Friday, December 9, 2022

 

@avargalunmaigal

இந்தியாவில் அதிகரிக்கும் சடன் இளம் வயது மரணங்கள் எச்சரிக்கை பதிவு

இப்போது பரவலாக எங்கும் நடப்பதும் கேள்விப்படுவது இளம் வயது மரணங்கள்தான் அதுவும் கோவிட்டிற்கு பின்பு மிக அதிக அளவில் கேள்விப் படுகிறோம். நம் கூட சாதாரணமாகப் பேசியவர் .பாடியவர் ,ஆட்டம் ஆடியவர்,  நடந்து கொண்டிருந்தவர் இப்படிப் பல செயல்களை நம் முன் செய்து கொண்டிருந்தவர்கள் சற்று நிலைதடுமாறி அந்த இடத்திலே விழுந்து மரணித்துப் போய்விடுகிறார்கள், உடனே நாம் அதை மாரடைப்பில் இறந்துவிட்டார் என்று சொல்லிச் செல்கிறோம் அவர்கள் மாரடைப்பு காரணமாக இறக்கவில்லை கார்டியாக் அர்ரெஸ்ட் (Cardiac Arrest)   இதய முடக்கம் காரணமாக இறந்துவிடுகிறார்கள். கார்டுயாக் அரெஸ்ட் ஏற்படுபவர்களுக்கு உடனடியாக சி.பி.ஆர் போன்ற முதலுதவிகளைச் செய்வதன் மூலம் அவர்களைக் காப்பாற்ற வாய்ப்புகள் உண்டு. ஆனால் இந்த சி.பி.ஆரை முறையாகச் செய்யக் கூடிய பொதுமக்கள் அதிகம் பேர் இந்தியாவில் இல்லை என்று சொல்லாம். இதைப் பரவலாகப் பொதுமக்கள் கற்றுக் கொள்ள வேண்டும்


திடீர் மாரடைப்பு அதிகரிப்பதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. கோவிட்க்குப் பிறகு நாம் அனைவரும் பொதுவாக இதை அனுபவித்து வருகிறோம். முறையான ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் இல்லாமல், கோவிட் தடுப்பூசிகள் குறித்து நேரடியாகக் கருத்து தெரிவிக்க முடியாது. கோவிட் தடுப்பூசிகள் ஒரு காரணமாக இருக்கலாம் ஆனால் இந்த நாட்களில் ஆல்கஹால் மற்றும் குடிப்பழக்கம், வாழ்க்கை முறை மற்றும் உணவு மாற்றங்கள், சுற்றுச்சூழல் மாற்றங்கள், ஜங்க் ஃபுட் சார்ந்திருத்தல், மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் சமூக ஊடகங்கள் (தூக்கப் பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தத்திற்கான முக்கிய காரணம்) போன்ற பிற ஆபத்து காரணிகளைச் சிந்திக்கவோ அல்லது புறக்கணிப்பதையோ நிறுத்த முடியாது. .அனைவருக்கும் எனது ஒரே ஆலோசனை என்னவென்றால் - லிப்பிட்Lipid சுயவிவரம், தைராய்டு சுயவிவரம், வைட்டமின்கள் மற்றும் இதய பரிசோதனை ECG உள்ளிட்ட வழக்கமான இரத்த பரிசோதனைக்குச் செல்லுங்கள்.-15-20 நிமிடம் மிதமான பயிற்சிகள் & தியானம் உங்கள் மூளையை ரிலாக்ஸ் செய்ய. - ஆரோக்கியமான சரிவிகித உணவை எடுத்துக் கொள்ளுங்கள் (நார்ச்சத்து மற்றும் பழங்கள் நிறைந்தது)


Tab Aspirin 300 mg ஐ எப்போதும் உங்கள் பைகளில்/பணப்பைகளில் வைத்திருங்கள் மற்றும் உங்களுக்கு திடீரென கடுமையான மார்பு வலி/கழுத்து-இடது கை வரை பரவினால், விரைவில் அதை பாப் செய்யவும். மார்பு வலியை இரைப்பை அழற்சி என்று அலட்சியப்படுத்தாதீர்கள். மதிப்பிடு மதிப்பிடு. உங்கள் இதயம், உங்கள் வாழ்க்கை


இதய பிரச்சனைக்கான முக்கிய காரணங்கள்:

வாழ்க்கை முறை
ஆரோக்கியமற்ற உணவு முறை
மன அழுத்தம்
ஸ்டீராய்டு பயன்பாடு
போதைப் பழக்கம்
மதுபான நுகர்வு
உடல் பருமன்
நீரிழிவு நோய்
புகைபிடித்தல்
கொலஸ்ட்ரால்
செயல்திறனை மேம்படுத்தும் சப்ளிமெண்ட்ஸ்
உயர் இரத்த அழுத்தம்


 
@avargal unmaigal


கார்டியாக் அர்ரெஸ்ட் (Cardiac Arrest)   Heart Attack மாரடைப்புக்கும் என்ன வித்தியாசம்? ]

கார்டியாக் அர்ரெஸ்ட்டை (Cardiac Arrest)   இதய முடக்கம் என்றும் ஹார்ட் அட்டாக்கை  Heart Attack மாரடைப்பு என்று சொல்லுகிறார்கள். இந்த இரண்டுக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன அதைப் பற்றி இங்கு நாம் பார்ப்போம்

மாரடைப்பு : -

இதயத்துக்குச் செல்லும் பிரத்தியேக  கரோனரி (Caronary)  ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்துக்கு இரத்தம் செல்வதில் தடை ஏற்படுவதைத் தான் மாரடைப்பு (Heart Attack) எனச் சொல்லுகிறார்கள். மாரடைப்பு ஏற்படும் போது முதலில் நெஞ்சுப் பகுதியில் பாரம் ஏற்படுவது போலத் தோன்றும். பெரும்பாலும் மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கு சுய நினைவு இருக்கும், தனக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை உணர முடியும். கழுத்து மற்றும் இடது கை பகுதிகளில் வலி ஏற்படும், வியர்த்துக் கொட்டி, மூச்சு வாங்கும். இதை வைத்தே தனக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்று ஒருவர் உணர முடியும்,


பொது மருத்துவ பரிசோதனையின் போது மாரடைப்பு  வரும் அறிகுறி இருப்பவர்களுக்கு மருத்துவர்கள்  (For Chest Pain:
Loading dose  Aspirin 300mg orally  Clopitab 300 mg orally Atorvastatin 80 mg orally)ஆஸ்பிரின், டிஸ்பிரின் போன்ற மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறார்கள் இந்த மாத்திரைகளைச் சாப்பிடுவதன் மூலம் தனக்கு தானே முதலுதவி செய்து கொள்ளலாம். பின்னர் உடனடியாக இதய அறுவை சிகிச்சைகள் செய்யும் அளவுக்கு வசதி உள்ள மருத்துவமனைக்குச் சென்றால், அங்கே மருத்துவர்கள் முதலுதவி மற்றும் சிகிச்சைகளை அளித்து நோயாளியைக் காப்பாற்ற முடியும். மாரடைப்பு வந்த உடன் எவ்வளவு விரைவில் ஹாஸ்பிடலுக்கு  செல்கிறோமோ அந்த அளவுக்கு உயிர் பிழைக்கும் வாய்ப்புகளும் அதிகம், எதனால் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து அதற்கான சிகிச்சைகள் (ஆஞ்சியோ கிராம், ஆஞ்சியோ பிளாஸ்டி, இதய அறுவை சிகிச்சைகள்) மேற்கொள்ளப்படும்.

கார்டியாக் அரெஸ்ட் : -

மருத்துவர்கள் இதை இதயத் துடிப்பு முடக்கம் எனச் சொல்கிறார்கள். எந்த வித அறிகுறி இல்லாமலும் கூட  இந்தப் பிரச்சினை வரலாம். நமது இதயம் குறிப்பிட்ட கால அளவுக்கு ஏற்றவாறு,  சீரான எலெக்ட்ரிக் பல்ஸ் இருக்கும்போது, சரியாக பம்ப் செய்யும். இதயம் பம்ப் செய்யும்போதுதான் மூளை, நுரையீரல், சிறுநீரகம் என அத்தனை பகுதிக்கும்  சீராக இரத்தம் செல்லும் எலெக்ட்ரிக் பல்ஸ் திடீரென தாறுமாறாக மாறினால், சீரற்ற இதயத் துடிப்பு ஏற்படும். இவ்வாறு சீரற்ற இதயத் துடிப்பு ஏற்படுவதற்குப் பல காரணிகள் உண்டு. அதில் ஒரு காரணி தான் மாரடைப்பு.

கிட்டத்தட்ட மரணம் அடைபவர்கள் அனைவருமே கடைசி நேரத்தில் சடன் கார்டியாக் அரெஸ்ட் வந்து  இறப்பார்கள். தூக்கத்தில் சிலர் இறந்து விடுவதை மாரடைப்பு வந்து இறந்தார்கள் எனச் சொல்வார்கள், இது தவறு, தூக்கத்தில், உடலில் என்ன நடக்கிறது எனத் தெரியாமலேயே ஒருவர் இறந்தால் அவருக்கு திடீர் இதயத்துடிப்பு முடக்கம் (Sudden Cardiac Arrest) ஏற்பட்டிருக்கக் கூடும்.

 கார்டியாக் அரெஸ்ட் வந்தால் தப்பிக்க முடியமா என்றால் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. மாரடைப்பு என்பது நோய், ஆனால் சடன் கார்டியாக் அரெஸ்ட் என்பது  நோய் கிடையாது. தண்ணீரில் மூழ்கி இறக்கிறவர்கள், தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொள்கிறவர்கள், மருந்து குடித்து தற்கொலை செய்பவர்கள், விபத்து என அத்தனை முறையிலும் கடைசியில் ஏற்படுவது  கார்டியாக் அரெஸ்ட் தான்.  

ஒருவருக்கு கார்டியாக் அரெஸ்ட் வந்த பின்னர், முதலுதவி தராமல் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடத்துக்கும் உயிர் பிழைக்கும் வாய்ப்பு 10% குறைகிறது. சி.பி.ஆர் எனச் சொல்லப்படும் முதலுதவி தருவதன் மூலமாக இவர்களின் உயிரைக் காப்பாற்றும் வாய்ப்பு இருக்கிறது, மேலை நாடுகளில் இந்த செயல்முறை வகுப்புகளில் பயிற்றுவிக்கப்படுகிறது, இந்தியாவில் இந்தச் செயல்முறை இன்னும் சரியாக மக்களுக்குத் தெரிவது இல்லை. சி.பி.ஆர் உள்ளிட்ட முதலுதவிகளைத் தெரிந்துகொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யவும். http://bit.ly/2h4yhLq


#CardiacArrest நோயாளிக்கு CPR எப்படி கொடுப்பது என்று பாருங்கள்

  


 
முதலுதவி கொடுத்து உயிர் பிழைக்க வைத்த பின்னர், உடனடியாக  அவரை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்று எதனால் சடன் கார்டியாக்  அரெஸ்ட் வந்திருக்கிறது என்று பார்த்து  அதற்குரிய சிகிச்சை அளிக்க வேண்டும். ஒருவேளை இதய நோய்கள் காரணமாக ஏற்பட்டிருந்தால் அதற்குரிய சிகிச்சைகளைத் தொடர வேண்டும். மாரடைப்பு காரணமாக இருந்தால் அதற்கான சிகிச்சையைச் செய்ய வேண்டும். சடன் கார்டியாக் அரெஸ்ட் வந்து உயிர் பிழைத்தவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

ஆஞ்சியோபிளாஸ்டி: -

பலூன் சிகிச்சை முறை என வழக்கத்தில்  குறிப்பிடுகிறார்கள். மாரடைப்பு ஏற்பட்டிருந்து, இரத்த குழாய்கள் அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் இந்த  சிகிச்சை தரப்படுகிறது.  ஆஞ்சியோ கிராம் மூலமாக எந்த ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது எனக் கண்டுபிடித்த பின்னர் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படும். இது அறுவை சிகிச்சை கிடையாது, மயக்க மருந்துகள் தேவையில்லை.


எந்த இரத்த குழாயில் அடைப்பு  ஏற்பட்டிருக்கிறதா, அங்கே  ரேடியோ ஆர்ட்டரி மூலமாக உள்ளே செலுத்தப்படும் ஒயரில் இரண்டு செ.மி அளவில் சுருங்கி விரியும் தன்மை உடைய பலூன் செலுத்தப்படும். அடைப்பு இருக்கும் இடத்துக்குக் கொண்டு சென்று, பலூனை விரிவடைய வைக்கும் போது, அடைப்பு நீங்கி இரத்தம் பாயும். இந்த சிகிச்சை முறையில் சிலருக்குத் தேவைப்பட்டால் ஸ்டன்ட்  (படம்: கீழே) வைப்பார்கள். ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள், மீண்டும் அடைப்பு ஏற்படலாம் என்ற வாய்ப்பு உள்ளவர்களுக்கு ஸ்டன்ட் வைக்கப்படும். இதன் மூலம் மீண்டும் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.


எக்மோ : -

எக்ஸ்டரா கார்போரியல் மெம்பரேன் ஆக்சிஜனேஷன் என்பதனைத் தான் Extra Corporeal  Membarane Oxygenation  (ECMO) எனக் குறிப்பிடுகிறார்கள்.

திடீரென ரத்த அழுத்தம் குறைவது, மாரடைப்பு ஏற்படுவது போன்ற சமயங்களில் இதயத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, மரணம் ஏற்படும் எனும் சூழ்நிலை வரும் போது, இந்தக் கருவியைப் பயன்படுத்தி சிகிச்சை மேற்கொள்ளப் படுகிறது.

உடலுக்கு வெளியே இருந்து இதயம் மற்றும் நுரையீரலின் பணிகளை இது செய்யும். இந்தக் கருவி பொருத்தப்பட்டிருக்கும் போதே இதயம் மற்றும் நுரையீரலில் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையிலான அடுத்த கட்ட சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும். இது பலனளிக்காத பட்சத்தில் இதய மாற்று அறுவைச் சிகிச்சை தான்  தீர்வு. இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யும் வரைக்கும் எக்மோ கருவியைப் பயன்படுத்த முடியும்.

அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. சூப்பர்! ஆமா பலரும் கார்டியாக் அரெஸ்டிற்கும், மாரடைப்பிற்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறார்கள். இங்கும் பள்ளி, கல்லூரிகளில் பயிற்றுவித்தால், பயிற்சி கொடுத்தால் - கார்டியாக் அரெஸ்ட் வரும் நபருக்கான முதலுதவி - நல்லது.

    நல்ல பதிவு

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.