உலகம் மாறிப் போச்சு கண்ணா!!!
இன்றைய உலகில்
நல்லவன் கெட்டவன்
என்ற கணக்கெல்லாம்
குணத்தை வைத்து அல்ல...
ஒருவருக்கு
நீ தேவைப்படும் வரையில் மட்டும்தான்
நீ நல்லவன்...
உனக்கான தேவை முடிந்துபோனால்
நீ கெட்டவன்
இன்னும் விளக்கமாகவே உண்மையைத் தோல் உரித்துச் சொன்னால் இன்றைய இணைய உலகில் தங்கள் கருத்துகளுக்கு லைக்ஸும்.. ஆதரவான கருத்துக்களும். பிறந்த நாளுக்குப் புகழ்ந்து ஒரு பதிவும் யாரவது மாற்றுக் கருத்து வைத்து எதிர்த்தால் அதற்கு எதிராகவும் தனக்கு ஆதரவாகவும் எழுதும் வரை நீ நல்லவன்
அது போல வெளியூலகைல் தவறு செய்தால் சுட்டிக்காட்டாமலும். அடிக்கடி இல்லாதை சொல்லிப் புகழ்ந்தும், பரிசுப் பொருட்களை வாங்கி கொடுத்தும் வீட்டுக்கோ அல்லது ஹோட்டலிலோ உணவு வாங்கி கொடுத்துக் கொண்டு இருந்தாலோ நீ என்றும் நல்லவன் அதை நிறுத்திவிடும் நேரத்திலிருந்து நீ கெட்டவன்
நாம் நல்லவனாக இருக்கவேண்டும் அல்லது நம்மைப் பாராட்டுபவனாவது நல்லவனாக இருக்க வேண்டும் அப்படி இரு பக்கமும் இல்லாமல் இருவரை ஒருவர் பாராட்டி நல்லவனாக நடித்துக் கொண்டிருப்பதால் என்ன பயன்?
ஒருவரை ஒருவர் ஏமாற்றி சந்தோஷமாக வாழ்பது போல போலித்தனமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.. இது இன்றைய உலகம்
ப்டிக்க மிஸ்பண்ணிடாதீங்க :
https://www.instagram.com/deejdurai/
https://twitter.com/maduraitamilguy
https://www.facebook.com/avargal.unmaigal/
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்க: டைம் வேஸ்ட் கிறுக்கல்கள்
இன்றைய உலகில் அல்ல, என்றைய உலகிலும் இதுதான் உண்மை!
ReplyDeleteசரிதான்...
ReplyDelete