Saturday, January 21, 2023

 

@avargalunmaigal

தமிழ்நாட்டை தமிழகம் என்று  அழைத்த போது பொங்கல் வைத்தவர்கள் குடி நீரில் மலம் கலந்த போது பொங்கல் வைக்க மறந்தது ஏன்?


அவர்கள் எதிர்க் கட்சியைச் சார்ந்தவர்களே தவிர அவர்கள் எங்கள் எதிரிகள் அல்ல


பாண்டே வீட்டு நாய் செத்தாலும் ஹெச் .ராஜா  வீட்டு மாடு  குட்டி போட்டாலும்.. குரு மூர்த்தி வீட்டுக் கழுதை குசு போட்டாலும்  எஸ்வி  சேகர் வீட்டில் பால் திரிந்தாலும் நேரில்  போய்  நலம் விசாரிப்பார்கள்  அவர்களுக்குத் தேவையானதை  கூடச் செய்து தருவார்கள் திராவிடத் தலைவர்கள் காரணம் கேட்டால்

அவர்கள் எதிர்க் கட்சியைச் சார்ந்தவர்களே தவிர அவர்கள் எங்கள் எதிரிகள் அல்ல என்று விளக்கம் கூட தருவார்கள் ஆனால் குடி நீரில் மலம் கலந்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுக்கக் கூடாத  நிலையில்  இருக்கிறார்கள்

கடந்த சில வாரங்களாக ஸ்டாலின் & அவர் கட்சியைச் சார்ந்த உபிக்களும் ஒரு பக்கம் தமிழ்நாடு என்று கதறிக் கொண்டு இருக்கிறார்கள்  ஆளுநர் ரவியும் & மேல் மட்டத்தைச் சார்ந்த சங்கிகளும் தமிழகம் என்று கதறிக் கொண்டு இருக்கிறார்கள் இதற்கிடையில் அண்ணாமலையும் கீழ்மட்டத்தைச் சார்ந்த சங்கிகளும் சம்பந்தம் சம்பந்தமில்லாமல் கதறிக் கொண்டு மட்டும் இல்லாமல் விமான கதவு திறந்ததற்குச் சிறு பிள்ளைகள் கூட நம்ப முடியாத அளவிற்குச் சரடுகள் விட்டுக் கொண்டிருக்கிறார்கள் .  அதிமுக தலைவர்கள் மிக்ஸர் சாப்பிட்டுக் கொண்டு  அதன் உறுப்பினர்கள் கோமாவில் கிடப்பதைச் சட்டை செய்யாமல் இருக்கிறார்கள் . மக்களோ சமுக அக்கறை என்பது கொஞ்சம் கூட இல்லாமல் வாட்ஸப் பார்வோர்ட்டுகளை பண்ணிக் கொண்டும், வயசான ஆண்கள் பெண்களை இன்பாக்சீல் கொஞ்சிக் கொண்டும், இளம் பெண்களோ  ரீல்ஸில் தங்களது உடம்பையும் முகச்சுழிப்புகளியயும் காண்பித்துக் கொண்டும், மீதமுள்ளவர்கள் வாரிசா துணிவா என்றும் மற்றும் பலர் தாங்கள் எழுதிய கவிதை, கதை புத்தகங்களை ப்ரோமோட் செய்யும் முயற்சியிலும் இருக்கிறார்கள். இதற்கிடையில் பொங்கலும் வந்து போனது..

ஆனால் இவர்களுக்கு மத்தியில் புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டில் மலம் கலந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் இடும் கூக்குரல்கள் இந்த தலைவர்கள்  மற்றும் சமுகத்தைச் சார்ந்த மக்களின் காதிலே விழவில்லை அல்லது விழுந்தும் விழாதது மாதிரி நடித்துக் கொண்டு இருக்கிறார்கள். காரணம் மலம் இவர்களின் சாப்பாட்டுத் தட்டில் விழவில்லை அல்லவா

இதுவரை எந்த தலைவர்களும் இந்த பகுதிக்கு சென்று  அங்குள்ள மக்களிடம் நலம் விசாரித்தாக ஒரு செய்திகள் கூட பார்க்கவில்லை


ஒரு செய்தியில் தமிழக அமைச்சர் ஒருவர்  வேங்கைவாயலில் உள்ள ஒவ்வொரு தலித் வீட்டிற்கும் புதிய குடிநீர் குழாய்கள் மற்றும் குழாய்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அருகிலுள்ள எறையூர் கிராமத்தில் உள்ள மேல்நிலைத் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்படும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வேங்கைவாயல் ஆதி திராவிடர் குடும்பங்களுக்கு பிரத்யேகமாக புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான முன்மொழிவு மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஏண்டா எருமை மாடுகளா மீண்டும் இவர்களுக்கு என பிரத்யேகமாக  நீர்த்தேக்க தொட்டி கட்டினால் அதில் மீண்டும் மலம் கலக்க மாட்டார்களா என்ன? அடேய் கூமுட்டைகளா கட்டும் தொட்டி அந்த வட்டாரத்தில் உள்ள எல்லாம் மக்களுக்குமாக கட்டினால் அதில் மலம் கலக்க வாய்ப்பில்லையே


டீகடைகளில்தான் தனி டம்பளர் என்றால் குடிநீர் டேங்குகளிலுமா தனி தொட்டி?


அன்புடன்
மதுரைத்தமிழன்


2 comments:

  1. எல்லோருக்கும் பொதுவான நீர்த்தேக்க தொட்டிதான் நல்லது.
    ''எல்லோரும் ஓரு மதம் எல்லோரும் ஓர் இனம் நம் எல்லோரும் இந்திய மக்கள்" என்பதை மறந்து விட்டார்கள் அரசியல் வாதிகள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.