Thursday, January 12, 2023

 

@avargalunmaigal

தமிழகத்தில் வளரும் மூதேவிகளும் அவர்களைப் பெற்ற சீதேவிகளும்


News : A #fan of actor #Ajith lost his life in Chennai, after he fell off a truck while celebrating the release of the movie $Thunivu. He was among a group of fans who had got up on a moving truck to celebrate.


நேற்று வேலையிலிருந்து வந்து வீட்டில் தொலைக்காட்சியை ஆன் செய்தால்  அஜீத்தின் ரசிகன் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவன் பொங்கல் வெளியிடான அஜித்தின் படம் பார்க்கச் செல்கையில் ஒரு லாரி மீது ஏறி ஆட்டம் போட்டு கீழே விழுந்து  இறந்து போய்விட்டான்.. உடனே வழக்கம் போல ஊடகங்கள் அதனைக் கவர் செய்து அவர் ஏதோ நாட்டுக்குத் தியாகம் செய்து விட்டது மாதிரி செய்திகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள் அந்த பையனின் குடும்பத்தினரும்  நண்பர்களும் இரக்கம் வருவது மாதிரி பேசுகிறார்கள்.

இதில் அந்த பையனின் அம்மா நடிகனின் பின்னால் போகாதீர்கள் அவர்களாக வந்து உதவப் போகிறார்கள் என்று ஊடகங்களிடம் சொல்லி அழுகிறார். அட கூறு கெட்டவளே இதை ஊடகத்திடம் சொல்லுவதற்குப் பதில் உன் புள்ளைக்கு சொல்லி வளர்த்து இருந்தால் இன்று உன் புள்ளையாவது உயிரோடு இருந்திருப்பான். ஒருவேளை அப்படிச் சொல்லி வளர்த்து இருந்தாலும் அதன் பின் உன் பையன் அதைக் கேட்காமல் கூறு கெட்டு வளர்ந்து இருந்தால் அவன் இருப்பதோடு போய்ச் சேர்ந்ததே நலம் என்று சந்தோஷமாக இருக்கவேண்டும்

  
@avargal unmaigal
இதை ஊருக்கு சொல்லாமல் தன் பிள்லைக்கு சொல்லி வளர்த்து இருந்தால் இப்படி பிள்ளையை பறிக் கொடுத்து இருக்க வேண்டியதிருக்காது



 கஷ்டப்படும் குடும்பத்தைச் சார்ந்த  இந்த பையன்தான் அந்த குடும்பத்திற்கு ஆதாரமாம். அப்படி இருந்தும் தனது தகுதிக்கும் மீறிக் கஷ்டப்பட்டு  உழைத்து  சம்பாதித்த ஊதியத்தை, 2,500 ரூபாய் கொடுத்துப்  படத்தைப் பார்க்க டிக்கெட் வாங்கியிருக்கிறான்  அதுவே மிகத் தவறு அதோடு நிறுத்தாமல்  படம் பார்க்கப் போனால் படத்தைத்தானே பார்க்க வேண்டும் ஆனால் அப்படிச் செய்யாமல் வழியில் வந்த லாரியின் மீது மற்றவர்களுடன் சேர்ந்து ஏறி ஆட்டம் போட்டு  நிலை தடுமாறி கீழே விழுந்து முதுகுத் தண்டுவடத்தில் அடிபட்டுச் செத்துப் போய்விட்டான். இப்படித்தான் படம் பார்க்க வேண்டும் என்று எந்த நடிகரும் சொல்லவில்லை. இவன்களாக இப்படிக் கூறு கெட்டு நடந்து கொண்டு கடைசியில் நடிகர்களால் இந்த நாடே கெட்டுப் போய்விட்டது என்று அவர்கள் மீது பழி சொல்லுவது அவர்கள் வந்து இப்படிக் கூறு கெட்ட ரசிகர்களுக்கு உதவவில்லை என்று சொல்லுவது எந்த விதத்தில் நியாயம்.

அதிலும் அஜித் மற்ற நடிகர்கள் போலச் சமுகத்திற்குக் கருத்து சொல்லுரேன் மயிறு சொல்லுரேன் என்று ரஜினிகாந்த் மாதிரி இல்லாமல், வந்தோமோ படத்தில் நடித்தோமா அதற்கான ஊதியத்தை வாங்கினோமா தன் குடும்பத்தோடு நேரம் செலவழித்தோமா தனது பொழுது போக்கான கார் பைக் ரேஸில் கலந்து கொண்டோமா என்று அமைதியாக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருக்கிறார். அவர் எந்த கட்சியையும் கட்சி தலைமையும் ஆதரித்தோ எதிர்த்தோ பேசுவதில்லை போலியான சமுக அக்கறை உள்ளவர்கள் போலவும் நடிப்பது இல்லை தன்னால் முடிந்த உதவிகளை  எந்த வித சத்தமும் ஆர்ப்பாட்டமும்  விளம்பரமும் இல்லாமல் செய்து கொண்டு இருக்கிறார்.


படம் பிடித்தால்  பாருங்க... இல்லைன்னா விமர்சனம் பண்ணிட்டு போய்கிட்டே இருங்க . என் வேலை நடிப்பது என் குடும்பத்திற்காக வாழ்வது அது பொல . உங்க வேலை உங்க குடும்பத்துக்காக வாழ்வது என்பதை பல வருடங்கள்  தன் ரசிகர்களிடம் முந்தியே சொன்னவர்  

அப்படிப்பட்டவர் இந்த பையன் தன் ரசிகனாக இருந்ததால் அவரின் குடும்பத்திற்கு உதவ வேண்டுமாம் அடேய் கூறு கெட்ட பயல்களா போய் வேலை மயிரை போய் பாருங்களாடா...


சமுகமும், எந்த அமைப்பும் , எந்த நடிகரும் இது போலக் கஷ்டத்திற்கு உள்ளாகும் குடும்பத்திற்கு உதவவே கூடாது அதுதான் இந்த சமுகத்திற்கு நாம் கற்றுக் கொடுக்கும் பாடம்....அப்படி இல்லாமல் உதவ  முன் வந்தால் அது ஒரு மோசமான முன் உதாரணமாகத்தான் இருக்கும் .அந்த குடும்பம் அந்த பையன் இருந்தாலும் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கும் காரணம் இப்படிப் பொறுப்பில்லாமல் 2500 ரூ டிக்கெட் வாங்கும் அந்த பிள்ளை நாளை பொறுப்புடனும் கஷ்டத்தில் இருக்கும் தன் குடும்பத்தைப், பெற்றோர்களை நல்ல நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நிச்சயமாக நினைக்கவே மாட்டான், இந்த பையன் 2500 ரு கொடுத்து முதல் ஷோ பார்க்கவேண்டும் என்று டிக்கெட் எடுப்பவன்  வரும் காலத்தில் முதல் ஷோ முதல் டிக்கெட் எனது டிக்கெட்டாகவே இருக்க வேண்டும் என்று 10000 ம் கொடுத்து முதல் டிக்கெட்டை வாங்க வேண்டும்தான் என்று நினைப்பான் அதைத்தான் தன் சாதனையாகக் கருதுவான் அப்படிப்பட்ட இந்த பையன் இருந்தால் என்ன செத்தால்தான் என்ன?




இழப்பு இழப்புதான் அதற்காக நாம் வருந்த வேண்டுமே தவிர அந்த இழப்பை வைத்து மற்றவர்களின் அனுதாபத்தைப் பெற்று அவர்களின் உதவிக்  கொண்டு  வாழ் முயற்சிக்க கூடாது


இந்த பையன் மட்டுமல்லாமல் முதல் ஷோ  அல்லது  முதல் வாரத்தில் படம் பார்த்துவிட வேண்டும் என்று அப்பத்தான் பெருமை என்று குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ செல்லும்  படித்த  இந்திய வாழ் மற்றும் மேலை நாடுகளில் வாழும் இந்திய அனைத்து மக்களுக்கும் இந்த பையனுக்கும் வித்தியாசங்கள் ஏதுமில்லை எல்லோரும் ஒருவிதமான கூமுட்டைகள்தான் என்னைப் பொருத்தவரை

அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. வெறியர்களை திருத்துவது சிரமம் - சங்கிகளைப் போல...

    ReplyDelete
  2. அம்மா நாலு வீடு பத்துபாத்திரம் தேய்த்து படிக்க வைக்கும் குழந்தை 2500 ரூபாயை அம்மாவிடம் கொடுத்து இருக்கலாம் வீட்டுச்செலவுக்கு.
    "குடும்பம் ஒரு கதம்பம் " படத்தில் விசு இது போல குடும்ப பொறுப்பு இல்லா ரசிகனை காட்டி இருப்பார். படம் பார்க்கும் மக்கள் படத்தில் உள்ள நல்லவைகளை எடுத்து கொள்ளலாம்.

    ReplyDelete
  3. காலத்தின் கோலங்கள் சினிமா வெற்றிதான்

    ReplyDelete
  4. காலத்தின். கோலங்கள் சினிமா என்னும் வெறிதான் ஆட்டிப் படைக்கிறது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.