Wednesday, July 17, 2013



இது எனது கற்பனை காதலிக்கு எழுதிய கடிதம். இதை கல்லூரியில் அடி எடுத்த வைத்த இளைஞன் +2 மாணவிக்கு எழுதிய கடிதமாக எண்ணி படிக்கவும்

இங்கே என் இதயம் பேசுகிறது....




கண்மணி என்ற என் கண்ணின் மணியே.....

நீ என் கண்ணின் மணியாக இருந்து என் வாழ்க்கையில் வெளிச்சம் தருகிறாய். கண்மணியே சிறுவயதில் இருந்து நாம் எதிர் எதிர் வீட்டில் வசித்து வந்தாலும் எப்படி மின் வெட்டு திடீரென்று தமிழகத்தை அதிகம் பாதித்ததோ அது போல ஒரு நாள் திடீரென்று உன் கண் வெட்டு கண்டு என்மனமும் நிலை குழைந்துதான் போனது.

என் வாழ்க்கை வெளிச்சமில்லாமல் போகுமோ என்று நினைத்திருந்த எனக்கு உன் ஈரப் பார்வையால் வெளிச்சம் கூட்டிச் சென்றாயே. கண்மணியே இரவு பகல் என்று மாறுவது சூரியனின் வருகை மற்றும் மறைவினால் என்ற அறியாமையால் மக்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு தெரியவில்லை இரவுபகலுக்கு காரணம் உன் கண்கள்தான் என்று. நீ கண் விழித்திருக்கும் நேரம் பகல் என்றும் நீ மூடி நித்திரையில் ஆழ்ந்து இருக்கும் நேரம் இரவாக மாறிவிடுவது கூட அறியாதவர்களாக இருக்கிறார்கள்


கண்மணியே எல்லோரும் சூரிய உதயத்தை பார்க்க ராமேஸ்வரம் கடற்கரைக்கு சென்றால் நானோ உன் வீட்டு வாசல்படி நோக்கி உன் வரவை எதிர்  பார்த்து இருப்பேன்.

கண்மணியே என் அம்மா தினமும் பலதடவை சொல்லுகிறார்கள் நல்லாப் படி  நல்லாப் படி என்று அப்பதான் எதிர்காலம் நல்லா இருக்குமாம். ஆமாம் நான் அம்மா சொல் தட்டாத பையன் அதனால்தான் தினமும் உன் மனதை படித்து கொண்டிருக்கிறேன், நிச்சயம் என் வாழ்க்கை பிரகாசம்தான்.

என் வீட்டு தோட்டத்தில் உள்ள மலரெல்லாம் பூத்து குலுங்கி சிரித்து கொண்டிருக்கின்றன அதற்கு காரணம் நீ தான். இன்னுமா புரியவில்லை.. என் வீட்டு தோட்டத்தில் இருந்து உன் வரவை எதிர்பார்த்து,  உன் வீட்டையே நோக்கி கொண்டிருந்தால் பார்ப்பவர்கள் கேலி செய்வார்கள் என்பதால் ,என் தோட்டத்தில் தண்ணிர்விட்டுக் கொண்டே உன் வீடு நோக்கி கொண்டிருக்கிறேன் அதன் காரணமாக என் தோட்டத்து மலர் எல்லாம் சிரிக்கின்றன. உன்னால் அந்த தோட்டமும் அல்ல நீ வெளி வந்து அந்த ஒற்றப் புன்னகையை என்னை நோக்கி வீசும் போதெல்லாம் என் மனத் தோட்டமும் மகிழ்ச்சியால் பூத்து குழுங்குகின்றன.


 கண்மணியே இரவு வரும் பகலும் வரும் ஆனால் நீ இரவில் என் அருகில் இருந்தால் இரவும் பகலாகும் மனதும் குதுகுலமாகும் வாழ்க்கையும் இன்பமாக இருக்கும்.


கண்மணியே கடவுளே இல்லையென்ரறு பேசிக் கொண்டிருந்த போது, நீ என்னைக் கிராஸ் செய்த போது ,அட பார்ரா கடவுளே என் முன்னால் போகுதே என்று எண்ணி வியந்தேன். கடவுளாகிய கிருஷ்ணனை மீரா உருகி உருகி காதலித்தாள் என்பது பழங்கதை இப்போது கண்மணி உன்னை நான் உருகி உருகி காதலிப்பதுதான் நிகழ் மற்றும் எதிர்கால கதை.



கண்மணியே போதை வர சரக்கு அடிப்பவர்கள் முட்டாள்கள் அவர்களுக்கு தெரியவில்லை உன் பார்வை ஒரு தடவைபட்டால் வாழ்நாள் முழுவதும் போதைவரும் என்று.

கண்மணியே என் உணர்வுகள் போதை கொண்டு தள்ளாடுதே!

கண்மணியே காதலின் சின்னம் தாஜ்மஹால் என்பவர்களுக்கு அது இறந்த காதலின் சின்னம் என்பதும் நீ தான் உயிர் உள்ள அழகிய தாஜ்மஹால் என்பது தெரியவில்லை


கண்மணியே
நான் மலராய் இருந்திருந்தால் உன் தோட்டத்தில் பூத்து குலுங்கி இருப்பேன்
குயிலாக இருந்திருந்தால் உன் வீட்டைச் சுற்றி வந்து இன்னிசை பாடி இருப்பேன்
மழையாக இருந்திருந்தால் உன் முற்றத்தில் சாரலாக பொழிந்திருப்பேன்
நான் தென்றல் காற்றாய் இருந்திருந்தால் உன் சேலையிலாவது ஒளிந்திருப்பேன்
ஆனால் நான் மனிதனாக பிறந்துவிட்டதால் உன்னை நினைத்து இப்படி புலம்பி கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறேன்



 கண்மணியே என்னைத் தவிர வேறு யாரும் உனக்கு தாலி கயிறு கட்டினால் அந்த பாக்கியம் இழந்த நான் எனக்குதானே தூக்கு கயிறு மாட்டிக் கொள்வதை தவிர எனக்கு வேறு வழி ஏதும் இல்லை

கண்மணி ஒன்றுமட்டும் உறுதியாக கூறுகிறேன் உன் கால்கள் நான்கு கால்கள் கொண்ட மணமேடையில் ஏறும் போது என் கால்கள் கால் இல்லா கட்டிலில் ஏறும் மறவாதே...


 கண்மணியே இப்படி உன்னை நினைத்து உருகி கொண்டிருக்கும் எனக்கு உன்மீது நான் கொண்டுள்ள காதலை சொல்ல தைரியமில்லாததால்  உன்னை நினைத்து கடிதம் எழுதிவிட்டேன் ஆனால் அதை உன்னிடமும் கொடுக்க என்னிடம் தைரியம் இல்லை. அதனால் சீனுவின் பரிசுப் போட்டிக்கு அனுப்புகிறேன்.


அவரது போட்டியில் இந்த கடிதம் வெற்றி பெற்றால் என்னுடைய காதலிலும் நான் வெற்றிப் பெறுவேன்  என்ற நம்பிக்கை இருக்கிறது. இது எல்லாம் என் கையில் இல்லை அதை தேர்ந்தெடுக்கும் நடுவர் கையில்தான் இருக்கிறது. இந்த பெரியவர்கள் நமது காதலை வளர்ப்பார்களா அல்லது இளவரசன் காதலைப் போல நம் காதலை அழித்து விடுவார்களா பார்ப்போம்.

கண்மணியே இன்னும் பல கற்பனைகளை சுமந்து எனது  காதல் பயணம் தொடருகிறது......அதற்கு முடிவே இல்லை.


அன்புடன்

மதுரைத்தமிழன்



டிஸ்கி : இப்படி எல்லாம் காதல் கடிதம் எழுதாமல் காதலித்து கல்யாணம் பண்ணி வெற்றி பெற்றுள்ளேன். ஆனால் என் காதல் கடிதம் வெற்றி பெறுமா என்றால் அது ஒரு கேள்விக் குறியே

டிஸ்கி : இதைப்படிக்கும் பெண்கள் என்மேல் காதல் கொண்டு காதல் கடிதங்கள் அனுப்ப வேண்டாம்

20 comments:

  1. தினமும் மனதை படித்ததும், மலரை எல்லாம் பூத்து குலுங்கி சிரிக்க வைத்ததும், நடுவர்களுக்கு விதித்த எச்சரிக்கையும், உங்கள் பாணியில் ரசிக்கத் தக்கவை...

    போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. கண்மணிக்கு நாந்தான் அண்ணண் என்று அருவாளை தூக்கி வந்திடுவீங்களோ என்று நினைத்தேன்.. நல்லவேளை நான் தப்பிச்சேன். வாழ்த்துக்கு நன்றி

      Delete
  2. திண்டுக்கல் தனபாலன் உங்களுக்காக ஒரு கவிதை.. கவிதை என்றால் இரண்டு வரியை நான் காக உடைத்துப் போட்டு எழுதுவது என்று நான் அறிந்தேன் . நான் அறிந்ததை வைத்து ஒரு கவிதை இதோ

    தமிழ் பெண்ணுக்கு
    பொட்டு அழகு
    அதுபோல
    தமிழ் பதிவிற்கு
    உங்கள்
    கமெண்ட் அழகு

    ReplyDelete
  3. இது ப்ளஸ் டூ படிக்கும்போது எழுதுனதா நினைச்சுக்க சொல்லி இருக்கீங்க. அப்படின்னா, நீக்க ப்ளஸ்டூ படிக்கும்போது குணா படம் வெளி வந்த நேரமா இருக்கும்ன்னு நினைக்குறேன். ஏன்னா, பதிவு முழுக்க கண்மணின்னு தான் இருக்கு. இப்போ ஓரளவுக்கு உங்க வயசு தெரியுதுங்கோ!

    ReplyDelete
    Replies
    1. குணா படமா அது எங்கம்மா கல்யாணதிற்கு அப்புறம் என் அப்பா முதலில் கூப்பிட்டு போன படமுன்னு சொல்லி கேள்வி பட்டு இருக்கேன்

      Delete
  4. இந்த பதிவுல எத்தனை இடத்துல கண்மணின்னு வருதுன்னு ஒரு போட்டி வச்சு, அதுல ஜெயிக்குறவங்களை உங்க செலவுல அமெரிக்கா கூட்டி அங்க இருக்குற இடத்தைலாம் காட்டுங்க சகோ!

    ReplyDelete
  5. உங்களை ஒரு தொடர்பதிவுல சிக்க வச்சிருக்கேன். சீர் செனத்தியோட வந்து சேருங்க சகோதரி வீட்டுக்கு
    http://rajiyinkanavugal.blogspot.in/2013/07/blog-post_8644.html

    ReplyDelete
  6. காதல் காம போராட்ட கவிதை அற்புதம்

    காதல் தோல்விக்கு மருந்து தற்கொலை தான் என்ற பார்வையில் மட்டும் உங்களிடம் இருந்து நான் விலகி நிற்கிறேன், மற்றபடி உங்கள் கண்மணியை கண்ணின்மணியை உருகு உருகி காதலித்துள்ளீர்கள் போல

    ஆமா கடைசில நடுவர்களையும் லைட்டா மிரட்டி இருக்க மாதிரி தெரியுதே ஹா ஹா ஹா

    ReplyDelete
  7. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா இருக்குங்க உங்க கடிதம்.
    சூப்பர் படங்கள்... சூப்பர் கேப்ஷன்ஸ்...
    பாவம் கண்மணிகளுக்குத்தான் கொடுத்துவக்கலே, உங்கள மாதிரி ஒரு காதலன் கிடைக்க!!

    ReplyDelete
  8. காதலியின் கண்கள் பற்றிய வர்ணனை அருமை.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் நண்பரே !!!

    ReplyDelete
  9. ஒரு யோசனை இந்த கடிதத்தை உங்க மனைவிடமே படித்து காட்டுங்க...

    ReplyDelete
  10. அருமையான காதல் கடிதம்... போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  11. என் கம்மெண்டை காணோமே! comment moderation வச்சிருக்கறதால கமெண்ட் பப்ளிஷ் ஆச்சா இல்லையான்னு தெரிஞ்சிக்க முடியல.அதுக்குள்ள வேற வேற பதிவை போட்டுடறதால follow பண்ண முடியல

    // காதல் நகைச்சுவை கவிதைன்னு கலந்து கலக்குற இந்த கடிதத்தை எந்த பெண்கள் படித்தாலும நிச்சயம்
    மயங்கி விடுவார்கள்.அட்டகாசமான படங்கள் வேற, இதைதான் உனக்குதான் எழுதினேன்னு உங்க மிசஸ்கிட்ட காட்டினா பூரிக் கட்டையே பறந்து வராது. பரிசு பெற வாழ்த்துக்கள் //
    இதுதான் நான் போட்ட கமெண்ட்

    ReplyDelete
  12. 'காதல் போயின் சாதல்' கொள்கையில் எனக்கு(ம்) உடன்பாடு இல்லை! மிரட்டி வரும் காதல் காதலாகாது என்பதும் என்னுடைய கருத்து! :))) அந்த இடம் தவிர மற்ற இடங்கள் ரசிக்க வைத்தன!

    ReplyDelete
  13. ஆஹா காதலின் தத்துவம் சூப்பர் அழகான வாழ்க்கையைத்தருபவள் நல்ல காதலி நல்ல மனைவி!வாழ்த்துக்கள் போட்டியில் வெற்றி பெற !

    ReplyDelete
  14. காதலில் கசிந்துருகி எழுதியிருக்கீங்க பாஸ்... கலக்கல்..

    ReplyDelete
  15. ரொம்ப நாட்களாக உங்களை வலைபூ ஜம்ப் ஆகி ஓடிகிட்டே இருந்தது. இப்போதுதான் சரியாக இருக்கிறது.

    ReplyDelete
  16. உங்கள் கண்மணியிடம் உங்கள் உள்ளத்தை திறந்து காட்டியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள். அங்கங்கே சின்னச்சின்ன கவிதைகள், காதல் தத்துவங்கள் நன்றாக இருக்கின்றன.

    தூக்கு கயிறு பற்றி மதுரை தமிழன் பேசலாமா?
    இந்தக் கடிதம் வெற்றி பெற்றால் தான் உங்கள் காதல் வெற்றியா? கொஞ்சம் இடறுகிறதே!

    எப்படியாயினும் போட்டியில் உங்கள் கடிதம் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.