Friday, April 5, 2013


குற்றம் ஓன்றே ஆனால் தண்டனை ? அமெரிக்க Vs இந்தியா

அமெரிக்காவிலும் இந்தியாவிலும் சட்டம் எப்படி  பெண்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பது பற்றிய பதிவு

மோசமான கலாச்சாரம் கொண்ட நாடு அமெரிக்கா என்று இந்தியாவில்  வசிக்கும் இந்தியர்களால்  கருதப்பட்ட நாட்டில் பெண்களை பாலியல் பலாத்காரம் ( sexual harassment charge ) பண்ணியவருக்கு கிடைத்த தண்டனையும்,  அது போல பாலியல் பலாத்காரம் நடைபெற்ற இந்தியாவில் குற்றவாளிக்கு கிடைத்த தண்டனை பற்றிய செய்திகள் உங்கள் பார்வைக்கு. இதைப் படித்து விட்டு உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை தரமான எழுத்தில் உங்களுக்கு நேரம் கிடைத்தால் பதியவும்.

இந்த பதிவின் நோக்கம் சட்டம் எப்படி செயல்படுகிறது என்பதை சொல்லவே.


அமெரிக்கா:


நியூயார்க்: அமெரிக்காவில் பாலியல் பலாத்கார வழக்கில் 59 ஆண்டு கால சிறைத் தண்டனையை அனுபவிக்கும் இந்திய பேஷன் டிசைனர் ஆனந்த் ஜோனுக்கு மற்றொரு பலாத்கார வழக்கில் 5 ஆண்டுகால சிறைத் தண்டனையை நியூயார்க் நீதிமன்றம்  விதித்துள்ளது. அமெரிக்க வாழ் இந்தியரான ஆனந்த் ஜோன், கேரளாவை சேர்ந்தவர். அமெரிக்காவில் கடந்த 1999-ம் ஆண்டு முதல் பேஷன் டிசைனர் தொழிலை தொடங்கினார். பிரபல நட்சத்திரங்களின் ஆடை வடிவமைப்பாளராக செயல்பட்டு பிரபலாமானவராக திகழ்ந்தார். ஆனந்த் ஜோன் மீது கடந்த 2007 ஆம் ஆண்டு பாலியல் புகார் கூறப்பட்டது. பேஷன் உலகில் மாடலாக வலம் வர வாய்ப்பு தருவதாக கூறி பல பெண்களை அவர் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனந்த் ஜோன் மீது புகார் கூறியோரில் 14 வயது சிறுமியும் அடக்கம். இது தொடர்பான வழக்கில் கலிபோர்னியா நீதிமன்றம் அவருக்கு 59 ஆண்டுகால சிறைத் தண்டனை விதித்தது. தற்போது அந்த சிறைத் தண்டனையை ஆனந்த் ஜோன் அனுபவித்து வருகிறார். மேலும் மான்ஹாட்டன், டெக்சாஸ், நியூயார்க் நகர நீதிமன்றங்களிலும் ஆனந்த் மீது பலாத்கார வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் மான்ஹாட்டன் நீதிமன்றம் ஆனந்த் ஜோனுக்கு 5 ஆண்டுகால சிறைத் தண்டனை விதித்தது. இந்நிலையில் நியூயார்க் நகர நீதிமன்றத்தில் ஆனந்த் ஜோன் மீதான ஒரு பலாத்கார வழக்கு விசாரணைக்கு வந்தது. இதற்காக கலிபோர்னியாவில் இருந்து நியூயார்க் சிறைக்கு ஆனந்த் மாற்றப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தார். அப்போது இந்தியாவில் இருந்தும் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆனந்த் ஜோனின் உறவினர்களும் நண்பர்களும் நீதிமன்ற அறையில் குவிந்திருந்தனர். அவர்கள் அனைவரும் வெள்ளை டிசர்ட் அணிந்து அதில் ஆனந்த் ஜோனை விடுவிக்கக் கோரும் வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. நீதிமன்றத்துக்கு வெளியேயும் ஆனந்த் ஜோனை விடுவிக்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர். நீதிமன்றத்தில் ஆனந்த் ஜோனிடம் இந்த வழக்கு தொடர்பாக ஏதேனும் கூற விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்டதற்கு, எனக்காக இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என்று மட்டும் கூறினார். இறுதியாக நியூயார்க் நீதிமன்றம் ஆனந்த் ஜோனுக்கு பலாத்கார வழக்கில் 5 ஆண்டுகால சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.


 இந்தியா :



 சன் டி.வி.,யின் முதன்மை செய்தி ஆசிரியராக இருந்தவர் ராஜா. இவர் மீது, அந்த தொலைக்காட்சியில்  செய்திவாசிப்பாளராக இருந்த அகிலா என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார். அதில், செய்தி ஆசிரியர் ராஜா, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டல் விடுத்து வருவதாக தெரிவித்து இருந்தார். இந்த புகார் குறித்து மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி ராஜாவை, கடந்த 20ம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்து இருந்தனர் .இதனையடுத்து, சன் தொலைக்காட்சி நிர்வாகம் அகிலாவை பணியிடை நீக்கம் செய்தது. இந்த அநீதிக்கு எதிராக பெண் பத்திரிக்கையாளர்களும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பெண்கள் அமைப்புக்களும் களத்தில் இறங்கினர்.  சன் டிவி நிர்வாகத்தின் ஆதிக்கமான செயல்பாடுகள் வன்மையான கண்டனத்துக்கு உள்ளாகின. பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சன் டி.வி., செய்தி ஆசிரியர் ராஜாவுக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.
4
குற்றம் ஓன்றே ஆனால் தண்டனை? அமெரிக்காவில் 59 ஆண்டுகள் சிறைவாசம் இந்தியாவில் சில நாட்கள் சிறைவாசம்
பாருங்கய்யா இந்தியாவில் இப்படிதான் சட்டம் தன் கடமையாற்றுகிறது...
அன்புடன்
மதுரைதமிழன்

   

7 comments:

  1. இதுலே உங்களுக்கு என்ன சந்தேகம்? இந்தியர்கள் வளர்ச்சியை பொருக்க முடியாத அமெரிக்கர்கள் அநியாயமாக ஒரு இந்தியனுக்கு கொடுத்த தண்டனை தான் இது; அப்படித்தான் நம்ம ஊர் நடிகை நடிகர்கள் பாடகர்கள் சொல்கிறார்கள்.

    அதை எல்லோரும் இந்தியாவில் நம்புகிறார்கள்...ஆம். இவர்களை விட அறிவு ஜீவிகள் இந்தியாவில் கிடையாது எனபதால்...நம்ம ஊர் நடிகை நடிகர்கள் பாடகர்கள் சொல்வது உண்மையாகத்தான் இருக்கும்.

    நம்ம ஊர் நீதிமன்றம் என்றால்....ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையுமா என்ற அற்புதமான தத்துவத்தையும் அளித்திருப்பர்கள்.

    நான் அமெரிக்காவை நம்பவில்லை; ஒரு அநீதி தெரிந்தே...இந்தியருக்கு அளிக்கப்பட்டதாகேவே நம்ம ஊர் நடிகை நடிகர்கள் பாடகர்கள் சொல்வது உண்மையே...!

    பின்குறிப்பு:
    இவரே ஒரு மலையாளியாக இல்லாமல் ஒரு தமிழனாக இருந்தால்...இந்த செய்தியே ஊடங்கங்களில் வந்திருக்காது. எனக்கும் பின்னூட்டம் போடும் பாக்கியம் கிடைத்து இருக்காது..!

    ReplyDelete
  2. அருமையான ஒப்பீடு
    இரு நாடுகளின் சட்டத்தின் சக்தியை
    மிகச் சரியாகப் புரிந்து கொள்ள முடிந்தது
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. இந்தியாவில் கடுமையான சட்டங்களும் இருந்தாலும் எப்படியோ தப்பி விடுகிறார்கள்.அமெரிக்கவைப் போல் அல்லாமல் இந்தியாவில் பெண்களை கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொல்ல முன்வருவதில்லை.வழக்கை பதிவு செய்யும்போதே சரியான சட்டப் பிரிவுகளில் வழகு பதிவு செய்ய்ப்பாடாததும் குற்றவாளிகள் தப்பிக வழிவகை செய்துவிடுகிறதஎன்றும் சொல்கிறார்கள்

    ReplyDelete
  4. Hope and wish you write and compare Dominique Strauss-Kahn sexual assault case and how the case was handled.
    Also you write about the water boarding cruelties, and killing of kids in Afghanistan as well. And how the Afgan war is initiated.
    Please include the treachery of weapon of mass destruction lies, and how many countries and people suffered by that.
    I wish you tell something about Rodney King.
    Please include how the Julian Assange case is taking turn.
    Kindlly remember to compare the years of freedom USA and India enjoys without other countries manipulations. I believe India is still manipulated by foreign governments.

    ReplyDelete
  5. பக்கிரிசாமி நீங்கள் கேட்ட கேள்விகள் நியாமனாவை! அமெரிக்கா பெரியண்ணன் என்ற முறையில் பல போர்கள் செய்துள்ளது; அதை முக்கால்வாசி அமெரிக்கர்கள் மறுக்கவில்லை.

    ராட்னி கிங் மாதிரி நடந்தால் இங்கு செய்தி; இந்தியாவில் இப்படி நடக்கவிட்டால் தான் செய்தி...! இங்கு அது மாத்ரி ராட்னி கிங் மாதிரி நடந்தால் நடந்தால் நியாம் கிடைக்கும்...இந்தியாவில் கிடைக்குமா என்பதே கேள்வி.

    இங்கு 99 விழுக்காடு நேர்மையான போலீஸ் தான்; ஒன்றிரண்டு அப்படிதான் எங்கும் இருப்பார்கள்; இந்தியாவில் 99 விழுக்காடு போலீஸ் எப்படி என்று மக்கள் என்ன சொல்கிறீர்கள்...சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம் அவர்கள் நேர்மையானவர்கள் என்று? அப்புறம் என்ன?

    இந்தியாவை விற்பது இந்தியர்களே! இந்திய குடிமகனுக்கு கெடுதல் செய்வது இந்திய அரசியல்வாதிகளே; இவர்கள் வானத்தில் இருந்து வரப்வில்லை; அவர்கள் நம்ம பங்காளிகள் தான்.! இதில் மற்ற அரசாங்கத்தை என் குற்றம் கூருகிரீரகுள்...

    சுண்டக்காய் இலங்கை அமெரிக்காவை எதிர்க்க தைரியம் இருக்கு; They have balls; do Indians have balls?? can India even pose a simple question to America?

    அமெரிக்க அரசாங்கம் தனது குடிமகன்களுக்கு கெடுதல் செய்யது; செய்யவும் இங்கு மக்கள் அரசியல்வாதிகளை விடமாட்டர்கள்....இந்தியாவில் எப்படி? இது தான் வித்யாசம்...

    ReplyDelete
  6. இங்கிருந்து சம்பாதிக்க அமெரிக்கா போனால் சம்பளம் அதிகமா தராங்க இல்ல அப்படித்தான் தண்டனையும் அதிகமா தராங்க. இந்தியாவில எல்லாமே அமெரிக்காமாதிரி ஆயிட்டா அப்பரம் என்ன வித்தியாசம்.

    ReplyDelete
  7. உலகத்தில் sexபடம் அதிகம் எடுக்கும் நாடு அமெரிக்க.ஆனால் தண்டனை அதிகம் இந்தி யனுக்கு இதே அமெரிக்க. காரண இருந் தா தண்டனை குறை வுடன் இருந்திருக்கும் .

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.