உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, June 20, 2018

சமையல்ல ஏன் கடுகு போடுறாங்கன்னு தெரியும்மா?

avargal unmaigal
சமையல்ல ஏன் கடுகு போடுறாங்கன்னு தெரியும்மா?

தென்னிந்தியாவை பொருத்தவரை கடுகை தாளிப்பதற்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள் ஆனால் கிழக்கு மற்றும் வடக்கு மாநிலங்களில் கடுகு ஆயிலைத்தான் அதிகம் உபயோகிக்கிறார்கள் அவர்களின் வீடுகளில் என்ன இருக்கிறதோ இல்லையோ நிச்சயம் கடுகு எண்ணெய் இருக்கும்


“கடுகுல வெண்கடுகு-கருங்கடுகு’னு ரெண்டு வகை இருக்கு. நம்ம சமையல்ல பயன்படுத்துற கடுகு கருங்கடுகு. அதுல வெண்கடுக விட காரம் அதிகமா இருக்கும். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதுனு சொல்வாங்க

“கடுகு நாம சாப்பிடும் உணவு செரிமானம் ஆகுறதுக்கு உதவுது. சிறுநீரின் அளவை பெருக்கும் தன்மை இதுக்கு இருக்குது. ஆனா... அதிகம் சாப்பிட்டா வாந்திய உண்டுபண்ணும்!”

“வெண்கடுகை 2 கிராம் அளவு அரைச்சு தண்ணியில கலந்து விஷப்பொருள் சாப்பிட்டவங்களுக்கு கொடுத்தா, வாந்தி ஏற்பட்டு, அது மூலமா விஷம் வெளியேறும். வெண்கடுகுத் தூளோட அரிசி மாவு கொஞ்சம் சேத்து தேவையான தண்ணி கலந்து கிளறி, அத ஒரு துணியில தடவி எடுத்துக்கணும். வயிற்று வலி, குடைச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு அந்தந்த பகுதிகள்ல இந்த துணிய வச்சு பற்று போட்டா குணம் உண்டாகும். இருமல், இரைப்பு நோய் போன்ற பிரச்சனைகளுக்கு மார்பு மேல பற்று போடணும். தலைவலிக்கு பிடரி மேல போடணும். வாந்தி-பேதியில் வர்ற கால் கெண்டைச் சதை பிறழ்ச்சிக்கு கால் மேல பற்று போடணும்.

கை-கால்ல ஈரப்பதம் காரணமா சில்லிடல் (Chillness of hands & legs) உண்டாகும்போது, வெண்கடுக அரைச்சு கை-கால்கள்ல தடவி துணியை சுற்றி வச்சா, ஈரப்பதம் நீங்கி வெப்பம் உண்டாகும்.

அப்புறம்... வெண்கடுகுல இருந்து தயாரிக்குற எண்ணெய்தான் கடுகு எண்ணெய்!”

இது எதுக்கு பயன்படுதுகிறது என்றால்?

“கட்டி-கழலை (Tumors & abcess) வந்த இடத்துல கடுகு எண்ணெய தடவி வந்தா நல்ல குணம் கிடைக்கும்!”

கடுகை பயன்படுத்தி இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம்.

ஒரு பாத்திரத்தில் சிறிது தேன் விடவும். இதனுடன் லேசாக வறுத்து பொடி செய்த கடுகை சேர்த்து சூடுபடுத்தினால் இளகிய பதத்தில் வரும். இது ஆறியவுடன் சுண்டைக்காய் அளவுக்கு எடுத்து சாப்பிட்டால் இருமல் கட்டுக்குள் வரும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

ஜீரண கோளாறுகளை சரிசெய்யும் தன்மை உடையது. கடுகை குறைந்த அளவுக்கே உபயோகப்படுத்த வேண்டும்.


புளி ஏப்பம், வயிறு உப்புசத்துக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கடுகு பொடி, சீரகப் பொடி, பூண்டு, இஞ்சி, பெருங்காயப் பொடி, உப்பு. பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர் விடவும். இதில் 2 பல் பூண்டு தட்டி போடவும்.

சிறிதளவு இஞ்சி, கால் ஸ்பூன் சீரகப் பொடி, சிறிது பெருங்காயம். சிறிதளவு கடுகுப் பொடி, 2 சிட்டிகை உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர புளி ஏப்பம் சரியாகும். அஜீரணம் கோளாறு, வயிறு உப்புசம் குணமாகும்.

கடுகு செடியை பயன்படுத்தி ஒற்றை தலைவலிக்கான மருந்து தயாரிக்கலாம். கடுகு செடியை சிறுதுண்டுகளாக வெட்டவும். இதில் போதுமான அளவு நீர்விட்டு கொதிக்க வைத்து நீராவி பிடித்தால் ஒற்றை தலைவலி,  தலைபாரம், இருமல், நெஞ்சக சளி, மூக்கடைப்பு சரியாகும். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கடுகு ரத்தத்தை சுத்தப்படுத்தும். வலி நிவாரணியாக பயன்படுகிறது. வலியை குறைக்கும். மாதவிலக்கு பிரச்னையை தீர்க்கிறது.

கடுகை பயன்படுத்தி வறட்டு இருமலுக்கான தேனீர் தயாரிக்கலாம். கால் ஸ்பூன் கடுகு எடுத்து லேசாக வறுக்கவும். இதை இடித்து எடுக்கவும். இந்த பொடியில் ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வடிகட்டி தேன் சேர்த்து குடிப்பதால் சளி, காய்ச்சல், இருமல், உடல் வலி, கண்களில் நீர் வழிதல் போன்ற பிரச்னைகள் இல்லாமல் போகும். இந்த தேனீரை 50 முதல் 100 மில்லி வரை குடிக்கலாம்.

இருமலுக்கு கடுகு உன்னதமான மருந்தாகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட கடுகு காரம் மிக்கது, உடலுக்கு உஷ்ணத்தை தரக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. காய்ச்சலை தணிப்பதுடன் வலியை குறைக்கும். வீக்கத்தை கரைக்கிறது.


அன்புடன்
மதுரைத்தமிழன்
நெட்டில் இருந்து திரட்டியது

15 comments :

 1. தமிழா என்ன திடீர்ன்னு கடுகுக்கு போயாச்சு...ஆனாலும் கடுகு குறித்த விரிவான பதிவு..வெண் கடுகை நான் பார்த்ததில்லை இன்னும்..

  ReplyDelete
  Replies
  1. தமிழக அரசியல் மற்றும் அனைத்து அரசியல் தலைவர்கள் மீதும் மக்கள் மீதும் ஒரு இனம் புரியாத வெறுப்பு ஏற்பட்டு இருக்கிறது. தன் சமுகம் அழிவதை பார்த்துக் கொண்டு தனக்கு பிடித்த தலைவர்களை போற்றுவது பிடிக்காத தலைவர்களை தூற்றுவதுமாக இருக்கிறார்கள் தன் சமுகம் நாசமாக போனாலும் பராவாயில்லை தன் விரும்பும் தலைவரின் புழக் சரியக்கூடாது என்று முட்டுக் கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.

   அதனால் நையாண்டியாக பல சமுக பிரச்சனைகளை சுட்டிக் காட்டிக் கொண்டிருந்த எனக்கு ஒரு வித வெறுப்பு ஏற்பட்டு இருக்கிறது அதனால் சற்று மாறுதலாக உலகில் மற்ற பகுதியில் வசிக்கும் தமிழர்களுக்காக இந்த மாதிரி பதிவுகள் இடலாம் என்று தோன்றியதன் விளைவே இந்த பதிவு

   Delete
 2. ஆஆவ் !! ரூட் மாறி வந்திட்டேனா :)

  சரி சரி நல்ல பயனுள்ள தகவல் பகிர்வு .

  ReplyDelete
  Replies
  1. 82 வயதுகாரரை தேடிய நீங்கள் 16 வயது இளைஞனின் வலைப்பக்கம் வந்துட்டீங்க...

   Delete
  2. கர்ர்ர்ர்ர்ர் :)


   சீக்கிரம் அந்த ஸ்வீட் ரெசிப்பி போடுங்க :) எங்காத்துக்காரருக்கு உங்க ரிப்லை பார்த்து உடனே மெசேஜ் போட்டுட்டேன் விரைவில் ஒரு புது ஸ்வீட் தரேன்னு

   Delete
  3. ஏஞ்சல் இத்தனை எழுதியவருக்கு நீங்களாவது நம்ம கடுகுப்பச்சடி/கடுகோரை ரெசிப்பி பத்தி அளந்து விட்டுருக்கலாம்...எபில போட்டதுதான்...

   சகோ எங்க வீட்டுல கடுகுப்பச்சடினு செய்வதுண்டு. செம டேஸ்டியா இருக்கும் அதை செஞ்சுவைச்சா புளிக்காய்ச்சல் செஞ்சு வைக்கறது போல செஞ்சு வைச்சா கடுகோரை செய்யலாம் சாதத்துல மிஸ் செஞ்சு...தொட்டும் சாப்பிடலாம் செம டேஸ்டா இருக்கும்....

   கீதா

   Delete
  4. நல்ல பயனுள்ள தகவல்கள் மதுரை

   கீதா

   Delete
 3. பயனுள்ள அருமையான பகிர்வு
  இந்தப் பதிவை எழுதியதற்கான காரணத்தை
  விளக்கியது மிக மிக அருமை

  அரசியலும் தலைவர்களும் தரக் குறைவாய்ப்
  போகையில் அதனை ஆதரிப்போரைக் கண்டு
  நமக்குள் ஒர் அளவு கடந்த ஆத்திரம் பெருகுகையில்
  நாம் நம் தரத்தைச் சில சமயத்தில் மறந்து
  மிக மோசமாக எழுத வேண்டிய சூழல்
  நேர்ந்து விடுகிறது

  சில காலம் நாம் அது குறித்து எழுதாமல்
  இருந்தால் ஒழிய நாம் நம் நிலையைத் தக்க வைத்தல்
  மிக மிகச் சிரமமே என்பது என் கருத்து

  நான் மிகவும் மதிக்கும் நண்பர்கள் சிலர்
  அவ்வாறு எழுதப் படித்து மனம் மிக நொந்து
  அவர்களுக்கு அறிவுறுத்தும் அளவு
  நாம் பெரியவர் இல்லை என்பதால் நான்
  வேண்டா வெறுப்பாக அவர்களைத் தொடர்வதை
  சில காலம் நிறுத்தி வைத்திருக்கிறேன்

  மீண்டும் பயனுள்ள பதிவினைத் தந்தமைக்கு
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொன்ன கருத்து முற்றிலும் உண்மை,, ஆனால் பத்திரிக்கை டிவி சேனல்கள் மற்றும்சமுக ஊடக்ங்களில் நம் சமுகத்தை பற்றிய செய்திகள் வரும் போது அதை பற்றி நம்மால் கருத்து சொல்லாமல இருக்க முடிவதில்லை... அதன் விளைவே என் பதிவுகள் நான் எப்போதும் போலியான புள்ளிவிபரங்கள் சொல்லி கட்டுரைகளை எழுதுவதில்லை தலைவர்களின் செயல்களை மனநிலைகளை கொள்கைகளை நையாண்டி கிண்டல் கேலி செய்வதன் மூலம் எனது கருத்தை பதிவு செய்கிறேன்..

   நான் நெருங்கிய நண்பர்கள் உறவினர்களை இந்த பக்கங்களில் சேர்ப்பதில்லை அதுமட்டுமல்ல நான் எப்போதும் யாரிடம் பொது விஷயங்களை பற்றி விவாதிப்பதும் இல்லை அட்வைஸ் பண்ணுவதும் இல்லை... நெருங்கியவர்களிடம் மட்டும் குடும்ப விஷயங்களில் அதுவும் அவர்கள் கேட்டு கொண்டாலே ஒழிய் எந்த வித அட்வைஸும் செய்வதில்லை

   கடுகு பதிவு பயனுள்ளது என்று சொல்லி இருக்கீங்க ஆனால் தன் சமுகம் அழிவதை பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த கடுகு உண்மையிலே என்ன பயனை கொடுத்துவிடப் போகிறது அதுமட்டுமல்ல நாட்டில் டாஸ்மாக் குடிகாரர்கள் அதிகரித்துவிட்டார்கள் அவர்களுக்கு இந்த பதிவு என்ன மாதிரியான பலனை கொடுத்துவிடப் போகிறது


   நிறைய பேசிக்கொண்டே போகலாம்...

   இந்த பதிவை படித்து கருத்தை பதிந்த உங்களுக்கு மிகவும் நன்றி

   Delete
  2. அடவைஸ் என்றால் என்ன? செய்திகளின் உண்மைத்தன்மை மறைக்கப்பட்டு, போலியாக பரப்பப்படுகின்றது என்பதை நாம் அறிந்திருந்தும் அதை வெளியிடாமல் நமக்கென்ன இருப்பது தான் சரியா? உண்மையை எடுத்துரைப்பதும் அட்வைஸில் தான் வருமுங்கோ சார்.

   Delete
 4. இது எவ்வளவு நாளா? எதோ, பழனி காளிமுத்து ஆஸுபத்திரியோ அல்லது சேலம் சிவராஜ் வைத்திய சாலையோ என்று நினைக்கும் அளவு இருந்தது இந்த இடுகை!

  நம்பள்கிக்கு இந்த அளவிற்கு கடுகு பற்றி "ஞானமும் இல்லை அறிவும் இல்லை"----ஆனால், கடுகு தாளிக்கவிட்டால் அந்த பொருள் குப்பையிலே தான் என்பது அனுபவரீதியான உண்மை.

  ; உப்பில்லாப்பண்டம் குப்பையிலே---அது பழமொழி;
  இப்பபோ புது மொழி..."கடுகு தாளிக்காத" பொரியல், பொரிச்ச கூட்டு, ரசம், சாம்பார், ரைத்ததா...etc , etc --எல்லாம் குப்பையிலே!

  ReplyDelete
  Replies
  1. அப்ப நானும் பழனி காளிமுத்து சேலம் சிவராஜ் மாதிரி ஏதாவது சொல்லி பணம் சம்பாதிக்க ஆரம்பிச்சிட வேண்டியதுதான்


   கடுகின் பலன் தெரியாமல் அதன் சுவைக்காக உணவில் சேர்த்து வருகிறேன் என் குழந்தைக்கு சட்னியில் மிக அதிகமாக கடுகு போட்டு தாளித்தால்தான் அதை விரும்பி சாப்பிடுகிறாள்... சரி அதில் என்ன பயன்கள் இருக்கிறது என்று தேடிய போது கிடைத்த தகவல்தான் இந்த பதிவு

   Delete
 5. ஒரு முறை ஒரு பெங்காலி நண்பர் வீட்டில் ஸ்பெஷல் என்று சொல்லி வேகவைத்த உருளைக்கிழங்கை ஸ்மாஷ் செய்து கடுகெண்ணை மிக்ஸ் செய்து கொடுத்தார்கள் என்முகபாவத்தைமறைக்கமிகவும் சிரமப்பட்டேன்

  ReplyDelete
 6. கடுகை எண்ணெயில் வெடிக்க வைக்காமலோ முழுதாகவோ உண்டால் அவைகள் சிறு நீர்கற்களை உருவாக்கும் என படித்திருக்கின்றேன். அதனால் நானும் கடுகை எண்ணெயில் வெடிக்க வைத்தோ மிக்சியில் அரைத்ஹ்டு துளாக்கியோ தான் சமையலுக்கு பயன் படுத்துவேன். வட இந்தியர் சமையலில் கடுகுக்கு பிரதான இடம் உண்டு. கடுகுக்கும் சீரகத்துக்கும் அவர்கள் சமையலில் முக்கியத்துவம் உண்டு. பூரிக்கிழங்கு ஆலுபாஜ்ஜி என பலதுக்கு கடுகை தாளித்து மட்டும் சேர்த்து விடுவார்கள். கடுகு தாளித்து சேர்த்த ரைஸ் சீரக ரைஸென மெனுக்கள் வித்தியாசமாக இருக்கும்.

  ReplyDelete
 7. கடுகின் பயன்கள். நல்ல தகவல்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog