Thursday, January 5, 2023

 

@avargalunmaigal

இன்பநிதியின் புகைப்படமும் பூமர் ,சங்கி மாமா& மாமிகளின் வயிற்று எரிச்சலும்.

இன்பநிதியுடன் ஒரு சிறு பெண் இருக்கும் போட்டோ வைரலாகி நேற்றிலிருந்து பேசும் பொருளாக இருக்கிறது. இன்பநிதிக்கு வயது இருபதோ அல்லது அதற்குச் சற்று அதிகமாக இருக்கலாம் .அவர் அவரின் தோழியோ அல்லது காதலியோ அவருக்கும் இந்த வயதுதான் இருக்கும். அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோ .அதுவும் அவர்களின் வீட்டு ஹாலில் ( நன்றாகக் கவனியுங்கள் பெட் ரூமில அல்ல & செல்ஃபி புகைப்படமும் அல்ல) அவர்களுடன் இருந்த நண்பர் ஒருவரால் எடுக்கப்பட்ட போட்டோ  ,அதில் அவர்கள் இருவரும் நெருக்கமாக ஒருவரை ஒருவர் தொட்டுக் கொண்டு இருக்கும்படியான புகைப்படம்தான் வைரலாகி இருக்கிறது.


அதை என்னமோ அவர் ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து பாலியல் பலாத்காரம் பண்ணிய  ரேஞ்சுக்கு பூமர் மாமாக்களும் சங்கிகளும் பேசியும் எழுதியும் கொண்டு இருக்கிறார்கள். இன்பநிதி  நாட்டில் மிக அதிகாரத்தில் இருக்கும் ஒருவரின் பேரன்தான் .ஆனால் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி எந்த தவறையும் இது வரை செய்யவில்லை & செய்யத் தெரியாத ஒரு சிறுபிள்ளைதான்.

இன்பநிதியும் அவரின் தோழி அல்லது காதலி நெருக்கமாக இருப்பது மாதிரிதான் ,இன்றை காலத்தில் பல இளம் வயது சிறுவர்கள் இருக்கிறார்கள் இதில் எல்லா குடும்பத்து பிள்ளைகளும் அடங்கும் இதில் உங்கவிட்டு பிள்ளை என் வீட்டுப் பிள்ளை என்பதில் விதிவிலக்கு அல்ல. இதுதான் உண்மை.. எங்க வீட்டுப் பிள்ளைகள் அப்படி எல்லாம் கிடையாது என்றால் நீங்கள் மிகப் பெரிய அப்பாவிதான். அதற்கு மேல் உங்களை என்ன சொல்வது என்பது எனக்குத் தெரியவில்லை..

இன்றைய காலத்தில் சிறுவர்கள் மட்டுமல்ல .பெரிய நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஆண்களும் பெண்களும் எந்தவொரு விதர்ப்பமும் இல்லாமல் இப்படித்தான் நெருக்கமாக இருக்கிறார்கள் (ஏன் எனக்குத் தெரிந்த இங்கு அமெரிக்காவில் வசிக்கும் கல்யாணம் ஆன இன்பநிதியைவிட வயது அதிகமான் பிள்ளைகளைப் பெற்ற தமிழ் பெற்றோர்கள் கூட தங்களது தோழி தோழன் கூட இப்படி நெருக்கமாகத்தான் பழகி வருகிறார்கள்)

இன்பநிதி செய்தது தவறு என்றால் இன்று பீஸ், பார்க் ,தியோட்டர் ,மால் ,ட்ரெய்ன், பஸ், ஆட்டோ ,பைக்கில் பார்க்கும் ஆண் பெண் அனைவரும் தவறுகள் செய்கிறார்கள், அவர்கள் யாரும் வேறு அல்ல அவர்கள் உங்களின் குழந்தைகள்தானே. என் குழந்தைகள் அப்படி அல்ல என்று சொல்லும் பெற்றோர்களே உங்கள் குழந்தைகளின் செல்போனில் உள்ள போட்டோக்கலையோ அவர்கள் பயன் படுத்து சமுக இணையதள கணக்கை நீங்கள் அறிய முடிந்தால் அதனைப் பாருங்கள் அப்போது தெரியும் உங்கள் பிள்ளைகளின் லட்சணம்

இன்று இன்பநிதியின் புகைப்படத்தை ட்ரோல் செய்பவர்கள் யார் என்று பார்த்தால் நம்மால் அந்த வயதில் அப்படி நெருக்கமாக எந்த பெண் குழந்தைகளிடமும் இருக்க நம் சமுதாயம் அந்தக் காலத்தில் நம்மை அனுமதிக்க வில்லையே என்று வயிற்று எரிச்சலில் இருப்பவர்களாகத்தான இருப்பார்கள்,

அல்லது தங்களின் எதிர்க்கட்சியான திமுகவின் செயல்பாட்டிற்குச் சரியான பதில் அடி கொடுக்க முடியாதவர்கள் .அவர்களின் வீட்டுக் குழந்தைகளை இழிவு படுத்தி அவர்களை நிலைகுலையச் செய்யலாம் என்ற முட்டாள்தனமான செயல்பாட்டில் இருப்பவர்களாகவே தெரிகிறார்கள்

பாரதிய ஜனதா கட்சி பாலிய ஜனதா கட்சியாக மாறி கேவலப்படுகிறதே என்று ஆதங்கத்தில் இப்படி நீங்கள் செய்யும் ட்ரோல் உங்களை நோக்கியே பூமரமாக வந்து தாக்குகிறது என்பது உங்களுக்குத் தெரியாது காரணம் நீங்கள் சங்கிகள் அல்லவா

 
@avargal unmaigal



அன்புடன்
மதுரைத்தமிழன்

 

பேஸ்புக்கில் எங்கள் ஊர்க்காரர் Elangovan Muthiah எழுதி பதிவிட்டது. படித்ததில் பிடித்தது

 
 

 இன்பநிதி தன் தோழியுடன் இருக்கும் புகைப்படம் வெளியான விவகாரத்தில் சோஷியல் மீடியாவில் நம் மக்களின் எதிர்வினை எனக்கு சற்றே ஆச்சரியம்தான்.

பெரும்பாலானவர்கள் "இப்போதெல்லாம் காலம் மாறிவிட்டது, இளைஞர்கள் காதலிப்பதோ, தங்களது காதலன், காதலியோடு இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவதிலோ என்ன தவறு?" என்றே கேட்கிறார்கள்.

என் அலுவலகத்தில் பெரும்பாலான நண்பர்கள் இந்த விவகாரத்தை "இதுல என்ன இருக்குன்னு இத நியூஸாக்கிட்டு இருக்கானுக, லூஸுப்பயலுக" என்று கடந்து போனதையும் பார்த்தேன்.
அதிலும் இந்த விவகாரத்தில் பெண்கள் ஆண்களை விட ஒரு படி மேலாகவே முற்போக்காகச் சிந்திப்பதைக் காண முடிந்தது உள்ளபடியே மகிழ்ச்சிதான். கிட்டத்தட்ட கிருத்திகா உதயநிதியின் கருத்தையே பெரும்பாலான, பதின்பருவ வயதில் பிள்ளைகளைக் கொண்ட பெண்கள் வெளிப்படுத்தியிருப்பதை நான் மிக ஆரோக்கியமான மாற்றமாகவே பார்க்கிறேன்.

ஆண், பெண் இருபாலர் பள்ளிகளில் படிக்கும், பதின்பருவத்திலிருக்கும் என் வயதொத்தவர்களின் பிள்ளைகளின் கதைகள் எங்கள் காதுகளை எட்டவே செய்கிறது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் என் மகனிடம் பேசும்போதே, அவனது வயதில் பெண் பிள்ளைகளை நான் அணுகிய விதத்திற்கும் இந்தத் தலைமுறை அணுகும் விதத்திற்குமான பாரதூர வித்தியாசம் எனக்குப் புரிகிறது. அந்த வயதில் அவர்கள் எங்கேயோ முன்னேறிச் சென்று கொண்டிருக்க, நாங்கள் எங்கேயோ இருந்திருக்கிறோம்.

உண்மைதான்... பெண்கள் என்றாலே சகோதரி அல்லது காதலி என்ற இருமைக்குள் மட்டுமே வைத்து சிந்திக்கத் தெரிந்த ஆண்களாகவும், ஆண் பிள்ளைகளுடன் பேசினாலே அது பெரும்பாவம் என்று சொல்லி வளர்க்கப்பட்ட பெண்களாகவும் 70, 80, 90 களின் மனிதர்களான, இன்னமும் பல விஷயங்களில் பூமர்த்தனத்தை விட முடியாத எங்கள் தலைமுறை இது போன்ற விவகாரத்தை இப்படிக் கையாண்டது ஆச்சரியமளித்தது என்றாலும், இதுதான் இன்றைய யதார்த்தம் என்பதைப் புரிந்து கொள்ள முயல்பவர்களாகவே இருக்கிறோம் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது.

இதில் வேறு சில தரப்புகளும் உண்டு.

"என்ன இருந்தாலும் படிக்கற வயசுல.." என்று ஆரம்பிக்கும் பல ஆண்கள். இந்த பூமர்கள் ஆண், பெண் உறவு ஆரம்பித்த காலத்திலிருந்தே பூமர்கள்தான். இவர்களைத் திருத்தவே முடியாது. இதற்குப் பின்னாலிருக்கும் சாதிய மனநிலை / பற்று அவர்களுக்கு ஏற்படுத்தும் மனத்தடை ஒன்றிருப்பதை மறுக்க முடியாது.


இன்னொரு வகை... பல இஸ்லாமிய நண்பர்கள். அவர்கள் இந்த விவகாரத்தில் டெலிகேட் பொஸிஷனில் இருக்கிறார்கள். இது பாஜக ஆரம்பித்த விவகாரம் என்பதால் இதை அவர்களால் ஆதரிக்கவும் முடியாமல், அதே நேரம் மத அடிப்படைவாதத்தில் அவர்களது வளர்ப்பிலேயே ஊறியிருப்பதால், மாறி வரும் உலக நடைமுறையை ஏற்றுக்கொண்டு இந்த விவகாரத்தில் முற்போக்குப் பார்வையில் கருத்தும் தெரிவிக்க முடியாமல் அவர்கள் கள்ள மௌனம் காப்பது சிரிப்பை வரவழைக்கத்தான் செய்கிறது.

மூன்றாவது சங்கிகள்...
இயல்பான இணை தேடலுக்கும், காதலுக்கும், பாலியல் அத்துமீறல்கள், வக்கிரங்களுக்குமான வித்தியாசம் தெரியாத கூட்டம் அது. ஆண், பெண் உறவை காமத்துடன் மட்டுமே இணைத்துப் பார்க்கும் மனநிலை கொண்ட அவர்களால் இந்த வேறுபாட்டை எந்தக் காலத்திலும் உணரவே முடியாது என்பதால்தான் அவர்கள் சங்கிகளாகவே இருக்கிறார்கள். அதையும் அவர்கள் இந்த நாட்டின் கலாச்சாரம் என்ற பெயரில் வெளிப்படுத்தும் ஆபாசத்தை வேறு நாம் சகித்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது.

மொத்தத்தில் ஒரே ஒரு மகிழ்ச்சி மிச்சமிருக்கிறது.

சங்கிகளின் பிற்போக்குத்தனமான ஒவ்வொரு நடவடிக்கையிலும், பெரும்பான்மை தமிழ்நாட்டு மக்களின் பொது மனநிலை தெரிந்தோ, தெரியாமலோ முற்போக்காக ஒரு அடி எடுத்து வைக்கிறது என்பதை உணர்வதுதான் அது.


7 comments:

  1. பாப்பான் பலருக்கும் குழந்தை கொடுப்பானாம் - பெருமிதத்துடன் சொல்வது நவீன கால மாமி...(?)

    ReplyDelete
  2. சுத்த பேத்தலான பதிவு
    பியூன் வேலைக்கு கூட தகுதியில்லாத டோபா தலையன் முதல்வராக இல்லாவிட்டால் இன்பநிதி தகவலை யாரும் படிக்க மாட்டார்கள் . முதல்வராக இல்லாவிட்டால் முதல்வரின் மாப்பிள்ளை வாங்கிய பதினாலு கோடி வாட்சை யாரும் கண்டு கொண்டிருக்க மாட்டார்கள்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  3. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தியாவை ஆள்வது ஆளப்போவது பிராமணர்களே . அவர்களுக்கு மாற்று நிச்சயம் டோபா தலையன் மாதிரி மனநலம் குன்றியவர்கள் இல்லை

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  4. சபாஷ் இன்பா . தேவ தாசி குடும்பத்தின் பெருமையை நிலை நாட்டிவிட்டாய்
    கருணாநிதி விலைமாதுகளுக்கு பணத்தை கொடுக்காமல் அடித்து பிடுங்கினார் என்று வனவாசத்தில் கண்ணதாசன் சொல்லியிருந்தார்
    ஸ்டாலின் பாத்திமா பாபுவை விரட்டி கை கழுவினான் என்று சொல்வார்கள் . உதயநிதி ஆண்ட்ரீயாவுக்கு பணம் கொடுக்காமல் வைத்திருந்து அடித்து விரட்டினான்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.