Wednesday, January 4, 2023

 பாஜக தலைவர் அண்ணாமலையைக் கதறி அழவிட்ட  பத்திரிக்கையாளர்கள்


செய்தியாளர்கள் கூட்டங்களைக் கூட்டிய அண்ணாமலை ,அதில் பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல இயலாமல் கதறத் தொடங்கி இருக்கிறார்.


 




ஒரு கட்சியின் தலைவர் என்கிற போது தரம் தாழாமல் பேச முதலில் தெரிய வேண்டும் அல்லது கற்றுக் கொள்ளாவது வேண்டும். ஒரு கட்சித் தலைவர் என்கிற போது  எப்போது செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் அதில் தங்கள் கட்சிக் கொள்கைகள் திட்டங்கள் பற்றி பேசலாம் அல்லது எதிர்க்கட்சி திட்டங்கள் மற்றும் கொள்கைகளை விமர்சனம் செய்யலாம் அல்லது சமுக பிரச்சனைகள், அவலங்கள் பற்றி தங்கள் கருத்துக்களைக் கூறலாம். ஆனால் அதை எல்லாம் விட்டு விட்டு தினம் தினம் தன்னை பற்றிய செய்திகள் வர வேண்டும் என்பதற்காகச் செய்தியாளர்கள் கூட்டங்களைக் கூட்டி வாய்க்கு வந்ததையெல்லாம் உளறுவது எந்த வகையில் நியாயம்.

அப்படி அவர்தான் உளறுகிறார் என்றால்  உளரும் ஆள் சொல்லும் செய்தியைச் சேகரிக்கப் பத்திரிக்கையாளர்கள் ஏன் அங்குக் கூட வேண்டும் அதுமட்டுமல்லாமல் கேள்விகளை நாகரிகமாகக் கேட்காமல் அநாகரீகமாகக் கேட்க வேண்டும் ஒரு தலைவர் அநாகரிகமாகப் பேசுகிறார் என்றால் அவர் சொன்ன வார்த்தைகளை வைத்தே அவரை மடக்கி கேள்வி கேட்கும் திறமைகள் இந்த கால பத்திரிக்கையாளர்களுக்கு இல்லாமல் போய்விட்டது என்பதுதான் உண்மை

ஒரு தலைவர் என்பவர் தன்னை நோக்கிக் கேட்கும் அநாகரிக கேள்விகளுக்குப் பதில் அளிக்க விரும்பவில்லை என்றால் நோ கமெண்ட்ஸ் என்றோ அல்லது அந்த கேள்வி கேட்டவரை இக்னோர் பண்ணிவிட்டு அடுத்த நிருபரிடம் சாந்தமாக உங்களுக்குக் கேள்விகள் ஏதும் இருக்கா என்று கேட்கவேண்டும் அப்படி செய்வ்துதான் ஒரு தலைவருக்குரிய அழகு அதைவிட்டு விட்டு  சமீப காலமாக  ஊடகங்கள்/பத்திரிக்கைகளின் கடைநிலை ஊழியர்களிடம்  மிக  ரொம்பவும் தரக்குறைவாக நடந்து கொள்கிறார்.

 பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு வரும் ஊடகத்தின் பிரதிநிதி என்பவர் ஊடகத்தில் மாத் சம்பளத்திற்குப் பணி புரியும் சாதாரண பணியாளர்.  அவர் நிறுவனத்தின் வரம்பிற்கு உட்பட்டு கேள்விகளைக் கேட்கிறார். முடிந்தால் அதற்கான பதிலை சொல்லவேண்டும் இல்லையென்றால் அமைதியாக இருந்துவிடனும் அப்படி இல்லாமல்

நீ குரங்கு மாதிரி தாவுகிற, 200 ரூபா வாங்கிக்கோ சரி பத்தலையா 3000 ரூபா வரைக்கும் வாங்கிக்கோ. நீ அஜன்டா ட்ரிவன் ஊடகம். நீ 40000₹ காமராவ வைச்சிக்கிட்டு என்ன கேள்வி கேட்க வந்துருவியா?நீ எந்த ஊடகம்?  நீ சண் டிவியா? நீ ஜெயா டிவிதானனே நீ அப்படித்தான் பேசுவ கேட்ப   எங்கிட்ட கேள்வி கேட்பதற்குப் பதில் உங்கள் கட்சித்தலைவரின் பேட்டியை போடுங்கள் ? நீ புதியதலைமுறையா ?உன் பேர் என்ன? சரி நான் BGR ஆதாரத்தை தர்றேன், நீ் அரை மணி நேரம் இன்டர்வியு ஸ்லாட் தருவியா?

உனக்கு போன் பண்ணிய யாரு என்னிடம் காண்பி ? இப்படியெல்லாம் பேசுவது? அவர் எந்த செய்தித் துறையாக இருந்தால் உங்களுக்கு என்ன? ஏன் அவர் பொதுமக்களாகவே கூட இருக்கட்டும் அல்லது எதிர்க்கட்சியினராகவே இருக்கட்டும் கேட்கும் கேள்விகளுக்குத் தெரிந்தால் பதில் சொல்லவேண்டும் இல்லையென்றால் கம்முன்னு இருக்கவேண்டும் மோடி மாதிரி .அதைவிட்டு விட்டுக் கதறுவது எந்த விதத்தில் நியாயம் அண்ணாமலை... செய்தியாளர்கள் கூட்டத்திற்கு பாண்டேவிற்கு மட்டும் அழைப்பு அனுப்பிக் கூட்டத்தை முடித்துவிட வேண்டியதுதானே அண்ணாமலை?


பத்திரிக்கையாளர்கள்  எதிர்க்கட்சியினரிடம் பணம் வாங்கிக் கொண்டு இப்படி கேள்விகள் கேட்கிறார்கள் என்று குற்றம் சாட்டும் நீங்கள் உங்கள் கட்சியினர்  தொலைப்பேசியும் பணமும் கொடுத்து   உங்களுக்கு ஆதரவாகப் பல பத்திரிக்கையாளர்களைப் பேசச் செய்ததுதான் உங்கள் கட்சி? அப்போது அதுமட்டும் உங்களுக்கு இனித்ததா ? இப்போது மட்டும் உங்களுக்கு எறிகிறதா என்ன?


உங்கள் கட்சி சார்ந்த  எந்த ஒரு கேள்விக்கும்  பதில் சொல்லாமல்  உடனே அந்த கேள்வியைத் திசை திருப்பும் வண்ணம் திமுக அரசின்  மீது ஏதோ ஒரு குற்றத்தைச்  சுமத்தி அதைக் கேள்வி கேட்பீர்களா என்று சிறுபிள்ளைத்தனமாகவே கேள்வி கேட்பவர்களிடமே  திரும்ப கேட்பது.?  முதலில் கேள்விக்கான பதிலைச் சொல்லிவிட்டு அதன் பின் திமுக அரசைப் பற்றி கேள்விகள் எழுப்பலாமே?

அண்ணாமலை சிவில் துறை தேர்வில் உங்களிடம் ஒரு கேள்வி கேட்டால் அதற்குப் பதில் சொல்லாமல் எனக்கு முந்தைய தேர்வு எழுதியவரிடம் இதே கேள்வியைக் கேட்க முடியுமா என்பது போல இருக்கிறது உங்களின் பேச்சு


அரசியல் அனுபவம் என்பது வேறு, அரசு அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் வேறு.தலைவனாவதற்கு  முதிர்ந்த பக்குவமும் பொறுமையும் வேண்டும். ஆனால் அது கொஞ்சம் கூட அண்ணாமலையிடம் இல்லை என்பதைத்தான் நேற்றைய நிகழ்வுகள் எடுத்து காட்டுகின்றன. சமுக இணையதளங்களில் பணம் கொடுத்து என்னதான் ஊதிப்பெரிதாக்கினாலும் அனுபவின்மையும் பக்குவமின்மையும் ஒரு நாள் வெளிப்பட்டே தீரும்.. அதற்கு இந்த நிகழ்வும் ஒரு உதாரணம்


நீ தவறு செய்கிறாய் அண்ணாமலை அதனால்தான் அங்கு மிளகாயைச் சொருகியது போல ருத்திர தாண்டவம்  ஆடுகிறாய்

அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. திரும்ப திரும்ப பேசுற நீ...

    திரும்ப திரும்ப பேசுற நீ...

    வடிவேலு இல்லாத குறை இல்லை...!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.