அட்ட(காசம்)காரம் ' எப்போதும் இங்குச் சற்று அதிகமாகத்தான் இருக்கும் (அரசியல் நையாண்டிகள் )
வேலைக்குத்தான் தகுதியின் அடிப்படையில் ஆள் தேர்ந்தெடுக்கப்படுக்கிறார்கள் ஆனால் அரசியலில் அப்படியில்லை உழைப்பவனைவிட அதிகராபவரைக் கைப்பற்றும் திறமையுள்ளவனுக்குத்தான் தலைமை பதவிகள் கிடைக்கின்றது. அத்வானி பாஜகவிற்காகத்தான் உழைத்தார் உழைப்பவன் தகுதியுள்ளவன் என்றால் அவர்தான் இன்றைய பிரதமராக பாஜக சார்பிலிருந்திருக்க வேண்டும்.. ஆனால் உழைப்பவனைவிட அவனை ஏமாற்றி அந்த பதவியைக் கைப்பற்றியவர் அல்லவா இன்று ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார். அரசியலில் எல்லா கட்சிகளும் ஒன்றுதான்
உதயநிதிக்கும் மோஜிக்கும் உள்ள வித்தியாசம்? உதயநிதிக்குப் பதவி கிடைத்தவுடன் இனிமேல் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்து இருக்கிறார் . ஆனால் மோஜியோ பதவி கிடைத்த பின்தான் தொடர்ந்து நான் ஸ்டாப்பாக பல்வேறு வேடங்களில் தினம் தினமும் நடித்துக் கொண்டு இருக்கிறார்
பிச்சை எடுக்கும் கும்பலைப் பற்றி தகவல் கொடுத்தால் அவர்களுக்குப் பரிசு திரு, டிஜிபி சைலேந்திர பாபு
சைலேந்திர பாபு சார் பன்னீர்செல்வம் கும்பல் டில்லியில் போய் பிச்சை எடுக்கிறார்கள் . இதற்கு எனக்குப் பரிசு உண்டா?
ரஜினிகாந்த் பிறந்த நாள் அன்று தன் வீட்டு கேட் முன்பு கூடி இருக்கும் ரசிகர்களைப் பற்றி பேச்சு மூச்சுவிடுவதில்லை அது போல அவர் குருவான மோஜியும் எல்லையில் போராடும் ராணுவவீரர்கள் பற்றி பேச்சு மூச்சுவிடுவதில்லை
மோடியைப் பொருத்தவரை இந்திய இராணுவ வீரர்கள் என்பவர்கள் சுதந்திர தின நாள் அன்று அவர் கையால் லட்டு வாங்குவதற்காகவே இருக்கிறார்கள்
இந்தியாவை இழிவுபடுத்த ஹாலி பெர்ரி பெற்ற பணம் எவ்வளவு? அவருக்கு இந்திய தூதரகம் கண்டணம் தெரிவிக்குமா?
கூடிய விரைவில் சங்கிகள், இந்து நடிகைகளுடன் முஸ்லிம் நடிகர்கள் காதல் செய்வது லவ் ஜிகாத்தை ஊக்குவிக்கிறது என்று போராடத் தூரம் இன்னும் அதிகமில்லை மக்களே
உதயநிதி அமைச்சராகி தமிழ் மக்களுக்கு என்ன நல்லது செய்யப் போறாரு என்று இனிமேல் கேட்பதை நிறுத்துங்கள்.... அவர் பதவி ஏற்றதும் முதலில் சொன்னது இனிமேல் சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்று. இதை விட நாட்டு மக்களுக்கு அவர் வேறு என்ன செய்துவிட முடியும் அதுவும் பதவி ஏற்ற அடுத்த நொடியில்....
வாழ்த்துக்கள் விளையாட்டு புள்ளைக்கு சாரி விளையாட்டு அமைச்சருக்கு #udhayanithisatlin
இங்கே மார்க் தம்பி மெமரியில் இன்று காட்டிய பதிவு இது https://avargal-unmaigal.blogspot.com/2013/12/gandhi-and-monkey.html
அன்புடன்
மதுரைத்தமிழன்
ஹா... ஹா...
ReplyDelete