Friday, December 23, 2022

 

@avargal unmaigal


இன்றைய சமூக வலைதளங்கள் சமூகத்தின் கழிப்பறைகள்

Today's social networks function as society's toilets.


எப்படி ஒரு தனிமனிதனின் உடல் ஆரோக்கியமாகவும் அவன் உண்ணும் உணவு மிக ஆரோக்கியமானதாகவும் இருந்தாலும் அந்த உணவில் ஒரு பகுதி மலம் என்ற கழிவாகக் கழிப்பறையில் வெளியேறுகிறது. அது போலத்தான் பலரின் மனமும் சிந்தனையையும் ஆரோக்கியமாக இருந்து பலருக்கு நிஜ வாழ்க்கையில் உதவிக் கொண்டு ,பல சிறப்பான நூல்களைப் படித்து,   சிறப்பான பேச்சுகளைக் கேட்டுக் கொண்டு இருந்தாலும் அவர்களின் சமுக இணைய தள பக்கங்களைப் பார்க்கும் போது அது கழிவறை போலத்தான் தோன்றுகிறது.  அது அவரின் கழிவறை அங்குச் சென்று நாம் பார்த்துவிட்டு அவரை மோசமானவராகக் கருதிக் கொள்கின்றோம்.. அது நம்மின் தவறான கணிப்புதான்

நாம் ஒருவரை அவரின் உண்மையான செயல்களை வைத்து அவரை எடை போடுவோம் அதைவிட்டுவிட்டு சமுக கழிவறையான இணையதளங்களில் அவர் விட்டுச் செல்லும் கழிவுகளை ஆராயாமல் இருப்போம்.
 

இதை இன்று எழுதக் காரணம் நான் நேரில் பார்த்துப் பழகிய பலர் மிக நல்லவர்களாகவும் எதையும் எதிர்பாராமல் பலருக்கு உதவுவதையும் அன்போடும் அனுசரணையாகப் பழகியவர்கள் பலர்  சமுக இணையதள பக்கங்களில் சங்கிகளாக மாறி  பல கழிவுகளை எழுதிப் பதிவிடுகிறார்கள்

அது அவர்களின் கழிவரை கழிவுகள் என்று கருதி அங்குச் செல்லாமல் இருக்க வேண்டுமே தவிர அந்த கழிவுகளை வைத்து அவர்களை எடை போடக் கூடாது என்பதுதான்


அன்புடன்
மதுரைத்தமிழன்
விடுமுறை கிறுக்கல்கள்

3 comments:

  1. ஆம்... உண்மை... நன்றி எனும் முதன்மை உணர்ச்சி கூட இல்லை...

    ReplyDelete
  2. ஆம்... உண்மை... நன்றி எனும் முதன்மை உணர்ச்சி கூட இல்லை...

    ReplyDelete
  3. சூப்பர் நல்ல கருத்து. ஒருவர் எழுதுவதை வைத்து எடை போடக் கூடாது என்பது எங்கள் கருத்து.

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.