Sunday, January 22, 2023

   ஐ மிஸ் மை வொய்ப்
 
  

@avargalunmaigal



எனது  திருமணம் நடந்து 26 Years, 7 Months, 9 Days ஆகிறது இன்றோட.. இந்த இடைப்பட்ட காலத்தில் நானும் என் மனைவியும் பிரிந்து இருந்த நாட்கள் என்றால் மொத்தம்  2 மாதங்கள் மட்டுமே .அதுவும் அவள் அலுவலகம் விஷயமாக சில நாட்கள் இங்குள்ள வேறு மாநிலத்தில் சென்று பணியாற்றியதும் ,ஒரு வாரம் நான் இல்லாமல் என் மகளுடன் இங்கு வேறு மாநிலத்தில் இருக்கும் அவளின் தங்கை வீட்டிலிருந்த நாட்களும், ஒரு மாத காலம் என் மனைவியும் மகளும் இந்தியாவில் உள்ள அவளின் பெற்றோர்கள் வீட்டிலிருந்ததும்தான். இப்படிப்பட்ட நாட்களைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் மொத்தம் 2 மாதங்கள்தான் வரும்.


இப்போது மீண்டும் ஒரு பிரிவு வந்து இருக்கிறது. இங்கு வசித்த என் மனைவியின் பெற்றோர்கள் இந்தியாவிற்குச் சென்று  கொஞ்ச நாள் இருக்கலாம் என்று சென்றனர்.. அவர்கள் சொல்லும் போது நான் சொன்னது வயதான காலத்தில் ஒரு இடத்தில் இருப்பதுதான் நல்லது இந்தியாவிற்கு எல்லாம் செல்ல வேண்டாம் அப்படி நீங்கள் சென்றால் திரும்பி வரும் போது ஒருவராகத்தான் வர முடியும் என்றும் சொன்னேன். அவர்கள் நாம் சொல்வதையெல்லாம் வா காதில் வாங்குவார்கள் அவர்கள் விருப்பப்படி சென்றார்கள்.


@avargalunmaigal




அவர்கள் விருப்பப்படி சென்றாலும், நான் சொன்னது நடந்துவிடும் போலத்தான்  இருக்கிறது. இப்போது மாமனாரின் நிலை சீரியஸாக இருக்கிறது அதனால் என் மனைவி மற்றும் அவளின் தங்கை இந்தியாவிற்குச் சென்று இருக்கிறார்கள்.


என் மனைவி இங்கு இருந்து சென்று  5 நாட்கள்தான் ஆகி இருக்கும். ஆனால் என் மனதோ எதையோ இழந்தது போல இருக்கிறது. அவளை டிபென்டெண்ட் பண்ணி என் வாழ்க்கை இல்லை. நான் வேலைக்குச் சென்று வந்தாலும் வீட்டில் சமைப்பது பாத்திரம் கழுவுவது வீட்டைச் சுத்தம் செய்வது துணி துவைத்து ஐயர்ன் பண்ணுவது கடைக்குச் சென்று வீட்டுக்குத்  தேவையான பொருட்களை வாங்குவது எல்லாமே நான்தான் சில சமயங்களில் மனைவியும் இதைச் செய்வதுண்டு என்றாலும் பெரும்பான்மையான நேரங்களில் இதை எல்லாம் செய்வது நான் தான் என்றாலும் அவள் இல்லாமல் இருப்பது என்பத்து ஏதோ மாதிரியான ஒரு உணர்வைத் தருகிறது. எங்களது  திருமணம்  காதல் திருமணம் என்றாலும் சில சமயங்களில் அதாவது கடந்த காலங்களில் கருத்து வேறுபாடுகள் காரணமாக சில மாதங்கள் கூட  பேசாமல் இருந்து இருக்கிறோம். ஏன் இப்போது  கூட எங்களிடையே கருத்து வேறுபாடுகள் இல்லையென்றாலும் அவரவர் செளகிரியம் வேலை காரணமாகப் படுப்பது என்பது தனித் தனி அறை என்றாலும் அப்போது இல்லாத உணர்வு இப்போது அவள் வீட்டில் இல்லாத போது எழுகிறது.

நான் இல்லாமல் அவளது பெற்றோர்கள் வீட்டிற்கோ அல்லது தங்கையின் வீட்டிற்கோ சென்ற போது அவளுக்குக் கிடைக்கும் சந்தோச அனுபவங்கள் நான் அவள் உடன் செல்லும் போது கிடைக்கும் சந்தோஷத்தை விட மிகக்  குறைவுதான். அதனாலோ என்னவோ அவள் நினைப்பு மீண்டும் மீண்டும் வந்து செல்கிறது

என் மகள் வேறு மாநிலம் சென்று படிக்க சென்றபோது என் மனைவி மீதான என் அக்கறையாகட்டும்  உணர்வாகட்டும் சற்றே அதிகமாகத்தான் இருந்தது..

இளமை காலத்தில் ஏற்படும் காதல் உணர்வை விட வயதாகும்  போது ஏற்படும் உணர்வு அலாதியானது......

மீண்டும் சொல்கிறேன் ஐ மிஸ் மை வொய்ஃப்


அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. நீங்கள் சொல்வது உண்மை. முழுமை பெற்ற காதல் என்றால் முதுமை வரை கூட வரும் என்று பாடலில் சொல்வது போல வயது ஆக ஆகதான் அன்பும் பாசமும் அதிகமாகும். கருத்து வேறுபாடு இல்லாமல் இருக்க முடியாது.
    உங்கள் மாமனார் உடல் நிலை சரியாக வேண்டும்.

    ReplyDelete
  2. உங்கள் ஆதங்கம் புரிகிறது .விரைவில் மாமனார் நலமாகி மனைவி ஊரிலிருந்து திரும்பி வர வேண்டுவோம்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.