மோடி நிரந்தர பிரதமர் அல்ல... எதற்கும் ஒர் ஆரம்பம் இருந்தால் அதற்கு ஒர் முடிவும் இருக்கும் இதுதான் இயற்கையின் நீதி ,அளவிற்கு அதிகமான எதுவும் புளித்துவிடும் இன்று அளவிற்கு அதிகமாகப் புகழப்படும் மோடி ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தால் தூக்கி எறியப்படும் நாளும் வரும் அதன் பின் மோடி அத்வானியை விட மிக மோசமான நிலைக்கு சங்கிகளால் புறந்தள்ளப்படுவார்.. இது நிச்சயம் நடக்கும்
பிபிசியின் ஆவணப்படத்தில் சொல்லி இருக்கும் செய்திகள் இன்றைய நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும் அதைப் மீண்டும் அவர்கள் தெரிந்து கொள்வதால் ஒன்றும் நடந்துவிடப் போவதில்லை... அதற்குத் தடை விதிக்காமலிருந்திருந்தால் சில நாட்கள் பேசப்படும் பொருளாகி மறைந்திருக்கும்... ஆனால் அவர்கள் எப்போது தடை போட்டார்களோ அப்போதே அது பரவ தொடங்கி இருக்கிறது அதுவும் 2002 வில் நடந்த நிகழ்வு பற்றி அதிகம் தெரியாத மாணவர்கள் இடத்தில் பரவ ஆரம்பித்து இருக்கிறது 2024 தேர்தலில் அவர்களின் வோட்டு முக்கிய பங்கை வகிக்கும்....
எவ்வளவு மோசமான விஷயங்கள் நடந்தாலும் "விஷயங்கள் அவ்வளவு மோசமாக இல்லை" என்று கூறுபவர்கள் தான் நம்மைச் சுற்றியுள்ளவர்களில் மிகவும் ஆபத்தானவர்கள் அதுமட்டுமல்ல , வெறுப்பு மற்றும் பிரிவினையின் அளவுகள் மிக அதிகமாக உள்ளன, ஆனால் நம்மில் பெரும் பகுதியினர் என்ன நடக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது மற்றும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற நிலையில் இருக்கிறார்கள் ;
நாங்கள் எங்கள் காலியான பணப்பைகளைப் பார்க்கிறோம், ஆனால் மற்றவருக்குப் பணப்பையே இல்லை என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இப்படித்தான் இன்றைய முதியவர்கள் இருக்கின்றனர்..
முதியவர்கள் என்றும் மாற்றத்திற்கு முயற்சி செய்வதில்லை. செய்வதெல்லாம் இளைய சமுதாயம்தான்... அந்த சமுதாயம் பாதிக்கப்படும் போது புயலாக எழுவார்கள்,, இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையை அனுபவிக்கப் பிறந்தவர்கள் பழைய பஞ்சாங்கங்களைப் பார்த்து வாய்மூடிப் பேசாமல் இருப்பவர்கள் அல்ல அவர்கள் வாழ்க்கையை அனுபவிக்க நல்ல வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் நல்ல வசதி வாய்ப்புக்கள் வேண்டும் அதற்குப் பாதிப்பு ஏற்படும் போது அவர்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் அவர்கள்தான் மாற்றத்திற்கு ஒரு வழியாக இருப்பார்கள்
அதனால் மாற்றங்கள் வரும் அந்த மாற்றங்கள் வரும் போது மோடி செல்லாக் காசாக ஆகி இருப்பார் என்பது நிச்சயம்
அன்புடன்
மதுரைத்தமிழன்
மாய பிம்பங்கள் ஒருநாள் வீழ்ந்தே தீரும்... அப்படி இல்லையெனில் அனைத்தும் சீரழியும்...
ReplyDelete