Thursday, December 8, 2022

 மோடி குஜராத்தில் பெற்ற வெற்றி பற்றி ஒரு சில வரிகள் 

 

@avargal unmaigal


ப்ளஸ் டூவில் ஸ்டேட் பர்ஸ்ட் வாங்கிய மாணவன் மீண்டும் ஐந்தாம் க்ளாஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றது போலத்தான் இருக்கிறது. இது மாபெரும் வெற்றி அல்ல.. இந்தியா முழுவதும் நடந்த தேர்தலில்   அதிக பெரும்பான்மை பெற்று ஆட்சியை நடத்துபவருக்கு ஒரு மாநிலத்தில் அதுவும் சொந்த மாநிலத்தில் தன்  சொந்த இன மக்கள் ஆதரவு பெற்று வெற்றி பெறுவது ஒன்றும் கடினமல்ல..


இந்திய எல்லைக்குள் வந்து வீடு கட்டிக் கொண்டிருக்கும் சீன ராணுவ வீரர்களை சர்ஜிக்கல் ஸ்டிரைக் பண்ணி அவர்களை துண்டைக் காணும் துணியைக் காணும் என்று ஓட வைப்பதுதான் வெற்றி அதைச் செய்தால்தான் அவருக்குப் பெருமை.


அதைவிட்டு விட்டு உலக செஸ் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ் இளைஞன் மடிப்பாக்கத்தில் நடந்த போட்டியில் ஒருவனை வீழ்த்திவிட்டு  அதைப் பெருமையாகப் பேசுவது போல மோடி பேசுவது என்ன வகையில் நியாயம் மக்களே



இந்திய ஊடகங்கள்-


- மோடியால் குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றது.
- ஜே.பி.நட்டாவால் பாஜக ஹிமாச்சல பிரதேசத்தை இழந்தது.
- டெல்லி மக்களால் பாஜக டெல்லியை இழந்தது.


 
 
அன்புடன்
மதுரைத்தமிழன் 
 

மோடியை பிடிக்காதவன் , மோடியின் குராஜத் வெற்றியை இப்படித்தான் எழுத முடியும். ஹீஹீ


2 comments:

  1. இன்னுமா ய்யா rightclick ஆப் பண்ணி வச்சிருக்கீரு?
    அட ச்சேய்ய்ய்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.