சுபமுகூர்த்தம் பார்க்கும் & சாஸ்திர சம்பிரதாயங்களைப் பார்க்கும் மக்களே வயிற்று எரிச்சலைக் குறைத்துக் கொள்ளுங்களேன்
மூட நம்பிக்கை என்று கருதும் ஒருத்தர் நல்ல காலத்தில் பதவியேற்றால், அதைச் சாஸ்திரம் சம்பிரதாயம் பார்க்கும் மக்கள். அதைப் பாராட்டுவதைவிட அவனைத் திட்டி தீர்த்து ராகு காலத்தில் பதவியேற்க வேண்டியதுதானே என்று கரித்துக் கொட்டுகிறார்கள். ஏய்யா ஒருத்தன் நல்லபடியா மாறிவருவது பெருமைதானே !அதுவும் நாட்டின் அமைச்சராகப் பதவி ஏற்பவர் நல்ல காலத்தில் பதவியேற்றால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் .நாட்டும் மக்களும் நல்ல பலனைத்தானே பெறுவார்கள் என்று நினைப்பார்களா? அல்லது உனக்கு இதிலே நம்பிக்கை இல்லையே அதனாலா கெட்ட காலத்தில் பதவியேற்று நாட்டுக்குக் கெட்டதை செஞ்சு போ என்று நினைப்பார்களா?
சரி உங்கள் பேச்சைக் கேட்டு அவர் ராகு காலத்தில் பதவியேற்று எல்லாவற்றையும் நல்லபடியாக மக்களுக்குச் செய்து முடித்தால் அதன் பின் நீங்கள் சுபமுகூர்த்தம் பார்த்துச் செயல்படுவதையே விட்டு விடுவீர்களா? அதற்கு உங்களால் உத்தரவாதம் தர முடியுமா?
நமக்குப் பிடிக்காதவன் நல்ல பழக்கவழக்கங்களைப் பின்பற்ற ஆரம்பித்தால் அதைப் பாராட்ட ஆரம்பியுங்கள் .அதைவிட்டு விட்டுக் கரித்துக் கொட்டாதீர்கள்.
கடவுளை நம்பாதவன் கடவுளை நம்பி வருவது தவறா? இந்து மத சம்பிரதாயங்களை இது வரை பின்பற்றாதவன் இப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பின்பற்றுவது தவறா?
பகுத்தறிவு படைத்தவன் ஆன்மீக பாதைக்கு அடி எடுத்து வைக்கிறான் என்றால் அவனை வரவேற்பதுதானே சரி ஆனால் எங்கே அவன் வந்தால் நாம் இதுநாள் வரை ஆன்மீகத்தைச் சொல்லி ஏமாற்றி வந்தோமே அந்த இடத்தை கைப்பற்றிக் கொண்டால் நாம் நிலை என்ன ஆகும் என்று நினைத்துத்தானே வருபவனை மீண்டும் உன்னோட பாதைக்கே செல் என்று கதறுவது ஏன் கொண்டைய மறைக்காமல் வலம் வரும் பக்தால்ஸ்களே
அவர் சுபமுகூர்த்தத்தில் பதவி ஏற்கலாமா என்று கரித்துக் கொட்டுவதற்குப் பதிலாக, எவ்வளவோ திறமையானவர்கள் அவர்கள் கட்சியில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்களே அவர்களை விட இவருக்கு அந்த பதவி ஏன் என்று விமர்சனம் வைத்தவளாவது ஒரு நியாயம் இருக்கும்.
பதவி ஏற்பவருக்கு நல்ல காலம் கெட்ட காலத்தில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவரின் தாயாருக்கு அதில் நம்பிக்கை இருக்கிறதுதானே. அந்த தாயார் மகனிடம் இப்படிச் செய்ய என்று சொல்லும் போது ,தாய்க்காக தனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் அவர் சொற்படி நடப்பது பெருமைதானே.. இந்த காலத்தில் தாய் தந்தை சொல்வதை யாரும் கேட்காத காலத்தில் இப்படி ஒரு பிள்ளை கேட்கும் போது அதற்காகவாவது பாராட்டுங்கள்
படித்தால் மட்டும் போதாது கொஞ்சமாவது யோசியுங்கள்
நல்ல காலம் மட்டுமே பார்க்காதீர்கள் எல்லோரும் நல்லா இருக்கட்டும் நல்லது செய்யட்டும் என்று நினையுங்கள்,
பாரத மாதாகீ ஜெய், தமிழின தலைவர் கலைஞருக்கு ஜெய்... நாட்டை ஆளும் தளபதிக்கு ஜெய்... அந்த துர்க்கை அம்மாவிற்கும் ஜெய்
பொழுதன்னைக்கும் பகுத்தறிவு பேசுபவன்
தனக்கு என்று வரும் போது
ஆன்மிக வழியில் செல்கிறான்
ஆனால்
பொழுதன்னைக்கும் ஆன்மிகத்தில் மூழ்கி இருப்பவன்
தனக்கு என்று வரும் போது
நாட்டை அழித்தொழிக்கும் பணியைச் செய்கிறான்
இது புரியாமல பாமர மக்கள் அறிவிருந்தும் இல்லாதவர்கள் போல இருக்கிறார்கள் அல்லது நடிக்கிறார்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
தனி மனித விருப்பத்திற்கு இடையில் தடை எதற்கு...?
ReplyDeleteஇரண்டு பக்கமும் சிந்திக்க வைத்துவிட்டது. க வரிசை சொற்கள்
ReplyDelete