Wednesday, January 25, 2023

 மோடியின் பயமும் ராகுலின் நம்பிக்கையும்
  

@avargalunmaigal


இன்றைய காலத்தில் மோடிக்கும் ராகுல்  காந்திக்கும் உள்ள  வித்தியாசம் தலைவருக்கும் தலைமை தாங்கி வழி நடத்திச் செல்பவருக்கும் உள்ள வித்தியாசம்தான்.

அதில் முதல் வகை மோடி அதாவது தலைவர்.  ஆனால் ராகுல் காந்தி இரண்டாவது வகையில் வருகிறார் அதாவது தலைமை தாங்கி வருபவராக இருக்கிறார்.

இந்த இருவருமே பயன்படுத்த  இரு கருவிகள் உண்டு அது பயம் (Fear)  மற்றும் நம்பிக்கை (Hope) என்பதாகும். இந்த கருவியை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொருத்து அவர்கள் மக்களிடம் ஒரு உறவை ஏற்படுத்துகிறார்கள்.


ஒரு தலைவர் நம்பிக்கையின் அடிப்படையில் உறவை ஏற்படுத்தும்போது அவருடைய சொந்த பயம் குறைகிறது. இதைத்தான் ராகுல் இப்போது பயன்படுத்திக்   கொண்டு நாடு முழுவதும் பயணித்து வருகிறார்.. ஆனால் மோடியோ  பயத்தில் ஊடகத்தினரையும் சந்திக்க மறுத்து தனியறையிலிருந்து கொண்டு செயல்படுகிறார் அப்படி அவர் செய்வதால்  அவருடைய நம்பிக்கை குறைகிறது.


 யோசித்துப் பாருங்கள் அந்த அவநம்பிக்கை காரணமாகவே பல தவறான வழிகளில் இறங்கிச் செயல்பட்டு வெற்றி கண்டு வருகிறார். இந்த தவறான முறையில் அவர் பெரும் வெற்றி நீடித்து நிற்கப்போவதில்லை.. கடந்த கால உலக  வரலாற்றைப் பார்த்தால் தவறான வழியில் தலைவர்களாக நீடித்தவர்கள் கடைசியில் மக்களால் வெறுக்கப்பட்டுத் துரத்தி அடிக்கப்பட்டுச் சாக அடிக்கப்பட்டதாகவே இருக்கும்.

ஒருவருக்கு அவநம்பிக்கை வரும் போதுதான் தவறான வழிகளில்  இறங்க முயல்வார்கள் . இப்படித்தான் தலைவர்கள் தவறான சட்டங்களை இயற்றி அதிகார மொத்த பலத்தையும் தன் கைக்குள் கொண்டு வர முயன்று, கடைசியில் அந்த அதிகாரத்தினால் தன்னை விமர்சிப்பவர்கள் எல்லோரையும் எதிரிகளாகப் பாவித்து ,அவர்களைப் பலி வாங்குவார்கள் .இது ஒரு தொடர்கதையாக மாறி ,அது கடைசியில் சாதாரண பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் போது ,நாட்டில் புரட்சி ஏற்பட்டு தனக்கு ஆதரவாக இருந்தவர்களே எதிரிகளாக மாறி தலைவரை ஓட ஓட வைப்பார்கள்..


அப்படி நடக்கும் ஒரு சூழ்நிலை இந்தியாவிற்குள் வரும் காலத்திற்குத் தூரம் அதிகம் இல்லை என்பதுதான் என் கருத்து


நிதித்துறை ,நீதித்துறை ,தேர்தல் ஆணையம் இப்படிப் பல துறைகளை  தன் கால்களில் போட்டு மூட்டைப் பூச்சியை நசுக்குவது போல நசுக்கிய பிரதமர் கடைசியில் ஜன நாயகத்தின் குரல் வளையை நசுக்கும் இடத்தில் வந்து நிற்கிறார். அதன் விளைவே பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தைத் தடை செய்ய முயல்வது


காலம்  மாறும் அதுவரை நம்மில் பலரை இழந்தாலும் பொறுமையுடன் பொறுத்துக் காத்திருப்போம்..


American job losses and the situation of Indians
அமெரிக்காவில் வேலை இழப்பும், இந்தியர்களின் நிலையும்
 



அன்புடன்
மதுரைத்தமிழன்



25 Jan 2023

1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.