Wednesday, January 25, 2023

 மனித இனத்தை  விலங்கினத்திற்குக் கீழே தள்ளுகிறதா  புதிய டெக்னாலாஜி கண்டுபிடிப்புகள்
  

@avargal unmaigal


மனித இனத்தை  விலங்கினத்திற்குக் கீழே தள்ளுகிறதா  புதிய டெக்னாலாஜி (தொழில்நுட்பம் )கண்டுபிடிப்புகள்


புதிய புதிய தொழில்நுட்பங்கள்  நாள்தோறும் தோன்றினாலும் அதனால் விளையும் நன்மையும் அதே நேரத்தில் அதனால் விளையும் தீமையும் மற்ற இனங்களைவிட மனித இனத்தை அழிவுப் பாதையில் இட்டுச் செல்கின்றன. காரணம் இந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதே ஆறு அறிவு படைத்த மனித இனம்தானே நல்லா கவனியுங்கள். மனித இனத்தைத் தவிர வேறு எந்த இனத்திற்கும் டெக்னாலாஜி உதவாது.


இந்த தொழில்நுட்பங்கள்  வர ஆரம்பிக்கும் முன்பு மனித இனம் தங்களுக்கான தேவையான வேலைகளைப் பகலில் செய்து கொண்டும், மாலை ஆனதும் குடும்பத்தினருடனும் , ,அக்கம் பக்கத்தினருடனும் கூடிக் குலாவி மகிழ்ந்து ,இரவில் நன்றாகத் தூங்கி எழுந்தனர்.


அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றங்கள் ஏற்பட்டு புதிய கண்டுபிடிப்புகள் ஏற்பட்டன, மின்சாரம் லைட் வாகனங்கள் வந்தன. அதனால் இரவு பகலாகியது,  பகலில்  செய்து வந்த வேலைகள் இரவில் செய்யப்பட்டது..  புதிய கண்டுபிடிப்புகளுக்கு முன்னால் மக்கள் இயற்கை உணவுகளை இயற்கையான முறையில் சமைத்து உண்டனர்.. ஆனால் புதிய கண்டுபிடிப்புகள்  அங்கும் நுழைந்தது, அதனால் ,கையில் அரைத்து உண்ட உணவு வகைகள் இயந்திரத்தில் அரைக்கப்பட்டன, இய்றைகை விவசாயம் செயற்கை விவசாயமாக மாற்றப்பட்டது. அங்கு புதிய கண்டுபிடிப்புகள் வந்து உணவில்  விஷம்  கலக்கப்பட்டது .அதனால் பல நோய்கள் உருவாகின. அந்த நோயைக் குணப்படுத்தப் பல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன். அப்படிக் கண்டு பிடிக்கப் பட்ட மருந்து பல சைடு  எப்ஃக்டுகளால் மனிதர்களை அழிக்க ஆரம்பித்தன.

ஆரோக்கியமாக வாழ்ந்து இயற்கையாக மடிந்த இனம் ,இப்போது ஆரோக்கியமற்று முறையில் வாழ்ந்து, செயற்கை கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தியும் மரணிக்க ஆரம்பித்தனர் ,எந்த தொழில்நுட்பத்தின் உதவி இல்லாமல் நீண்ட காலம் வாழ்ந்த மக்கள். இப்போது புதிய டெக்னலாஜி வந்த பின் இளம் வயதிலே மரணிக்க ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளார்கள்.


ஸ்மார்ர்ட் தொலைப்பேசி தொழில்நுட்பம் மனித இனத்தை இன்னொரு அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லுகின்றன என்பதே உண்மை .ஸ்மார்ட்டான மனிதனுக்கு உதவுவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்மார்ட் தொலைப்பேசியைப் பயன் படுத்தி தங்களது நேரங்களைச் சேமித்து பயனுள்ள வகையில் செலவழிப்பதற்குப் பதிலாக அதை ஸ்மார்ட் அற்ற முறையில்  ஸ்மார்ட்டான மனித இனம் பயன் படுத்திக் கொண்டு இருக்கிறது


இந்த ஸ்மார்ட் டெக்னாலஜியின் அடுத்த கட்ட வளர்ச்சியாக ஏஐ டெக்னாலாஜி வளர்ந்து வருகிறது.. இந்த தொழில்நுட்பம்   கொஞ்சமாகச் சிந்தித்துக் கொண்டிருக்கும் மனித இனத்தை அடியோடு சிந்திப்பதை  நிறுத்த செய்யும் ஒரு தொழில்நுட்பமாகவே மாறி வருகிறது.. இப்போதாவது கொஞ்சமாகச் சிந்தித்துப் பேசி எழுதி வருபவர்களை அழிக்கக் கூடிய விதமாக இந்த ஏஐ தொழில்நுட்பத்தின்  அடுத்த கட்டம் இருக்கிறது இதன் படி சொந்தமாக நாம் சிந்தித்து எழுதி வந்த கதை ,கவிதை ,கட்டுரைகளை இப்போது இந்த ஏஜ தொழில்நுட்பமே நமக்கு எழுதிக் கொடுத்துவிடுகிறது அப்படி இருக்கும் போது நமக்குச் சிந்திக்கும்  சக்தியே போய்விடாதா என்ன? அப்படி அந்த ஏஐ தொழில்நுட்பம்  மூலம் எழுதியதைப் படித்துச் சிந்திக்கும் நாம் அந்த  தொழில்நுட்பம்  சொற்படியே சிந்தித்து நாம் மாற்றிச் சிந்திக்க இயலாதவாறு மிருக இனம்போலவே மாறிவிடத்தான் போகிறோம்.

இப்போதே ஆட்டு மந்தை கூட்டம் போலச்  சிந்திக்காமல் பார்வ்ட் செய்திகளை வாட்சப்பில் பரப்பி வரும் நிலையில் அந்த தொழில்நுட்பம்  நம்மை அடிமைப்படுத்திய பின் விலங்குகளை விடக் கீழ்மட்டமாகவே இருக்கும் ஒருவேளை  விலங்கினங்கள் நம்மை விட ஒரு படி  மேலே கூட இருக்கும் காரணம் அது இந்த மாதிரியான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாததால்

இந்த டெக்னால்ஜியின் உச்சத்தில் வசதி படைத்த உயர் குடும்பங்கள் நம்மை அவர்களுக்கு அடிமையாக  ஒரு நாயைப் போலப் பயன்படுத்தும்  அதுதான் வருங்காலங்களில் நடக்கும் ,


தொழில்நுட்பம் நம்மைச் சிறந்ததாக்குகிறது.  அதே சமயத்தில் தொழில்நுட்பம் நம்மை மோசமாக்கவும் ஆக்குகிறது.

முன்பு நாம்  கற்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வோம் ஆனால் அதை இந்த தொழிநுட்பம் மிக எளிதாக்குகிறது. அதனால் சில மணி நேரங்களில் நம் கற்றுக்  கொள்கிறோம் ஆனால் அப்படி நாம் கற்றுச் சேமித்த நேரத்தைச் சரியான முறையில் பயன்படுத்துகிறோமோ என்று பார்த்தால் இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

 தொழில் நுட்பம் வளர்வதற்கு முன்னால் தவறான தகவல்களைப் பரப்பும் ஓநாய்கள் இருந்தன அந்த ஓநாய் கூட்டங்கள்  தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தவறான தகவல்களைப்  வெகு வேகமாகவும் பெரிய அளவிலும் பரப்பி பேரழிவுகளை சில மணிநேரங்களில் செய்து விடுகின்றனர்,.


புதிய டெக்னாலாஜிக்கு எதிரானவன் அல்ல நான்.. என் மனதில் தோன்றியது புதிய டெக்னாலஜி மனித இனத்திற்கு ஆக்கத்தைக் கொடுத்ததைவிட அழிவைக் கொடுத்ததுதான் அதிகமோ என்று சமுதாயத்தைப் பார்க்கும் போது என் மனதில் எழுகிறது அதன் விளைவே இந்த பதிவு

உங்களுக்கு நேரம் இருந்தால்  உங்கள் எண்ணங்களையும் இங்குப் பதியலாம்


அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. நவீனங்களை பயன்படுத்தும் முறையில் தான் அனைத்து நல்லது கெட்டதும்...

    ReplyDelete
  2. தொழில்நுட்பத்தின் பயனறிந்து அதைத் தேவைக்கேற்ப மட்டும் பயன்படுத்துவது நல்லது.

    பொருளாதரத்தில் முதல் பாடமே நீங்கள்தான் பணத்தின் எஜமானனாக இருக்க வேண்டும் பணம் உங்களின் எஜமானனாக இருக்கக் கூடாது என்பது போல் நாம் தான் தொழில்நுட்பத்தை ஆட்டுவிக்கும் எஜமானனாக இருக்க வேண்டுமே அல்லாமல் தொழ்ல்நுட்பத்தின் அடிமையாகிவிடக் கூடாது. எல்லாவற்றிலும் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு. கத்தி யை சொல்வது போல்தான் இதுவும்.

    கீதா

    ReplyDelete
  3. இயற்கை சில வேலைகளை தானே செய்து கொள்ளுமாம்.  படைப்பு அதிகமாகிவிட்ட நிலையில் குறைக்க இயற்கையே விதியாய் இந்த மாதிரி சீரழிவுகளுக்கு வித்திடுகிறதோ என்னவோ...

    ReplyDelete
  4. நல்ல கட்டுரை. சிந்திக்க வைக்கிறது.
    மனித குலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்றால் அந்த கண்டுபிடிப்பை நிறுத்தி விடுவதே நல்லது. சிகரெட் விற்றுக் கொண்டே "உடல் நலத்துக்கு கேடு" என்று சொல்வதை போல இருக்கிறது.

    ReplyDelete
  5. டெக்னாலாஜி ஆல் ஆக்கமும் உண்டு அழிவும் உண்டு என்பதை உணர்த்தும் கட்டுரை நன்று.
    மனிதர்கள் தான் சிந்தித்து நடக்க பழகிக் கொள்ளவேண்டும்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.