Wednesday, June 20, 2018

கண்ணுல தண்ணி கொட்டுதய்யா இதை பார்க்கும் போது

ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே உன்னை அற்பணி  செய் என்பதற்க்கு சான்றாக திகழ்கிறா  இந்த ஆசிரியர் பகவான்.  சினிமா படங்களில்  மட்டும் தான் இது சாத்தியம் என்று நாம் நினைத்திருப்போம் ஆனால்  நிஜத்துலயும் சாத்தியம்னு காட்டி இருக்கிறார் இந்த ஆசிரியர்..

பல பள்ளிகளில் இந்த ஆசிரியர் பள்ளிக்கு வேண்டாம் இவர் சுத்த மோசம் என்றுதான் பெற்றோர்களும் மாணவிகளும கூறி பார்த்திருக்கிறோம் போராடிப் பார்த்து இருக்கிறோம் ஆனால் இவர்தான் எங்கள் பள்ளிக்கு வேண்டும் என்று கூறுவதை இன்றுதான் தமிழகத்தில் பார்க்கிறேன். இதே போன்று ஒரு நிகழ்வு முன்பு வேறு மாநிலத்தில் நடந்து இருக்கிறது...



இந்த ஆசிரியர் பணி இடம் மாற்றி செல்வதால் இந்த் பள்ளி மாணவர்களுக்கு இழப்பாகத்தான் இருக்கும் ஆனால் அதே நேரத்தில் இவர் செல்லு பள்ளி மாணவர்களோ மிகவும் அதிர்ஷடகாரர்களாக இருப்பார்கள்..


இந்த பள்ளி மாணவர்கள் இழப்பு ஏற்படக் கூஆது என்றால் இதே பள்லியில் படிக்கும் மற்ற ஆசிரியர்கள் இந்த ஆசிரியர் நடத்துவதை போல ஏன் அவர்களின் மாணவர்களுக்கு நடத்த கூடாது அவர்களும் இந்த ஆசிரியர் போன்றுதானே சம்பளம் வாங்குகிறார்கள்..



நம் வலைத்தள பதிவர்களில் பலர் ஆசிரியர்களாக இருக்கிறார்கள் அவர்கள் எப்போது இது போல பெயரும் புகழும் பெறப் போகிறார்கள்... அவர்கள் புகழ் பெருவதை பார்க்க மிகவும் ஆர்வத்தோடு காத்து இருக்கிறேன்


இது போல பெயர் எடுப்பீர்களா பதிவுலக ஆசிரியர்களே?


அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments:

  1. நான் இடமாற்றம் பெறப்போகிறேன்ன்:) எனக்காக ஆரார் எல்லாம் அழப்போறீங்க? இப்பவே ஜொள்ளுங்கோ:))

    ReplyDelete
    Replies

    1. நீங்கள் இடம் மாறினால் நாங்கள் சந்தோஷத்தில் அழுவோம்

      Delete
  2. உண்மையில் இவ்வாறான சில ஆசிரியர்களே ஆங்காங்கு இருந்து ஆசிரியர் என்பதற்கான இலக்கணமாக வாழ்ந்து மனதில் நிற்கிறார்கள். கொடுத்து வைத்த ஆசிரியர். கொடுத்து வைத்த மாணவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. தன் வேலை என்ன என்பதை உணர்ந்து அதை செயல்படுத்துகிறார்.....
      மற்ற ஆசிரியர்கள் அப்படி செய்யாமல் ஊதிய உயர்வுக்காக மட்டுமே போராடுகிறார்கள்

      Delete
  3. சின்ன வகுப்புகளில் மாணவ மாணவியருக்கு ஆசிரிய ஆசிரியைகள் மேல் ஒரு ஈர்ப்பு வருவதைப் பார்த்திருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. நல் ஆசிரியர்களின் மீது ஈர்ப்பு வருவது இயல்பே

      Delete
  4. அருமையான ஆசிரியர். அந்த ஆசிரியருக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள். நல்லாசிரியர் பட்டம் கிடைப்பதைவிட இப்படி மாணவர்கள் நம்மிடம் அன்புடன் இருப்பதே மிக மிகப் பெரிய விருது.

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.