Sunday, January 8, 2023

  

@avargal unmaigal


இந்தியாவில்  தற்போது உள்ள பிரச்சனை மக்கள் படிக்காதது அல்ல

பிரச்சனை என்னவென்றால், மக்கள் கற்றுக்கொண்டதை நம்புவதற்கு போதுமான அளவு படித்தவர்கள், அவர்கள் கற்பித்தவற்றிலிருந்து எதையும் கேள்வி கேட்கும் அளவுக்குக் கல்வி கற்கவில்லை.

அதனால்தான் படித்தவர்களை சங்கிகள் என்று அழைத்துக் கொண்டு இருக்கிறோம்.. அவர்களின் மூளை அதற்கு மேல் செயல்படாதது அல்லது செயல்படுத்தத் தெரியாமல் இருக்கிறார்கள்


எல்லோரும்  தொடர்ந்து செய்வதால் தவறுகளை எப்போதும் சரி என்று சொல்ல முடியாது அது போல யாரும் செய்யாததால் சரியானவை எப்போது தவறுகளாகிவிடுவதில்லை


எளிது : அடுத்தவர்களின் குறைகளைப் பார்ப்பது
கடினம் : நமது குறைகளைக் கண்டு அறிவது

 

@avargal unmaigal



உங்களிடம் இருப்பதிலிருந்து  நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால், நீங்கள் விரும்புவது கிடைத்தாலும்  நீங்கள்  நிச்சயம் மகிழ்ச்சியடைய மாட்டீர்கள்


அன்பு எல்லாவற்றையும் தரும் ஆனால்  எதையும் கேட்காது.


ஏழை தலித் வீட்டில் தலைவர்கள் சாப்பிடுகிற மாதிரி தலைவர்கள் வீட்டில் ஏழை தலித் சாப்பிடுகிற மாதிரி இதுவரை நான் எந்த புகைப்படத்தையோ செய்தியையோ பார்த்ததில்லை..

பெற்றோர்கள் தங்களது அனுபவங்களை வைத்து இன்றைய குழந்தைகளின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முயல்கிறார்கள் ஆனால் இன்றைய குழந்தைகளின் பிரச்சனைகளோ வேறாக இருக்கின்றன. அதைப் பெரியவர்கள் புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை


இன்று நமக்கு பிடித்தவைகள் நாளை நமக்குப் பிடிக்காமல் போகலாம் அது போல பிடிக்காதவைகள் நமக்குப் பிடித்த விருப்பங்களாக மாறலாம். எல்லாம் கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கும் , அதுதான் இயற்கை & வாழ்க்கை,,,


பெண்ணின் அன்பு என்பது அவர்களின் அழகை மெருகூட்டும் அவர்கள் தரும் சிற்றின்பம் அந்த அழகைப் பிரகாசிக்க வைக்கும். அதனால் இந்த 2023 ஆம் ஆண்டு முழுவதும் பெண்களின் அழகு பிரகாசிக்கட்டும்



கோயிலுக்குச் சென்று நாம் கடவுளிடம்  நாம் கேட்பதைத் தரவில்லையே என்று நினைப்பவர்களுக்குச் சொல்வதெல்லாம் இதுதான்.. கடவுள் உங்களின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளைக் கேட்பதில்லை. அவர் உங்களின் இதயத்தின் உணர்வைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப பதில் அளிக்கிறார்.


அன்புடன்
மதுரைத்தமிழன்

08 Jan 2023

1 comments:

  1. மனத்துக்கண் மாசிலன் ஆதல் - எளிதல்ல - முடியாததும் அல்ல...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.