Friday, December 30, 2022

 

@avargal unmaigal

இந்த தலைவர்களின் ( 2023 )புத்தாண்டு தீர்மானங்கள் என்னவாக இருக்கும்?


மோடி :  நிச்சயம் இந்த புத்தாண்டிலாவது  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இரண்டாவது செங்கலையாவது அனுப்பிவிடனும் என்பதாகத்தான் இருக்கும்


ராகுல் காந்தி : ஸ்டாலினை மட்டுமாவது பாராளுமன்ற தேர்தல் வரை தம் கூட்டணியில் வைத்திருந்து பாஜக கூட்டணியில் போய் சேர்த்து விடாமல் இருக்கச் செய்ய வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்


ஸ்டாலின் : பாஜகவுடன் கூட்டணி வைத்து மருகனுக்கு மத்திய அரசில் ஒரு உயர்ந்த பதவிவை வாங்கி கொடுத்து விடனும் என்பதாகத்தான் இருக்கும்.

உதயநிதி : இந்த ஆண்டில்  நிச்சயம் துணை முதல்வராகிவிடனும் என்பதாகத்தான் இருக்கும் .

வைகோ :அரசியலில் பிரமாண்டமான வாய்ப்பு இல்லை என்றாலும் வடிவேல் மாதிரி மீம்ஸ் உலகிலாவது நாம் இடம் பெற்று புகழைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்

அன்புமணி ராமதாஸ் : இந்த ஆண்டில் உதயநிதியிடம் என்னிடம் ஒரே மேடையில் விவாதம் நடத்தத் தயாரா என்று சவால் விட வேண்டும்,

ஒபிஎஸ்  : இந்த ஆண்டிலாவது அதிமுக சின்னத்தை முடக்கி எடப்பாடியைக் கட்சி நடத்தவிடாமல் பண்ணி விடனும்

எடப்பாடி : மோடி& அமித்ஷா காலில் விழுந்து அவர்களின் பாதங்களை முத்தமிட்டு கட்சியைத் தனதாக்கி கொள்ள வேண்டும்

நிர்மலா சீதாராமன் : ரயில்வே துறையைத் தனியாரிடம் கொடுத்துவிட வேண்டும் முடிந்தால் இந்திய ராணுவத்தை நிர்வாகிக்கும் பொறுப்பை அதானியிடம் கொடுத்து விட வேண்டும்

அமித்ஷா  : நம் பையனை அதானி அம்பானி டாடாவிற்கு அடுத்தபடியாக ஆக்கிவிடவேண்டும்.

அண்ணாமலை : கட்சி நிர்வாகிகள் மறைமுகமாக எடுக்கும் பலான விடியோக்கள் உயர்தர தரத்தில் இருந்தால்தான்  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அறிவித்துவிடனும்

மருத்துவர் ராமதாஸ் : பாஜகவுடன் கூட்டணி வைத்து நல்லா பணத்தைக் கறந்துவிட வேண்டும்.

பிரேமலதா :  பாராளுமன்ற தேர்தல் வரும் வரை கணவர் உயிர்பிரிந்து விடாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்



அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.