மனுஷ்புத்திரனின் விலை உயர்ந்த புத்தகங்களால் நாட்டில் பேரதிர்வு ஏற்பட்டு இருக்கிறது
ஏய் தமிழக அரசே மனுஷ்புத்திரன் புத்தகங்களைத் தடை செய்
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று எழுத்தாளர் மனுஷ்புத்திரனின் புத்தகங்களைத் தடை செய்யப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த புத்தகத்தில் தவறான கருத்துகள் ஏதுமில்லை என்றாலும் இவர் எழுதும் புத்தகங்களின் விலை அதிகமாக இருப்பதால் வாசகர் அனைவரும் இப்போது கொலை கொள்ளை கடத்தலில் இறங்கி பணம் திரட்டி அவரின் விலையுயர்ந்த புத்தகங்களை வாங்க முயல்கிறார்கள் ,இதனால் நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை குலைந்துவிட்டது. மனுஷ்புத்திரனின் ஆளும் கட்சி ஆதரவாளர் என்பதால் அரசு வாய் மூடி இருக்கிறது. உடனே அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி செய்தியாளர்களிடம் தெரிவித்து இருக்கிறார் .அரசு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்கள் போராட்டம் தீவிரமாகும் என்றும் எச்சரிக்கை விடுவித்து இருக்கிறார்.
பிரபல தொழில் அதிபரின் பெண் கடத்தல்
பிரபல தொழில் அதிபரின் மகளை கடத்திய கடத்தல் கும்பல் தொழில் அதிபரிடம் 24 மணிநேரத்திற்குள் மனுஷ்புத்திரனின் புத்தகங்களை வாங்கி தங்களிடம் கொடுக்காவிட்டால் அவரின் பெண்ணைக் கொலை செய்வதாக மிரட்டல் விடுவித்து இருக்கிறார்கள்.. தொழில் அதிபரிடம் உடனடியாக அந்த புத்தகங்களை வாங்க பணமில்லாததால் தமிழக அரசின் உதவியை நாடி இருக்கிறார் என்ற அதிகாரப் பூர்வ தகவல் வெளி வந்து இருக்கிறது
வலிப்பறி கொள்ளை அதிகரித்து இருப்பதாக மக்கள் வேதனை
நேற்று ரோட்டில் நடந்த கொண்டிருந்த பெண்ணின் தாலியை அறுக்க முயன்றவர்களைப் பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்தனர்.. அந்த திருடர்கள் நாங்கள் தொழில் ரீதியான திருடர்கள் இல்லை . நாங்கள் மனுஷபுத்திரன் வாசகர்கள் அவரின் புத்தகங்களின் விலைகள் அதிகமாக இருப்பதால் எங்களால் சம்பாதித்து வாங்க முடியவில்லை ,அதனால்தான் இப்படி ஒரு முயற்சி செய்து மாட்டிக் கொண்டோம் என்று வலி தாங்காமல் கதறி அழுது கொண்டு சொன்னார்கள்
தமிழக அரசு அறிக்கை
தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் , மனுஷ்புத்திரனின் புத்தகங்களை வாங்கி செல்வோர்க்குத் தமிழகக் காவல்துறை சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தரும் என்று தமிழக முதல்வர் சொன்னதாகத் தகவல்கள் வெளி வந்து இருக்கின்றன. இதை அறிந்த மனுஷ்புத்திரனின் வாசகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் தமிழக அரசுக்கு நன்றிகள் தெரிவித்து வருகிறார்கள்
பிஸினஸ் கார்னர்
பிஸினஸ் கார்னர் :
சென்னை புத்தக் கண்காட்சியில் மனுஷ்புத்திரனின் புத்தகங்கள் அதிகம் விற்கப்படும் என எக்கனாமிஸ்ட்கள் கணித்து இருக்கிறார்கள் இதனால் தமிழகத்தில் உள்ள ஜவுளிக்கடையில் சேலைகள் விற்பனை மிகக் குறைவாக விற்கப்படலாம் ஏன் விற்காமல் கூடப் போகலாம் என்று கணித்து இருக்கிறார்கள் .இதைக் கேட்ட ஜவுளிக்கடை அதிபர்கள் அதிர்ந்து போன நிலையில் சென்னையில் உள்ள பிரபலமான பட்டுச் சேலை விற்கும் நிறுவனத்தின் அதிபர் நேற்று இரவு தூக்கிலிட்டு இறந்து போனார்.
BREAKING NEWS : மனுஷ்புத்திரனின் விலையுயர்ந்த டெஸ்லா காரை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்து இருக்கிறார். அந்த காருக்கு வரிவிலக்கு கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்து இருக்கிறார்.
அன்புடன்
மதுரைத்தமிழன்
இது புதுசா இருக்கே...!
ReplyDeleteஇது புதுசா இருக்கே...!
ReplyDelete