ஆர்.எஸ்.எஸ் இயக்கம் வளரும் அளவிற்குப் பெரியார் இயக்கம் வளராதது ஏன்?
கே.
பி. ஹெட்கேவர் , இந்துத்துவம், இந்து தேசியம் எனும் இந்துத்துவா கொள்கையை
நிலைநாட்ட, ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தை, நாக்பூரில் 1925ஆம் ஆண்டில்
நிறுவினார்.. இது ஒரு வலதுசாரி இந்துத்துவா அமைப்பு .அதே ஆண்டில்தான்
சுயமரியாதை இயக்கம் ) சமுதாயத்தின் பிற்பட்ட மற்றும் பின்தங்கிய,
தாழ்த்தப்பட்ட, மக்களின் வாழ்வியல் உரிமைக்காகவும் அவர்களின் மனித
சமத்துவத்தை வலியுறுத்துவதற்காகவும் 1925 ஆம் ஆண்டு பெரியார் ஈ வெ
இராமசாமி தமிழக மாநிலத்தில் (அப்போதைய சென்னை இராஜதானி)
தொடங்கினார்.இவ்வமைப்பு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின்
சுயமரியாதையை வலியுறுத்தி, வர்ணாசிரம தர்ம தத்துவத்தில் ஊறிய
சமூகத்தானிடமிருந்து இவர்களை மீட்டெடுக்கவும், அவர்களைச் சமுதாயத்தின்
மேல்மட்டத்திற்கு உயர்த்தவும் பாடுபட்டது
கே. பி. ஹெட்கேவர்
தேசப்பற்று என்ற போர்வையிலும் பெரியார் பகுத்தறிவு என்ற போர்வையிலும்
இவ்விருவரும் இயங்கி வந்தனர். ஆர்.எஸ்.எஸ் இயக்கம் வட மாநிலங்களில் பரவ
தொடங்கி இன்று உலகின் பல்வேறு நாடுகள் வரை பரவியுள்ளது மட்டுமல்லாமல் மிகப்
பெரிய அளவில் வளர்ந்தும் இருக்கிறது.. அதன் ஆதிக்கம் இப்போது இந்திய
ஆட்சியில் மட்டுமல்ல உலகின் பல அதிகார ஆட்சியிலும் மறைமுகமாகப் பங்கேற்று
இருக்கிறது என்பதுதான் கசக்கும் உண்மை
அதே நேரத்தில் பெரியாரின்
சுயமரியாதை இயக்கம் தமிழகத்தில் வேரூன்றி சிங்கப்பூர் மலேசியா போன்ற
நாடுகள் வரை பரவினாலும் அதன் வளர்ச்சி ஆர்.எஸ்.எஸ்ஸின் வளர்ச்சி போல இல்லை
என்ற உண்மையை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்
ஆர்.எஸ்.எஸ் வளர்வதற்கும் பெரியார் இயக்கம் வளராதற்கும் முக்கிய சில காரணங்கள் உள்ளன.
ஆனால் இதே நேரத்தில் பெரியாரால் ஆரம்பிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கமானது பெரியார் இருக்கும் வரை அது மிகத் தீவிரமாகச் செயல்பட்டுப் பல இடங்களில் வெகு வேகமாகப் பரவி வந்தது.. ஆனால் அவருக்குப் பின் வந்தவர்கள் பெரியாரைப் போல அந்த இயக்கத்தை வழி நடத்தவில்லை. பெரியார் திரட்டி வைத்த நிதியை அவரின் கொள்கைகளைப் பாப்ப பயன்படுத்தாமல் தங்களின் சுயநலத்திற்காகப் பெரியாருக்குப் பின் வந்த தலைவர்கள் பயன்படுத்துகின்றனர். சுயமரியாதை இயக்கத்துத் தலைவரான வீரமணி சுயமரியாதை கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல என்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை என்றுதான் சொல்ல முடியும். சுயமரியாதை இயக்கம் அவ்வப்போது செய்வதெல்லாம் தாலியை அறுப்பது, பூணலை அறுப்பது, சாஸ்திரிகள் இல்லாமல் திருமணம் செய்வது பிராமணர்களை இழிவு படுத்துவது இதைமட்டும் செய்தால் சுயமரியாதை இயக்கம் வளர்ந்துவிடுமா என்ன?
மூட நம்பிக்கைகளை விதைப்பது மிக எளிது ஆனால் பகுத்தறிவைத் தூண்டுவது அவ்வளவு எளிதல்ல அதற்குக் கொஞ்சமாவது சிந்திக்கும் அறிவு இருக்கவேண்டும் சுயமரியாதையை பகுத்தறிவை அடுத்தவர்களுக்குக் கற்பிக்கும் முன் தங்களது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அதைக் கற்பிக்க வேண்டும்/ சுயமரியாதை கொள்கைக்காக பாடுப்பட்டவர் என்று சொல்லும் கலைஞரால் கூட அவர் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அதை கற்றுக் கொடுக்க இயலவில்லை அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் மற்றும் உறுப்பினர்களின் குடும்பத்தினர் அனைவரும் அதன் கொள்கைகளை ஏற்றுக நடக்கக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள்.
சுயமரியாதை இயக்கத்தில் இருப்பவர்கள் மிக சுயநல மிக்கவர்கள் இருப்பதால் அந்த இயக்கம் வளரவில்லை அட்லீஸ்ட் இனி வருங்காலத்திலாவது சுயநலமில்லாமல் போலி அரசியல் பேசாமல் சுயமரியாதை இயக்கத்தை வளர்க்கச் செய்ய வேண்டும்.
அன்புடன்
மதுரைத்தமிழன்
நல்லதொரு யோசனை...
ReplyDelete