Friday, June 22, 2018

சிறுகுறு நடுத்தரத் தொழில்கள்  அழிவதால்  பிரச்சனை இல்லை. ஏன் தெரியுமா?

தமிழக மக்கள்  போராடியதால் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டதாக அவதூறு கிளப்பிய பக்தாள்ஸ் சட்டசபையில் அமைச்சர்  செல்லா நோட்டுப் பிரச்சனையாலும் ஜி.எஸ்டியாலும் 50,000 சிறுகுறு நடுத்தரத் தொழில்கள் மூடப்பட்டதால் தமிழகத்தில் 5,00,000 பேர் வேலை பறிபோயிருக்கிறது" என்ற சட்டமன்ற பேச்சுக்கு பதில் பேசாமல் பொத்திட்டு பஜனை பாடிக் கொண்டிருக்கிறார்கள்.காரணம் அவர்களின் தேசபக்தி...தமிழகம் அவர்களை பொருத்தவரையில் இந்தியாவில் இல்லை



அதுமட்டுமல்ல இதுதான் அவர்களின் முக்கிய காரணம் இந்த சிறு தொழிற்சாலைகளை வைத்து நடத்துவது அவர்கள் கிடையாது அதில் வேலை செய்வதும் அவர்கள் கிடையாது.... அவர்கள் வேலை செய்வதும் உயர் அதிகாரிகளாக இருப்பதும் கார்பொரேட் கம்பெனிகளில்தானே. அதனால் அவர்களுக்கு இந்த சிறு தொழிற் சாலைகள் நடந்தால் என்ன மூடினால் என்ன


கார்பொரேட் கம்பெனியால் பாஜகவிற்கு பணம்  கணக்கில்லாமல் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது அந்த கார்பொரேட் கம்பெணியில் வேலை செய்வதால் அங்கு வேலை பார்க்கும் பக்தாள்ஸுக்கும் பணம் கொட்டுகிறது அது போதும்தானே.. இதுதான் அவர்கள் தேசபக்ததி

இந்த பக்தாள்ஸ்தான்  பாஜகவின்  தோல்வி அடைந்த  பணமதிப்பிழப்பு நடவடிக்கையை  புரட்சி/வெற்றி எனச் சொல்லி கொண்டிருந்தனர். மக்கள் போராட்டங்கள் தோல்வி அடையும் என்று சொல்லி கொண்டிருக்கிறார்கள்


டிஸ்கி : செல்லா நோட்டு அறிவிப்புக் காலத்தில் எல்லா தொழில்களும் நொடிந்தன. அமித்ஷா & சன்ஸ் சொத்துக்களோ 16000% அதிகரித்தன. இப்போது, அமித்ஷா தலைவராக உள்ள கூட்டுறவு வங்கிதான் நாட்டிலேயே அதிக செல்லா நோட்டு மாற்றிய மாவட்ட கூட்டுறவு வங்கி என்பது வெளிவந்துள்ளது.



கொசுறு :

வெளிநாடுகளில் நாம் வசித்து கொண்டிருந்தாலும் நம் மனது என்னவோ சொந்த நாட்டில் பிறந்த ஊரில் வசித்த தெருக்களில்தான் சுற்றிக்  கொண்டிருக்கிறது ஆனால் அங்கு வசித்து கொண்டிருப்பவர்களின் மனமோ வெளி நாட்டை பற்றி எண்ணிக் கொண்டுதான் இருக்கிறது

அன்புடன்
மதுரைத்தமிழன்


டி.வி.எஸ். சோமு  எழுதி பதிந்தது


நல்ல பாம்பு என்றால் நேர்மறை எண்ணம் வராது. அச்சம் தான் வரும்.

அதுபோன்ற ஒரு உணர்வைத்தான் தற்போது 'தேசபக்தன்" என்கிற வார்த்தை ஏற்படுத்தத் துவங்கியிருக்கிறது.

இது நல்லதல்ல.

6 comments:

  1. அருமையான சிந்தனை
    நம்மவர் சிந்திக்க வேணும்
    தொடருவோம்

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றி

      Delete
  2. மிகச்சரியான பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  3. உங்களால் அரசியல் நையாண்டிப் பதிவு எழுதாமல் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன்

    ReplyDelete
    Replies

    1. படிப்பது பார்ப்பது அதுபோன்ற செய்திகளாகவே இருப்பதால் அப்படி நிகழ்கிறது

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.