ஊரில் நாலு பேர் மௌனமாகப் பேசுவதை நான் உரக்கப் பேசுகின்றேன் அவ்வளவுதான்
அமைதிக்கான நோபல் பரிசு பெற வேண்டும் & ஒரு வித புனிதர் பதவியை அடைய வேண்டும் என்ற மோடியின் கனவைத் தகர்ந்துவிட்டது பிபிசி செய்தி நிறுவனம்.
அதனால் கோபம் கொண்ட மோடி தன்னை பற்றிய பிபிசி வெளியிட்ட டாக்குமென்ரி
இந்தியாவில் தடை செய்ய உத்தரவு இட்டு இருக்கிறார்.. ஆனால் மோடி அவர்கள்
மிகவும் தீவிரமாக மறைக்க முயல்கிறார் என்ற உண்மையை உலகின் பிற பகுதிகளால்
அறிய முடியும் பிபிசி 200 நாடுகளில் பார்க்கப்படுகிறது.
2002ல்
என்றாலே மோடிதான் இந்திய மக்களின் மனதில் தோன்றுவார் அவர் குற்றவாளி
என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் தெரியும். அவர் குற்றவாளி இல்லை என்று
அவரை பாராட்டும் பலரின் உள்மனதும் அவர்தான் அதற்குக் காரணம் அவர்தான் குற்றவாளி என்று சொல்லும், வேறு சிலரோ அவரை கண்டிக்கிறார்கள், மேலும் பலரோ பாராட்டுவதுமில்லை குற்றமும் சுமத்தாமல் வாய் மூடி மௌனமாக இருக்கிறார்கள்,
எது எப்படியோ ஒரு முழு பூசனிக்காயை ஒரு கிண்ணத்துச் சோற்றைக் கொண்டு மறைக்க முயல்கிறார் திருவாளர் மோடி
தமிழ்நாட்டில் லேபர் வேலைகளுக்குத் தமிழர்கள் கிடைக்க மாட்டேங்கிறார்கல் என்ற குற்ற்சாட்டு பரவலாக இருக்கிறது தமிழர்களுக்குப் பதில் வடநாட்டவர்கள் இந்த வேலைகளைச் செய்து வருகிறார்கள் என்று கூறுகிறார்கள்.. இப்படிச் சொல்பவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான் உங்களுக்கு லெபர் வேலைக்கு ஆள் தேவை என்றால் ஒரு டாஸ்மாக் சரக்கு பாட்டிலும் பிரியாணி பொட்டலுமும்
தருவதாகச் சொல்லுங்கள் அதன் பின் எத்தனை தமிழர்கள் உங்கள் வீட்டு வாசலில்
வேலைக்கு வந்து நிற்கிறார்கள் என்பது தெரியும். தமிழனுக்கு என்று ஒரு
பண்பாடு இருக்கிறது தன்படி அழைத்தால்தான் அவர் வருவான்
இளங்கோவன் இன்னும் உயிரோட
இருக்கிறார் என்பது ஈரோட்டுக்கான சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் போதுதான்
தெரிந்து கொண்டேன் அவரை எந்த செய்தி ஊடக விவாதங்களிலோ அல்லது மக்களுக்கான
போராட்டங்களிலோ அல்லது மக்கள் பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுத்தார் என்பதை
நான் இணையத்தில் அதிக நேரம் இருந்தாலும் அறியவில்லை...
புத்தகங்கள்
எழுவது வெளியிடுவதும் நல்லதுதான் அதைப்பற்றி கேலிகள் இல்லை.. ஆனால்
புத்தகம் எழுதும் போது கொஞ்சமாவது யோசியுங்கள் நாம் எழுதுவது படிக்கும்
வாசகர்களில் ஒரு சிலருக்காவது ஒரு சிறிய அளவில் எந்தவிதமான ஒரு தாக்கத்தை
ஏற்படுத்துமா என்று யோசித்து எழுதுங்கள் அப்படி இல்லாமல் எழுதும்
புத்தகங்கள் எல்லாம் என் பார்வையில் காசு கொடுத்து வாங்கும் குப்பைகளாகவே
இருக்கின்றது..
அன்புடன்
மதுரைத்தமிழன்
பொய்யன், கேமிரா் மோகி, வேசம், என நீண்ட பட்டியல் உண்டு...
ReplyDelete