புதிய தமிழ் எழுத்தாளர்களும் அவர்களின் விசித்திரமான நடத்தைகளும்
என்ன சார் நான் புத்தகம் வெளியிடு செய்யும் போதெல்லாம் வாழ்த்துறீங்க ஆனால் இதுவரை நீங்க என் புத்தகம் வாங்கின மாதிரியும் தெரியலை அதற்கு ஒரு விமர்சனம் கூட எழுதல என்று ஒரு பேஸ்புக் நண்பர் குற்றம் சாட்டினார். ஒரு நொடி யோசித்து அவரிடம் சொன்னேன் உங்களுக்குக் குழந்தை பிறந்திருக்கிறது என்று தெரிந்ததும் வாழ்த்தினேன்.. அதற்காக அந்த குழந்தையை நான் வாங்கி வளர்க்கெல்லாம் முடியாதுங்க அது போலத்தான் இதுவும்.. அவ்வளவுதான் மனுஷன் என்ன நினைத்தாரோ என்னை ப்ளாக் செய்துவிட்டுப் போய்விட்டார்
சாப்பிடும் உணவாக இருந்தாலும் சரி கேட்கும் இசையாக இருந்தாலும் சரி படிக்கும் புத்தகமாக இருந்தாலும் சரி பார்க்கும் படமாக இருந்தாலும் சரி ஒவ்வொருத்தருக்கும் ஒரு விதமான ரசனைகள் இருக்கும். அது கூட புரியாமல் நான் புத்தகம் எழுதி வெளியிட்டு இருக்கிறேன் அதனால் நீங்க அதனை வாங்கி படித்து விமர்சனம் எழுதுனும் என்று அடம் பிடித்தால் எப்படி?
உதாரணத்திற்கு நீங்க நல்ல தரமான சுவையான பீப் பிரியாணி செய்து இருக்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள் & உங்களுக்கு நான் வெஜ் சாப்பிடாத கட்டுப்பெட்டியான ஒரு அய்யர் உங்கள் நண்பராக இருக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள் அவரிடம் சென்று நண்பரே நான் நன்றாக பிரியாணி செய்து இருக்கிறேன் அதை வாங்கி சாப்பிட்டு டேஸ்ட் எப்படி இருக்கிறது என்று விமர்சனம் செய்தால் எனக்குச் சந்தோஷமாக இருக்கும் என் நீண்ட நாள் நண்பர்தானே எனக்காக இதைக் கூடச் செய்யக் கூடாதா என்று கேட்பது மாதிரி அல்லவா இருக்கிறது இன்னும் கொச்சையான சொன்னால் எனக்கு இலக்கியத் தரமான புத்தகங்கள்தான் படிக்கப் பிடிக்கும் என வைத்துக் கொள்ளுங்கள் அப்படிப்பட்ட என்னிடம் நீங்கள் எழுதிய சரோஜாதேவி ரகமான புத்தகங்களைப் படிக்கச் சொன்னால் எப்படிங்க..
நான் இணையத்தில் அறிமுகமான சிலர் எழுதிய புத்தகங்களைப் படித்து இருக்கிறேன்.. அதில் கணேஷ் பாலா. சேட்டைக்காரன் நண்பர் விசு எழுதிய புத்தகங்கள் மட்டுமே என்னைச் சிரிக்க வைத்தன . இணையத்தில் பழக்கமான ஒரு பெண் சொன்ன காரணத்தால் அராத்து எழுதிய புத்தகம் ஒன்றையும் வாங்கி படித்தேன் எனக்குப் பிடிக்கவில்லை அந்த புத்தகம் மிகவும் நகைச்சுவையான புத்தகம் என்று சொன்னதால் வாங்கினேன் அதனால் அராத்து எழுதியதை மோசம் என்று சொல்லவில்லை அந்த புத்தகத்தை விட பேஸ்புக்கில் அவர் எழுதும் பல பதிவுகள் எனக்கு பிடித்துத்தான் இருக்கிறது , சமுக தளங்களில் எழுதிப் பதிவிடும் பல பெண்கள் & ஆண்கள் பலர் அட்டகாசமான பதிவுகளை வெளியிடுகிறார்கள் ஆனால் அவர்களே புத்தகங்கள் எழுதி வெளியிடும் போது அதை வாங்கி படித்த பின் அந்த புத்தகங்கள் அவ்வளவு நன்றாக இல்லை என்பது என் அனுபவமாக இருக்கிறது.
இன்று நீங்கள் வெளியிடும் ஒரு புத்தகம் ஒருவரின் ரசனைக்கு ஏற்றவாறு இல்லாமல் போகலாம் அது தெரியாமல் வாங்கி படித்து ஏமாந்தவர் உங்களின் புத்தகங்களைப் பற்றி தவறான அபிப்பிராயம் கொண்டு இருக்கலாம் ஒருவேளை எதிர்காலத்தில் நீங்கள் வெளியிடும் புத்தகங்களை இவரைப் போல ரசனைக்குரியவர்களின் புத்தகமாகக் கூட இருக்கலாம் ஆனால் அவர்களுக்கு உங்கள் மீதுள்ள அபிப்பிராயத்தின் காரணமாக அது அவர்களைச் சென்று அடையாமல் போகலாம்
என்னுடைய சிறுவயதில் ஜெயகாந்தன், அகிலன் பார்த்தசாரதி ஜானகிராமன் பாலகுமாரன் இந்துமதி சிவசங்கரி இது போன்ற பல எழுத்தாளர்களின் புத்தகங்களைப் படித்து இருக்கிறேன் ஆனால் அவர்கள் போல இந்த காலச் சூழ்நிலைக்கு கேற்ப எழுதும் புதிய எழுத்தாளர்களை நான் அறியவில்லை அப்படி யாரவது இருந்தால் எனக்கு அறிமுகப்படுத்துங்களேன்
என்னைப் பொறுத்தவரை ஒரு புத்தகத்தைப் படித்து முடித்த பின் நாம் நமக்குப் பிடித்த ஏதோ ஒன்றை இழந்தது போல இருந்தாலோ அல்லது அதீத மகிழ்ச்சியைத் தந்தாலோ அந்த புத்தகத்தை மிகச் சிறப்பான புத்தகம் என்பேன்
அன்புடன்
மதுரைத்தமிழன்
தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்
ReplyDelete