? ஒவ்வொரு இந்தியனும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு

 உலகில் மிக பெரிய ஜனநாயக (குடியரசு) நாடு இந்தியா என்பதை கேட்கும் போது. ஒவ்வொரு இந்திய குடிமகனும் பெருமைப்பட வேண்டிய விஷயமாக உள்ளது. ஆனால் அப்படிபட்ட நாட்டுக்கு நாம் நல்ல குடிமகனாக நாம் உள்ளோமோ என்று நாம் நினைத்து பார்த்தால் உண்மையில் நாம் தலை குனிய வேண்டிருக்கிறது..

தலை நிமிர்ந்து இருந்த நாம் ஏன் தலை குனிந்துள்ளோம் என்பதை நாம் இந்த 63 வது குடியரசு தினத்தில் பார்த்து மீண்டும் நாம் எப்படி தலைநிமிர்ந்து எப்படி என்று பார்ப்போம்.

இந்திய குடி மகனே ஒரு நிமிடம் நில்..... நான் கேட்கும் ஒரு கேள்விக்கு நீ ஒரு சிறந்த இந்திய குடிமகனாக இருந்தால் உன் மனதை தொட்டு உண்மையை சொல்லு.... கடைசியாக நீ எப்போது இந்திய தேசிய உறுதி மொழியை( Indian National Pledge )சொன்னாய். அதில் உள்ளதை சிறிதளாவது நீ கடைப்பிடிதாயா என்ற உண்மையை சொல்லு?????

அப்படியா அது என்ன என்று கேட்கும் இந்த தலைமுறைக்காக அதை கிழே தந்துள்ளேன்
இந்தியா என் தாய் நாடு.
இந்தியர் யாவரும் என் உடன் பிறந்தோர்.
என் நாட்டை நான் பெரிதும் நேசிக்கிறேன்.
என் நாட்டின் பழம்பெருமைக்காகவும் பன்முக மரபிற் சிறப்பிற்காகவும் நான் பெருமிதம் அடைகிறேன்.
இந்நாட்டின் பெருமைக்கு தகுந்து விளங்கிட நான் என்றும் பாடுபடுவேன்.
என் பெற்றோர், ஆசிரியர், மூத்தோர் அனைவரையும் மதித்து யாவரிடமும் மரியாதையும் பணிவன்புடனும் நடந்து கொள்வேன்.
எனது நாட்டிற்கும், எனது மக்களுக்கும் உழைத்திட முனைந்து நிற்பேன்.
அவர்கள் நலமும் வளமும் பெறுவதிலே நான் என்றும் மகிழ்ச்சி காண்பேன்.


 இதை நான் பள்ளிகளில் படிக்கும் போது ஓவ்வொரு நாளும் காலையில் நாங்கள் இந்த உறுதி மொழியை எடுத்து கொள்வோம்.முதலில் அதன் முக்கியத்துவம் தெரியாமல் சொன்னோம் பின் அது தெரிந்து அதை கூட்டமாக சேர்ந்து சொல்லும் போது மனதில் ஒரு உறுதியும் உற்சாகமும் பெருக்கும்ஆனால் இந்த மாதிரி உறுதி மொழியை இப்போதும் பள்ளிகளில் எடுத்து கொள்கிறார்களா என்பது தெரியவில்லை.

மாறி வரும் இந்த நவினகாலத்தில் இதிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகதான் நான் கருதுகிறேன்.

அந்த மாற்றங்கள்

இந்தியா என் தாய் நாடுஇதில் மட்டும் மாற்றம் ஏதுமில்லை.

இந்தியர் யாவரும் என் உடன் பிறந்தோர் : உலகின் மிகப் பெரிய பொய்களில் இப்போது இதுவும் ஓன்று. ஒருத்தரை ஒருத்தர் ஏமாற்றுதல் அடிதடிகளில் இறங்குதல், தன் சுயநலத்திற்காக மற்றவர்களின் காலை வாருதல் கொலைகளில் ஈடுபடுதல்.

என் நாட்டை நான் பெரிதும் நேசிக்கிறேன் : அதனால் தான் மேலைநாடுகளை பற்றி பெருமை பேசி தாய் நாட்டை மட்டம்தட்டி பேசுதல்.

என் நாட்டின் பழம்பெருமைக்காகவும் பன்முக மரபிற் சிறப்பிற்காகவும் நான் பெருமிதம் அடைகிறேன். அதனால்தான் மேலை நாட்டுகலாச்சாரத்தை பின்பற்றுகிறேன்.

என் பெற்றோர், ஆசிரியர், மூத்தோர் அனைவரையும் மதித்து யாவரிடமும் மரியாதையும் பணிவன்புடனும் நடந்து கொள்வேன். மரியாதை பண்பாடு என்றால் என்ன விலை என்று கேட்கும் காலம் இது.

எனது நாட்டிற்கும், எனது மக்களுக்கும் உழைத்திட முனைந்து நிற்பேன். அவர்கள் நலமும் வளமும் பெறுவதிலே நான் என்றும் மகிழ்ச்சி காண்பேன். ஆமாங்க அதனால்தான் லஞ்ச லாவண்யங்களுக்கு உறுதுணையாக இருந்து அதை திறம்பட செய்பவர்களை தலைவர்களாக தேர்ந்தெடுத்து அவர்கள் வளம் பெற்று அவர்கள் தரும் இலவசங்களை பெற்று நான் மகிழ்ச்சி அடைந்து நான் ஒரு நல்ல "குடி"மகனாக இருப்பேன் என்று நான் உறுதி கூறுகிறேன்.

இப்போது இப்படித்தான் இந்தியன் உறுதி மொழி எடுத்து கொள்கிறானோ என்னவோ அதனால்தான்  தலை நிமிர்ந்து இருக்க வேண்டிய நாம் தலை குனிந்து நிற்பதாக நான் கருதுகிறேன்.

நமது இந்திய சமூக கட்டமைப்பு என்பதே பலகோடிகணக்கான பேரை கொண்ட மொழி, இன,மத, மாநில, தேசியவாத குழுக்களாக, ஒற்றைகால் விரலில் நிற்கும் பயில்வான் போல உள்ளதுபயில்வான் போல ஒரு போக்கு காட்டி நாம்தான் உலகின் மிகப்பெரிய குடியரசு நாடு என்று கூறிக்கொண்டு, நமது  பலவீனங்களை சரிசெய்துகொள்ளாமல், வெறும் பொருளாதாரா கணக்கு காட்டி உலகையும் ஏமாற்றி நம்மையும் ஏமாற்றி 2020ல் உலகில் நம்பர் ஒன் வல்லரசாக மாறிவிடுவோம் கூறி வருகிறோம்.

நான் இப்படி சொல்வதற்காக நான் மிகவும் வருந்துகிறேன் ஆனால் இதுதான் உண்மை என்பதில் எந்தவித மாற்று கருத்து ஏதும் இருக்கபோவதில்லை

ஆனால் இதை இந்த குடியரசு தினத்திலிருந்து நாம் நினைத்தால் மாற்றி தலை நிமிர்ந்து நடக்கமுடியும் அது நம் கையில்தான் உள்ளது. அதற்காக நாம் இந்த குடியரசு தினத்தில் உறுதி மொழி எடுத்து மாற்றி காண்பிப்போம்.

மொழிகளால் நாம் வேறுபட்டு இருந்தாலும் நாம் இனத்தால் இந்தியன் என்று மட்டும் நினைத்து எல்லா மக்களிடமும் சகோதர உணர்வுடன் பழகி வரும் தேர்தல்களில் பணத்திற்காக அல்லாமல் நம் தேச வளர்ச்சிக்காக உண்மையில் உழைப்பவர்களை தேர்ந்தெடுத்து நம் நாட்டை உலகின் தரமான குடியரசு நாடாக்கி பெருமை கொள்வோம்

 
We follow our Indian National Pledge , respect our national anthem and  respect our nation.

12 comments :

 1. @எண்ணங்கள் சாந்தி மேடம் நீண்ட காலத்திற்கு பின் வருகை தந்தும், பதிவுக்கு ஏற்ற கருத்துகள் வழங்கியதற்கும் எனது நன்றிகள்.

  ReplyDelete
 2. ஆஹா யாவரும் படித்து பார்த்து உணரவேண்டிய விஷயத்தை சொல்லி இருக்கீங்க, குடியரசு நாளில் டச்சிங் பதிவு....!!!

  ReplyDelete
 3. இந்த பதிவை சீர்தூக்கி பார்த்தால் நிச்சயம் தலைகுனியதான் வேண்டும், இனியாவது மாற்றி காட்டுவோம்...!!!

  ReplyDelete
 4. அன்புள்ள...

  நல்ல உணர்வு. மாற்றம் என்பது தனி மனிதனிடமிருந்து தொடங்கப்படவேண்டும். தனி மனிதன் மாறாமல் எந்தவித மாறறமும் வீண்தான். எல்லா நியாயமற்ற நிலைப்பாடுகளையும் இதழ்களில பரபரப்பாகப் படித்து பரபரப்பாகப் பேசி பரபரப்பின்றி மறந்துவிடுகிறோம். இதுதான் இன்றைக்கு சாத்தியம்.

  ஒவ்வொரு உறுதிமொழி வரியும் மாறியிருப்பதன் அவலத்தை உங்கள் பதிவு தெளிவுறுத்துகிறது. இந்தச் சமூகம் சாதி மலத்தில் புரண்டு ஊழலில் குளித்து நியாயங்களைப் புசித்து வாழ்ந்துகொண்டிருக்கிறது. நமது தேசத்தில் நல்லவர்கள் அரசியலில் மருந்துக்குக்கூட இல்லை என்பதுதான் வருத்தம். காமராசர் போன்றவர்கள் சீக்கிரம் இறந்துபோனார்கள். மக்களின் பிரதிநிதியாக இருப்பவனே மக்களை மிருகங்களைவிடக் கேவலமாக எண்ணிப் பிழைத்து ஏமாற்றுகிறான். இது மாறுமா என்ன?

  ஒரேயொரு வழிதான் இருக்கிறது. நல்ல சிந்தனையுள்ள மனிதன் கடைசிவரை அதனைப் பராமரித்து தனது குடும்பத்திற்கு நல்ல தலைவனாக நல்ல தகப்பனாக நல்ல கணவனாக நல்ல சகோதரனாக வாழ்ந்துவிட்டு போனால் போதும். இதுதான் சாத்தியம் எப்போதும். எப்படியாயினும் உங்கள் பதிவு உணர்வுப் பதிவு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. உண்மையிலே தேசிய உறுதி மொழியை மறந்து நாளாகிறது....
  ஞாபகப்படுத்தியதற்கு நன்றி....

  ReplyDelete
 6. miha sariyaka sonneerkal. iniyavathu

  oru nalla kudimakanaaha ,

  masaatchippadi, URUTHI eduppom /

  athanpadi nadappom.

  ReplyDelete
 7. @ மனோசார் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி. வெளினாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு உள்ள இந்தியன் என்ற உணர்வு நம் நாட்டிலே வசிக்கும் இந்தியர்களுக்கு இல்லையோ என்று நினைக்க தோன்றுகிறது. அதன் விளைவுதான் இந்த பதிவு.

  தலை நிமிர முயற்சி செய்தால் நிச்சயம் நிமிர்ந்து நிற்க முடியும்

  ReplyDelete
 8. @ஹரணி சார் உங்களின் முதல் வருகைக்கும் பதிவை படித்து புரிந்து போட்ட உங்கள் விரிவான கருத்துக்கும் மிக நன்றி.

  ///எல்லா நியாயமற்ற நிலைப்பாடுகளையும் இதழ்களில பரபரப்பாகப் படித்து பரபரப்பாகப் பேசி பரபரப்பின்றி மறந்துவிடுகிறோம்.//

  இது மிக மிக உண்மைதான்.

  ReplyDelete
 9. @அகிலா மேடம் உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நான் சொல்ல வந்த கருத்தை நீங்கள் சந்திக்கும் நாலு பேரிடாமவது சொல்லி அவர்களுக்கும் ஞாபகபடுத்தி நம் இந்திய நாட்டை தலை நிமிர செய்ய உதவுவோம்

  ReplyDelete
 10. @ அபுபக்கர் உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. முடிந்தால் உங்கள் நண்பர்கலீடமும் சொல்லி அவர்களையும் உறுதி மொழி எடுக்க செய்யுங்கள். நன்றி

  ReplyDelete
 11. சொல்லிக்கத் தலைகுனிவாத்தான் இருக்கு.

  63 ஆண்டாகியும் ஊழல் பெருகி இருக்கே தவிரக் குறைஞ்ச பாடில்லையே:(

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog