Monday, July 16, 2012



Courtesy : Dinamalar

நாசப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கும் தமிழகம்.


நான் இன்று தினமலரில் இந்த  செய்தியை  படித்ததும் என் மனதில் தோன்றியது நாசப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கும் தமிழகம் என்றுதான் .

அந்த செய்தியின் சுருக்கம் இதுதான் : கோவை:எதற்குத் தான் ஆடித் தள்ளுபடி என்றில்லை... "மூணு பீர் வாங்கினா, ஒரு பீர்; ஒரு பிளேட் பிரியாணி இலவசம்...' என, "குடிமகன்'களையும் வசீகரம் செய்து, கவர்ந்திழுக்கத் துவங்கி விட்டனர், மது பான விற்பனையாளர்.


என்னடா நடக்குது தமிழகத்தில் .....என்னடா கொடுமை இது.....இப்படி நடந்த நாடு எப்படி முன்னேறும். இதை பற்றி தமிழர்களுக்கு கவலை இல்லையா?


பக்கத்து நாட்டில் நமது சகோதர சகோதரி லட்சக் கணக்கில் மடிந்து வீழ்ந்தனர். அதை பற்றி நமக்கு கவலை இல்லை. இப்போது சொந்த தமிழகத்தில் குடியால் பலச் சாவுகள் பல குடும்பங்கள் அழிவுகள் இருந்த போதிலும் யாருக்கும் எந்த கவலை இல்லை.அவர்களுக்கு உள்ள கவலை எல்லாம் பில்லாசக்ஸ்சஸா இல்லையா? ரஜினி பெண்களின் வாழ்க்கையில் குழப்பமா இல்லையா?சூப்பர் சிங்கரில் ஜெயிக்க போவது யாரு? நீயா நானாவில் கோபிநாத் மன உணர்ச்சியை கிளறி யாரை இந்த வாரம் அழுக வைக்கப் போகிறார் என்பதுதான்.

ஏன் இன்றைய தமிழர்களிடம் ஒரு உணர்ச்சி இல்லை போராடும் குணம் இல்லை. இலவசங்களை வாங்கி பழகி அடிமை உணர்வில் மயங்கிகிடக்கிறார்கள்.. நல்ல தலைவர்களும் மக்களும் இல்லாமல் போய்விட்டார்களா? இவர்களின் போராட்டங்கள் கேலிகுரியவைகளாகவே ஆகிவிட்டன. மக்களுக்காக போராடும் தலைவன் காலையில் உணவை உண்டு விட்டு உண்ணாவிரதம் என்று ஆரம்பித்து மாலை ஆரம்பிப்பதற்கு முன்பே அதை முடித்து கொண்டு செல்கிறான். தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடிபாயும் என்று சொல்வதற்கிணங்க அந்த தலைவனை விட தொண்டர்கள் 2 மணிநேரத்திற்குள் அருகில் உள்ள கடையில் சரக்கும் பிரியாணியும் ரகசியாமாய் வாங்கி சாப்பிட்டு உண்ணாவிரதம் தொடர்கிறான்.


அவங்க அரசியல் காரங்க அப்படிதான் இருப்பாங்க என்று பார்த்தால் தமிழக மக்கள் அதற்கு ஒரு படி மேலாக இருக்கிறார்கள்.அவர்கள் போராட்டம் விளக்கு பிடிப்பது போலத்தான் இருக்கிறது, அதுதாங்க பக்கத்து நாட்டில் நமது சகோதர இனம் லட்சக்கணக்கில் இறந்த போது இவர்கள் நடத்திய போராட்டம் விளக்கு பிடிப்பதுதாங்க. என்ன புரியலையா அதுதாங்க இந்த தமிழக காந்திகள் மெரினாவில் மெழுகுவத்தி ஏற்றி எதிர்ப்பை தெரிவிப்பார்கள் ஊழலுக்கு எதிராக போராட்டாமா புரட்சிகரமாக மெரினாவில் மீண்டும் கூடி மெழுகுவத்தி ஏற்றி எதிர்ப்பை தெரிவிப்பார்கள்.

//குடி மைய உரிமையாளர் சிவகுமார் கூறியதாவது:ஒரு மாதமாக, மது விற்பனை, மந்தமாக இருந்தது. அதனால், இந்த தள்ளுபடியை அறிவித்துள்ளோம். பீர் உள்ளிட்ட அனைத்து, "சரக்கு' வகைகளுக்கும், வெளிநாட்டு, "சரக்கு'களுக்கும், மூன்றுக்கு ஒன்று சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்க, இந்தத் தள்ளுபடி விற்பனையை துவக்கியுள்ளோம். இங்கு வருவோருக்கு, வழக்கமாக, எட்டு வகையான நொறுக்குத் தீனிகள் வழங்கப்படுகின்றன. தள்ளுபடி திட்டத்தில், சரக்கு வாங்குவோருக்கு, கூடுதலாக சிக்கன் பிரியாணியும் இலவசமாக வழங்கப்படுகிறது.கிடைக்கும் லாபத்தில், ஒரு பகுதியை, இந்த தள்ளுபடி திட்டத்திற்கு செலவிடுகிறோம். திட்டத்தால், வருவாய் இழப்பு இல்லை. ஆனால், வாடிக்கையாளர்கள், 20 சதவீதம் அதிகரித்துள்ளனர்.இவ்வாறு சிவகுமார் கூறினார்.//


நல்ல திட்டம்டா இப்படி பட்ட திட்டங்களை அமுல்படுத்தி  கடைகளை நடத்தி வருபவர்களை   கண்டிக்க தமிழக தலைவர்களுக்கு சூடும் இல்லை சுரனையும் இல்லையா அல்லது அப்படி பட்ட கடைகளை அடித்து நொருக்க பொதுமக்களுக்கு முதுகெலும்பு இல்லையா? அல்லது இப்படிபட்ட விளம்பரங்களை தடுக்க நீதி துறைக்கு கூட இயலாமல் போகிவிட்டதா என்ன?


குடி மைய உரிமையாளர் லாபத்தில் ஒரு பகுதியை இப்படி தாரளமாக செலவிடுகிறார். ஆனால் கல்வி சாலைகள் வைத்து நடத்துபவர்கள் கொள்ளை கொள்ளையாக சம்பாதித்தாலும் அதில் வரும் லாபத்தில் ஒரு பகுதியை செலவழித்து சேரியில் வசிக்கும் குழந்தைகளுக்கு கல்வியறிவு ஊட்ட முன்வருவதில்லை.அப்படி செய்தா தமிழகம் உருப்பட்டுருமில்லையா? இந்த கல்வி தந்தைகள் அதை எல்லாம் செய்யமாட்டார்கள்.

இப்படி எல்லாம் நடக்கும் தமிழ்நாடு முன்னேற்ற பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறது என்று நீங்கள் கருதினால் நீங்கள் ஒரு முட்டாள்கள் என்பதில் மாற்றம் எதுவுமில்லை.

தமிழக மக்களே சிந்தியுங்கள்...தமிழ்நாடு என்பது உங்கள் வீட்டைப்போல அதை எப்படி வைத்துகொள்வது என்பது உங்கள் கையில்தான்.காரணம் அங்கு வசிப்பவர்கள் நீங்கள்தான் எங்களை போல உள்ளவர்கள் அல்ல. மாற்றத்தை உங்களால் ஏற்படுத்த முடியும் அப்படி மாற்றி தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று சொல்லவையுங்கள்.


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைதமிழனின் கோபங்களும் வருத்தங்களும் இங்கு உங்கள் பார்வைக்காக வைக்கப்படுகின்றன.

30 comments:

  1. சராசரி இந்தியனின் குடிபோதைக்கு அறிமுகமாகும் வயது 13....இதுபற்றி நான் ஒரு பதிவு எழுதலாம் என்றிருந்தேன்....நல்ல கட்டுரை....ஆனால் யாரும் சிந்திக்க மாட்டார்கள்.....என்ன செய்ய.....

    ReplyDelete
    Replies
    1. நல்லதை யாரு வேண்டுமானாலும் சொல்லலாம் அதனால் நீங்களும் அதைப் பற்றி பதிவு எழுதுங்கள்..அது போல மற்றவர்கள் சிந்திக்க மாட்டார்கள் என்றால் அவர்களை சிந்திக்க தூண்டுங்கள்

      Delete
  2. திருமணம் ,சாவு வீடு
    சந்தோஷமான தருணஙக்கள்
    உற்சாகமான ஓய்வு,கிளப்புகள்
    இப்படி அனைத்திலும் குடி இருந்தால்தா சரி
    என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டது
    திருந்துவது என்பது கஷ்டமே
    மனம் கவர்ந்த எச்சரிக்கைப்பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. திருந்த வேண்டாம் ஆனால் புரிந்து கொண்டு எதுவும் அளவோடு என்று வாழ்ந்தால் போதும்.

      Delete
  3. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது !!!

    குடிகாரனாய் பார்த்து திருந்தாவிட்டால்
    குடியை ஒழிக்க முடியாது !!!

    டாஸ்மாக்கை தடை செய்து விட்டாலும் கூட குடியை ஒழிக்க முடியாது !!!

    தமிழகத்தில் மக்கள் ஏன் குடியின் பால் திரும்புகின்றனர் .. என்ற ஆய்வினை செய்தால் உண்மை வெளிவரலாம் !!!

    மன அழுத்தம், போதிய மாற்று பொழுதுப் போக்குக்கள் இல்லாமை, குடிக்க வேண்டும் என்ற PEER PRESSURE போன்றவைக் காரணமாக இருக்கலாம் ! என நான் நினைக்கின்றேன் !!!

    // திருந்த வேண்டாம் ஆனால் புரிந்து கொண்டு எதுவும் அளவோடு என்று வாழ்ந்தால் போதும்.//

    இது தான் சரியான பதில் என நானும் நினைக்கின்றேன் !!! அளவுக்கு மீறிய குடி உடலைக் கெடுக்கும் என்ற அறிவாவது வந்தால் போதும் !!!

    ReplyDelete
    Replies
    1. இக்பால் உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      //அளவுக்கு மீறிய குடி உடலைக் கெடுக்கும் என்ற அறிவாவது வந்தால் போதும் !!//

      மிகச் சரியாக சொன்னிர்கள்

      Delete
  4. You are too late. என்றைக்கு குடி குடியைக் கெடுக்கும்னு தெரிந்தும், மக்களைக் காக்க வேண்டிய அரசே சாராயக் கடைகளை திறந்ததோ அன்றைக்கே முடிந்தது நம் கதை. பீர் மற்றும் வெளிநாட்டு சரக்குகள் உடல் நலனுக்கு அவ்வளவு கேடு விளைவிக்காது. சர்க்கரை மொலாசஸ்-இல் இருந்து தயாரிக்கப் படும் டாஸ்மாக் சாராயம் தான் உலகிலேயே கேவலமான முறையில் தயாராவது. காரணம் உற்பத்தி செலவு குறைவு, லாபம் அதிகம், But குடிப்பவன் சீக்கிரம் போய்ச் சேருவான். [அதைப் பத்தி தான் அரசாங்கத்துக் கவலையே இல்லையே :( ]நீங்கள் பார்த்த விளம்பரத்தின் சொந்தக் காரன் பலரது உயிர்க் காக்கிறான் என்று சந்தோஷப் படுங்கள். மக்கள் நலனைப் பேண வேண்டிய அரசு ஊதாரித் தனமாக இருக்கும் போது ஏதோ சாதாரன சரக்குக் கடைக் காரன் செய்ததை ஊதிப் பெரிதாக்குவது நியாயமில்லை.

    ReplyDelete
    Replies
    1. //சர்க்கரை மொலாசஸ்-இல் இருந்து தயாரிக்கப் படும் டாஸ்மாக் சாராயம் தான் உலகிலேயே கேவலமான முறையில் தயாராவது. காரணம் உற்பத்தி செலவு குறைவு, லாபம் அதிகம், But குடிப்பவன் சீக்கிரம் போய்ச் சேருவான்///

      நீங்கள் சொன்ன இந்த தகவலை படித்து சில மக்களாவது மாறினால் நன்றாக இருக்கும்

      Delete
  5. \\திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது !!!

    குடிகாரனாய் பார்த்து திருந்தாவிட்டால்
    குடியை ஒழிக்க முடியாது !!!

    டாஸ்மாக்கை தடை செய்து விட்டாலும் கூட குடியை ஒழிக்க முடியாது !!!\\

    ஆம், நிச்சயம் குடிகாரர்கள் இருந்து கொண்டு தான் இருப்பார்கள், அதற்காக சாராயக் கடைகளை வீதி வீதிக்கு, பள்ளிகள், குடியிருப்புகள் இருக்கும் இடத்தில் திறந்து விடுவதா? ஒழுக்கமாய் நல்ல வழியில் நடப்பது கடினம், கெட்டுப் போவது மிகவும் எளிது. மக்கள் நலன் தான் முக்கியம் என்று கருதும் அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்? மக்கள் கெட்டுப் போகும் வழிகளைக் கண்டு பிடித்து தடுக்க முயல வேண்டும், குறைந்த பட்சம் குறைக்கவாவது வழி வகை செய்ய வேண்டும். ஏன் குஜராத் மாதிரி கட்டாய மதுவிலக்கை அமுல் படுத்த முடியாது? அங்கும் நீங்கள் சொல்லும் திருந்தாத குடிமகன்கள் இருக்கத் தானே செய்கிறார்கள்? திருட்டு, கொலை, கொள்ளை, கற்ப்பழிப்பு இவற்றை கூடத்தான் ஒழிக்க முடியாது, அதற்காக இவற்றை குற்றம் இல்லை என்று சட்டம் போட்டு விடலாமா? தமிழகத்தை ஆட்சி செய்பவர்களுக்கு [அது எந்த கட்சியாக இருந்தாலும்] பொருளாதாரத்தை மேம்படுத்த முடியவில்லை, இலவசம் கொடுக்காமல் ஓட்டு வாங்கும் அளவுக்கு இவர்களுக்கு நேர்மையும் இல்லை, மக்களுக்கு தலையில் மசாலாவும் இல்லை, சாராயம் என்னும் குறுக்கு வழியில் செல்கிறார்கள், இதனால் பாதிக்கப் படப் போவது ஆட்சியாளர்களோ, வட்டம், மாவட்டம் என்று பங்கு பிரித்து போட்டுத் தின்னும் கரைவேட்டிகளோ இல்லை, மக்கள் தான். ஒரு சுயநலமற்ற ஆட்சியாளர் வரும் வரை இந்த நிலை மாறப் போவதும் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. இந்த பதிவு நான் போட்டது கடைக்காரனக்கோ அல்லது அரசாங்கத்திற்ககோ அல்ல அடிமையாக இருக்கும் குடிமக்கள் சிறிதளாவது சிந்த்தித்து குடிப்பதை கூட நிறுத்த வேண்டாம் அதை குறைத்தாலே போதும் என்று கருதிதான்

      Delete
    2. நீங்கள் இந்த மாதிரி பதிவு போட்டிருக்கக் கூடாது என்று நான் ஒருபோதும் சொல்ல வில்லை, அரசாங்கத்தை விமர்சிப்பது தவறு என்றும் நீங்கள் நினைக்கத் தேவையில்லை. பொதுவாக மனித மனம் நெறி தவறிய வழிகளில் தான் எளிதாக செல்லும், அதை அரசு ஊக்குவிக்கக் கூடாது, தடுக்க முயல வேண்டும். அதை செய்யத் தவறிவிட்டார்கள். மாறாக தங்களின் சுய நலத்துக்காக அதை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இந்த நிலை மாற நல்ல மாற்றம் வர வேண்டும். அது இரண்டு வகையில் வரலாம். ஒன்று மக்கள் தாங்களாகவே ஒழுக்கமாக இருப்பது, அல்லது நல்ல தன்னலமற்ற திறமையான ஒரு தலைவர் ஆட்சி பொறுப்பு ஏற்ப்பது. தற்போதைய நிலைமையில் இவை இரண்டுமே சாத்தியமாகத் தெரியவில்லை.

      Delete
  6. குடிப்பது ஒரு குற்றம், பாவம் என்றிருந்த காலம் போய் அது சராசரியான ஒரு செயல் என்றாகி விட்டது இன்று. அளவுக்கு மீறினால் எதுவும் நஞ்சு என்பதை அறிந்தால் போதும். அவை தவிர. ஒரு ஏரியாவுக்கு ஒன்று அல்லது இரண்டு மதுக்கடைகள் இருக்குமபடி செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ளது போல் தெருவுக்குத தெரு ஒன்று இருந்தால் எவன் திருந்துவான்? அரசும் மாற வேண்டும், மக்களும் ஒத்துழைக்க வேண்டும். நிகழாதவரை... நாம் புலம்புவதே மிச்சம்.

    ReplyDelete
    Replies
    1. //அரசும் மாற வேண்டும், மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.///

      நீங்கள் சொன்னதில் சிறு மாற்றம் மக்கள் மாற வேண்டும் அரசு அதற்காக ஒத்துழைக்க வேண்டும்

      Delete
  7. இன்று பத்திரிக்கையில் இந்த செய்தியை பார்த்தவுடன் அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. கவலை தரும் விஷயம்.

    ReplyDelete
    Replies
    1. முதன் முதலாக என் வலைப்பக்கத்திற்கு வருகை தந்ததற்கும் கருத்திற்கும் நன்றி ஆமாம் மிகவும் கவலை தரும் விஷயம்தான்

      Delete
  8. தமிழக மக்களே சிந்தியுங்கள்...தமிழ்நாடு என்பது namathu வீட்டைப்போல அதை எப்படி வைத்துகொள்வது என்பது namathu கையில்தான்.காரணம் அங்கு வசிப்பவர்கள் naam தான்.மாற்றத்தை nammaal ஏற்படுத்த முடியும் அப்படி மாற்றி kaata sapatham yettru seyalpaduvom.

    ReplyDelete
    Replies
    1. முதன் முதலாக என் வலைப்பக்கத்திற்கு வருகை தந்ததற்கும் கருத்திற்கும் நன்றி உங்களைப் போல உள்ளவர்கள் சபதம் ஏற்று செயல்பட ஆரம்பித்தால் என்றாவது ஒரு நாள் முன்னேற்ற பாதையில் செல்ல ஆரம்பிக்கும்

      Delete
  9. அளவோடு என்று கூறினால் தான் ஆட்டம் அதிகமாக போடுகிறார்கள்.
    திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

    ReplyDelete
    Replies
    1. எதிலும் அளவுக்கு மீறினால்தான் ஆட்டம் அதிகமாகிறது என்பதுதான் உண்மை

      Delete
  10. This is a important topic. But in this matter how much people drink liquor. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது //அரசும் மாற வேண்டும், மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.All matter are the government and people are equal work.

    ReplyDelete
    Replies
    1. என் வலைப்பக்கத்திற்கு வருகை தந்ததற்கும் கருத்திற்கும் நன்றி எல்லோரும் நல்லது எது என்பதை புரிந்து கொள்ளுதல் மிக அவசியம்

      Delete
  11. குடிமகன்களால் நிர்வாகம் நடத்தும் அரசு இதை கண்டுகொள்ளாது! வாழ்க குடிமக்கள்!

    ReplyDelete
    Replies
    1. என் வலைப்பக்கத்திற்கு வருகை தந்ததற்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  12. ஹா ஹா குடிப்பதும் தமிழனுக்கு ஒரு எக்ஸ்ட்ரா தகுதியாகிவிட்டது சகோ. என் கணவர் குடிப்பதில்லை, ஆனால், அவர் நண்பர்கள் பார்ட்டி குடுக்கும்போது ஏதோ தீண்டதகாதவனை பார்ப்பது போல் பார்ப்பாங்களாம். இப்படியே போனால், நாடு வெளங்கிடும். நல்லதொரு பத்விஉ. ஆனா, சம்பந்தபட்டவர்களுக்கு உரைக்குமா?

    ReplyDelete
    Replies
    1. என் வலைப்பக்கத்திற்கு வருகை தந்ததற்கும் கருத்திற்கும் நன்றி யார் எப்படி பார்த்தால் என்ன நமக்கு எது நல்லது என்று மனதில் படுகிறதோ அதை செய்து கொண்டு போகவேண்டும்

      Delete
  13. பாளாய்ப் போன குடிப்பழக்கம் ஒழியாதவரை எந்த நாடோ
    மக்களோ உருப்பட வழி கிடையாது.மனத்தைக் கனக்க வைத்த
    பகிர்வு தொடர வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. என் வலைப்பக்கத்திற்கு வருகை தந்ததற்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  14. nanpaa !
    athu enna alavoda kudi!

    alavukku meerina kudi!

    malathai thinpathi konja thinnaal enna!?
    athikam thinnaal enna!?

    thirunthumaa tamil naadu!?
    theriyala naan kurikaara kuppai illai!

    ReplyDelete
    Replies
    1. என் வலைப்பக்கத்திற்கு வருகை தந்ததற்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  15. சரியாய் சொன்னிங்க ஆனா யாருமே கேக்க மாடங்களே

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.