Saturday, December 3, 2022

 
SUNDAY SARCASAM  ஞாயிற்றுக் கிழமை  நையாண்டி

  

@avargal unmaigal



காதலிக்கு போது அண்ணன் தங்கை உறவு முறை கொண்டாடும் தமிழர்கள் இப்போது சற்று மாறி அசிங்கமாகப் பேசிக் கொண்ட பின்னர் அக்கா தம்பி உறவு முறை கொண்டாடுகிறார்கள்... #தமிழர்கள்_பண்பாடு


 
@avargal unmaigal



இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் கடவுள் ஜனவரி மாதத்தில் காலண்டர் வடிவில் வந்து டிசம்பரில் குப்பைத் தொட்டிக்குள் போய்விடுவார். பாவம் கடவுள் அவருக்கும் எக்ஸ்பரி டேட்  பிக்ஸ் பண்ணிட்டான் இந்தியன்
 
@avargal unmaigal


  

மோடி பத்திரிகையாளர்களைச் சந்திப்பது இல்லை என்பதைப் பலர் ஒரு குறையாகப் பேசுகிறார்கள் மோடி பத்திரிக்கையாளர்களைச் சந்திக்க ரெடி ஆனால் அந்த சந்திப்பின் போது அவர்கள் யாரும் அவரிடம் கேள்விகள் ஏதும் கேட்காமலிருந்தால் பத்திரிக்கையாளர்களுன் சேர்ந்து ஒரு போட்டோ சூட் நடத்த தயாராகவே இருக்கிறார் நம் திருவாளர் மோடி


  
@avargal unmaigal



லலிதா ஜுவல்லரி குரூப்க்கு விளம்பர பண்ணுறவங்க மோடிக்காகத் தேர்தல் விளம்பரம் பண்ணினால்  எப்படி விளம்பரம் பண்ணுவாங்க-

கஷ்டப்பட்டு உழைத்து வாழும் நீங்க உங்க வோட்டை சரியான தலைவரை தேர்ந்தெடுக்கதான் போடுறீங்களா?
நாலு கட்சிகளின் அலுவலகத்திற்குப் போவதற்கு முன்னால்  பாஜக கட்சியின் அலுவலகத்திற்கு வாங்க
எங்க  கட்சி தேர்தல் அறிக்கையைக் கேட்டு  வாங்கிக்கோங்க..
அதை கம்பேர் பண்ணிப் பார்த்துட்டு யாரு அதிகம் பொய் சொல்லுறாங்க என்று பாருங்க. அதுக்கப்புறம் நீங்க எந்த கட்சிக்கு வேணா வோட்டு போடுங்க .. “
மறந்துடாதிங்க" எல்லாம் உங்கள் வோட்டு!

நிச்சயம் நாங்கதான் அதிகம் பொய் சொல்லி இருப்போம் அதனால் நீங்க நிச்சயம் எங்களுக்குத்தான் வோட்டு போடுவீங்க




சவுக்கு சங்கர், சவுக்கு சங்கராக இருந்தால் அவருக்கு மதிப்பு இன்னும் கூடிக்கொண்டு செல்லும்.ஆனால் மற்றவர்களிடம் போய்ச்சேர்ந்தால் காலப் போக்கில் அவரின் மதிப்பு குறைந்து போய்விடலாம். கொஞ்சம் விளக்கமாக சொல்லவேண்டும் என்றால் இந்தியாவில்தான் பசு தெய்வம் ஆனால் அது இடமாறி அமெரிக்கா வந்தால் அதற்குப் பெயர் பீஃப்தான்


அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.