Saturday, December 31, 2022

 

எங்கள் செல்லக்குட்டியின் போட்டோ இது
@avargal unmaigal


2022  எங்களுக்கு இதை விடச் சந்தோஷமான ஆண்டு இருக்க முடியாது நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்

.நாம் வாழ்வதற்காக
வடிவமைக்கப்பட்ட வாழ்க்கை
எளிதானது அல்ல.

சில நேரங்களில்
மகிழ்ச்சியாகவும்,
சில சமயங்களில்
சவாலாகவுத்தான் இருக்கும்;


இருப்பினும்,
 ஒவ்வொரு ஏற்றமும் இறக்கமும்
நமக்கு பாடங்களை கற்றுத் தருகிறது
.அதுதான் நம்மை வலுமையான  
மனிதனாக உருவாக்குகிறது.



இறைவனிடம் சந்தோஷமான வாழ்வைமட்டும் கொடுங்கள் என்று கேட்பதை விட, எப்படிப்பட்ட கஷ்டமான சூழ்நிலைகள் வந்தாலும், அதிலிருந்து மீண்டு வர வழிகாட்டினாலே போதும் என்பதுதான் எங்களது பிரார்த்தனைகளாக  இருக்கும். .இந்த பிரார்த்தனைகளுக்குத்தான் இது வரை இறைவன் செவி சாய்த்து எங்களை நடத்தி வந்திருக்கிறான்.

இதற்கு சில உதாரணம் 2021 ஆண்டு முடிவில் நாங்கள் வளர்த்து வந்த நாய்க்குட்டி. அடிக்கடி நம்பர் ஒன் போக ஆரம்பித்தான்.  ஒருவேளை குளிர்காலம் என்பதால் அப்படி இருக்கும் என்று நினைத்துக் கொண்டோம். அதன் பின் ஒவ்வொரு 2 மணிநேரத்திற்கு ஒரு முறை  போக ஆரம்பித்தான் .ஆனால் ஒரு பொழுதும் வீட்டிற்குள் போனது இல்லை. சரியென்று அவனை வழக்கமாகப்  போகும் மருத்துவரிடம் சென்று பரிசோதித்தால் ,அவனுக்கு டையபடிக்  வந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு, காலையும்  இரவும் அவனுக்கு இன்சுலின் போடும் படியாக ஆகியது .அதுமட்டுமல்லாமல் அவனுக்கு டயப்டிக் டயட்  உணவும் கொடுக்க வேண்டியதாகிவிட்டது.. சரி என்று அவனுக்குத் தேவையானதை எல்லாம் செய்து கொண்டு இருந்த போது பெட்டிலிருந்து கீழே இறங்கத் தயங்கிக் தயங்கி குதித்தான் .அப்புறம் சில நாட்களில் நடக்கும் போது சுவரில் போய் முட்டிக் கொண்டான் .ஆனால் மாடியில் உள்ள என் பெட் ரூமில் இருந்து கிச்சனில் அவனுக்கு உணவு வைக்கும் இடத்திற்கும் ஹாலில் உள்ள சோபாவிற்கும் எந்த வித தயக்கம் இல்லாமல் வந்தான். ஆனால் இதைத் தவிர மற்ற இடங்களுக்கு வரும் போது அருகிலிருந்தவற்றில் முட்டிக் கொண்டான். உடனே சந்தேகம் வந்து மருத்துவரிடம் சென்ற போது அவனைப் பரிசோதித்துப் பார்த்த போது அவன் கண்பார்வை போனது கண்டுபிடிக்கப்பட்டது. அதைக் கேட்டு நானும் மனைவியும் என் குழந்தையும் துடித்துப் போனோம்.

அதனால்
மருத்துவர் , கண் மருத்துவரிடம் சென்று காட்டச் சொன்னார். உடனே அதற்கான ஸ்பெஷலிஸ்டை  நீயூஜெர்ஸி, நியூயார்க் பெனிசிலிவேனியா போன்ற மாநிலங்களில் தேடினால் ஒருத்தரிடம்கூட உடனடி அப்பாயிண்ட்மென்ட் கிடைக்கவில்லை கூப்பிட்ட டாகடர்கள் எல்லாம்  2 மாதம் அல்லது 3 மாதங்கள் கழித்துத்தான் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தார்கள். வேறு வழியில்லை என்பதால் அதை வாங்கிக் கொண்டு வெயிட் பண்ணினோம் . அவரும் செக் செய்துவிட்டுச் சொன்னார் அவனுக்கு cataractடினால் கண்பார்வை போயிருக்கிறது அவனுக்கு டயபடிக் இருப்பதால் சர்ஜரி செய்தால் சரியாகும் என்று இப்போதைக்குச் சொல்ல முடியாது .சில மருந்துகள் கொடுத்து ஒரு மாதம் கழித்து வரச் சொன்னார். மனவேதனையுடன் வீட்டிற்கு வந்தோம். அதன் பின் அடுத்த மாதமும் டெஸ்ட் செய்துவிட்டு கொஞ்சம் பரவாயில்லை மேலும் ஒரு மாதம் கழித்து வரச் சொன்னார் .இறுதியாக அவனுக்கு சர்ஜரி செய்தால் பார்வை வர வாய்ப்பு இருக்கிறது ஆனால் கேரண்டி எல்லாம் கொடுக்க முடியாது என்றார்.இந்த மருத்துவர் ஸ்பெஷலிஸ்ட் என்பதால் ஒவ்வொரு விசிட்டுக்கும்  200 டாலருக்கும் மேல் பீஸ்சாக கொடுக்க வேண்டி இருந்தது. சர்ஜரிக்கு 5000 டாலர் ஆகும் என்று சொன்னார்.. எங்களுக்கு எங்கள் செல்லம் முக்கியம் என்பதால் பணத்தைக் கட்டிணோம்  சிலவாரங்கள் கழித்து டாகடர் சர்ஜரி  செய்தார். கண்பார்வை மீண்டும் எங்கள் செல்லக் குட்டிக்கு வந்தது அதனோட சேர்ந்து எங்களுக்கு நிம்மதியும் வந்தது. இப்போதும் அவனுக்கு டயபடிக் இருப்பதால் அவனுக்கு இன்சுலின் மருந்து கண் மருந்து அவன் டையபடிக் மருந்து செலவு என்று மாதம் 350 டாலருக்கும்  மேல் செலவாகிறது அதுமட்டுமல்லா மருத்துவர் விசிட்டிற்கு தனியாகப் பணம் போகிறது இதற்கு எல்லாம் இறைவன் தான் எங்களுக்கு வசதியைக் கொடுத்துக் காப்பாற்றி வருகிறான்..

இதற்கு இடையில் இவனுக்குக் கண்பார்வை இல்லாத போது. என் மனைவியின்  தங்கை குழந்தைகளின் அரேங்கேற்றதிற்கு  வேறு மாநிலத்திற்கு இவனையும் அழைத்துச் சென்று 4 நாட்கள் இருந்து வந்தோம். . அரேங்கேற்றம் முடிந்து நாங்கள்எங்கள் வீட்டிற்கு வந்து கதவைத் திறந்த  போது என் மகள் முதலில் உள்ளே நுழைந்தாள் அதன் பின் நான் நுழைந்த போது வீடு முழுவதும் கேஸ் ஸ்மல் அடித்தது .உடனே என் பெண்ணை வெளியே நிற்கச் செய்துவிட்டு அனைத்து கதவுகளையும் ஜன்னலையும் திறந்து விட்டு  கேஸ் ஸ்மல் எங்கே  இருந்து வருகிறது என்று பார்த்தால் வீட்டின் உள்ள ஸ்டவில் இருந்து லீக்காகியிருக்கு அதுவும் அரங்கேற்றத்திற்கு போகும் நாள் அன்று தோசை சுட்டுச் சாப்பிட்டுவிட்டு ஸ்ட்வை அணைப்பதற்குப் பதிலாக சிம்மில் வைத்து இருக்கிறோம் .அது எப்படியோ எவ்வளவு நேரம் எரிந்துவிட்டு அணைந்தது என்பது தெரியவில்லை. எனவே அந்த ஸ்டவையும் அணைத்துவிட்டு வீட்டிற்கு வெளியே நின்று இருந்தோம்.

இப்படி நான் செய்து இருக்கக் கூடாது ஆனால்   கடவுள் மேல் உள்ள நம்பிக்கை மற்றும் குருட்டுத் துணிச்சலில் பயர் சர்வீஸுக்கு போன் செய்யாமல் நானே செய்துவிட்டேன். அப்புறம் சில மணிநேரம் கழித்து வீட்டிற்குச் சென்று பார்த்த போது ஸ்மல் போயிருந்தது. ஒரு ஊதுபத்தியை கொழுத்தி வீடு முழுவது சோதித்து பார்த்து அதன் பின் அனைவரையும் உள்ளே அழைத்து சென்றேன்


இது எங்களைப் பொருத்தவரை அதிசயம்
miracle என்றே சொல்லாம், காரணம் இங்கே உள்ள வீடுகள் மரத்தால் ஆனவை எளிதில் தீப்பற்றி ஒரு மணிநேரத்திற்குள் வீடு சாம்பலாகிவிடும் அது மட்டுமல்லாமல் வீடு அருகருனே நிறைய வீடுகள் இருப்பதால் எல்லா வீடும் எரிந்து சாம்பலாயிருக்கும்.. கடவுளின் ஆசீர்வாதத்தால் ஒன்றும் ஆகாமல் நாங்கள் காப்பாற்றப்பட்டோம். இல்லையென்றால் இந்நேரம் தெருவில்  நிற்க வேண்டியிருக்கும் உயிரும் போயிருக்கும்.


இது இப்படி இருக்க, கடந்த மாதத்தில் என் வேலையிடத்தில் 30 அடி உயரத்திற்கு மேலே உள்ள பொருளை  மிஷின் மூலம் கீழே கொண்டு வரும் போது அந்த பொருள் வைத்திருக்கும் பேலட்(palette ) உடைந்து அந்த பொருட்கள் கீழே வந்து விழுந்தன அந்த மொத்த பேலட்டின் வெயிட் 200 பவுண்டிற்கும் மேலே இருக்கும் அவைகள் நான் நின்று இருந்த இடத்திற்கு ஒரு அடி முன்னால் விழுந்தது சற்று பின்னால் விழுந்திருந்தால் இந்நேரம் சங்கு ஊதி இருப்பார்கள்...


இவ்வளவுதானா என்று நினைக்காதீர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னால் கோவிட் இரண்டாவது தடவை வந்து மீண்டு இருக்கிறேன்..
இவ்வளவு நடந்தும் கடவுள் நம்பக்கம் எப்போது இருக்கிறார் என்ற நினைப்பில் என் வாழ்க்கை நதி போலச்  சந்தோஷமாக ஒடிக் கொண்டிருக்கிறது

இப்படியாகத்தான் 2022 ஆண்டு கடந்து இருக்கிறது நாளை 2023 ம் ஆண்டு பிறக்கப் போகிறது... கடந்த 2022 ஆண்டு எப்படி இறைவன் எங்களுக்குத் துணை நின்றானோ அது போல வரும் ஆண்டிலும் எங்களுக்குத் துணை நிற்பான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு இருக்கிறது

என்னடா இவனுக்கு 2022  ஆண்டு நேரம் சரியில்லை என்று நினைக்காதீர்கள் இதோ சற்று முந்தைய ஆண்டு கதைச் சுருக்கமாக உங்களுக்கு


இப்படித்தான் 2020யில் இருந்து பலவித பிரச்சனைகளிலிருந்து இறைவன் எங்களைக் காப்பாற்றி இருக்கிறான் கோவிட்டின் ஆரம்பக்காலத்தில் நியூயார்க் நீயூஜெர்ஸியில் மக்கள் மழைக்கால ஈசல் போலக் கொத்து கொத்தாக மடிந்து வீழ்ந்த காலத்தில்  அப்போது மருத்துவர்களுக்கு என்ன ட்ரீட்மெண்ட் கொடுப்பது என்ன மெடிசன் கொடுப்பது என்று இருந்த நேரத்தில் எனக்கும் என் மனைவிக்கும் கோவிட் பாதித்து ஒருமாத காலம் வீட்டுச் சிறையிலிருந்தோம்... நெருங்கிய நண்பர்கள் கூட எட்டிப்பார்க்க அஞ்சிய காலம் அது என் கூட வேலை பார்க்கும்  நெருங்கிய நண்பர் என் வீட்டிற்கு அருகில் வசித்தாலும் வந்து எட்டிப்பார்க்க அஞ்சி தொலைப்பேசியில் அழுத காலம் அது . அந்த நேரத்தையும் கடந்து உயிர் பிழைத்து வந்தோம்


 அடுத்த சில மாதங்கள் கழித்து மாடியிலிருந்து க்ழே விழுந்து விலா எழும்பு உடைந்து. சில மாதம் வீட்டில் இருக்க வேண்டி இருந்தது..

அதன் பின் கடந்த வருடம் வேலைக்குப் போகும் போது (குளிர் காலத்தில் அதுவும் காலை 6 மணிக்கு) ரோடு முழுவதும் ப்ளாக் ஐஸ் இருந்தது. கவனமாக ஒட்டி சென்றாலும் ஒரு இடத்தில் ப்ரேக் அழுத்தும் போது கார் அதற்கு கட்டுப்படாமல் அதன் போக்கில் போய் சிறிது தூரத்தில் நின்றது இன்னும் சில அடி  தூரம் நகர்ந்து இருந்தால் தடுப்பை மீறி நதியில் விழுந்து இருப்பேன்... ( இதை சென்ற வருடப் பதிவில் எழுதி இருந்தேன்)

 இப்படித்தால் பல நிகழ்வுகளிலிருந்து இறைவன் என்னையும் என் குடும்பத்தையும் தொடர்ந்து ஆசிர்வதித்துக் காப்பாற்றி வருகிறான்.


மக்களுக்கு நான் சொல்வதெல்லாம் முடிந்த வரை  சந்தோஷமாக வாழ முயற்சி  செய்யுங்கள். உங்களுக்கு அருகில் இருப்பவர்களைச் சந்தோஷப்படுத்தி வாழுங்கள். Life is Very Short .அதனால் சந்தோஷமாக வாழ முயற்சி செய்யுங்கள்

 

@avargal unmaigal


நண்பர்கள் அனைவருக்கும் இனிய பத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. உங்கள்ள் பிரார்த்தனை அருமை. எதையும் தாங்கும் மனபலம் இருந்தால் மீண்டு விடலாம். கொஞ்சநாளாக "உங்களிடமிருந்து பதிவு இல்லையே ஊருக்கு போய் இருப்பீர்கள்" என்று நினைத்தேன்.மீண்டும் கோவிட் வந்து கஷ்டபட்டீர்களா?
    இறைவனுக்கு நன்றி நல்லபடியாக மீண்டு வந்ததற்கு.
    வளர்ப்பு செல்லத்தை நல்லபடியாக பார்த்து கொண்டது மகிழ்ச்சி.
    தீ விபத்து இல்லாமல் இறைவன் காப்பாற்றி விட்டார்.

    சந்தோஷபடுத்தி சந்தோஷமாக வாழ சொன்னது அருமை.
    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  2. மதுரை வாசிக்க வாசிக்க அப்படியே வாயடைத்து இருக்கிறேன். உங்களின் மனோ பலம், பிரார்த்தனை உங்களுக்கு அரணாக இருந்திருக்கிறது இனியும் இருக்கும்.

    மீண்டும் கோவிட் வந்ததா...ஓ மை...மீண்டு வந்தது மகிழ்ச்சி. கேஸ் எரிந்து கொண்டே இருந்திருக்கிறது ஓ மை காட் மிகப் பெரிய ஆபத்திலிருந்து தப்பித்திருக்கீங்க

    குட்டிச் செல்லம் பாவம் அதன் கஷ்டத்தைக் கூட அது வெளியில் சொல்லாது....பாவம் மனம் கஷ்டப்பட்டுவிட்டது மதுரை...சன்னி இப்போது நலமுடன் இருக்கிறான் தானெ...

    இடையில் உங்கள் பதிவுகள் இல்லையே என்று நினைத்தேன்...ஆகஸ்ட் சமயம் செப்டம்பர் சமயம் இந்தியா வந்திருப்பீங்களோ என்றும் நினைத்தேன்.

    எலும்பு முறிவு என்று எவ்வளவு கஷ்டங்கள் அதுவும் அமெரிககவில் எனும் போது....மெடிக்கல் அதிகமாகும்...எல்லாம் எப்படியோ சமாளித்து இருக்கீங்க மதுரை இறைவன் இனியும் துணை இருப்பார் இந்த வருடம் மட்டுமல்ல இனி வரும் எல்லா வருடங்களிலும்...

    ஆமாம் இறைவனிடம் கஷ்டங்களைக் கடந்து வர வழிகாட்டினால் போதும் எனும் பிரார்த்தனை ஆம்...என் சிந்தனையும் அப்படித்தான்....அதுவே மிகப்பெரிய சந்தோஷம்தானே...இந்த வரியை ரசித்து டிட்டோ செய்கிறேன்

    நாம் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நம்மைச் சுற்றி உள்ளோரையும் மகிழ்வாக வைத்திருக்க முடியும்.

    புத்தாண்டு வாழ்த்துகள் உங்கள் எல்லோருக்கும் சன்னி உடல்நலத்துடன் இருக்கவும் பிரார்த்தனைகள்.

    கீதா

    ReplyDelete
  3. பல இன்னல்களில் இருந்தும் காத்த இறைவன் என்றும் உங்களுடன் துணையாக நின்று காப்பான்.
    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். .

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.