Wednesday, June 27, 2018

தாலிகட்டிய மனைவியே ஆனாலும்......

ஏய் சீதா இங்க வாடி....

சித்த இருங்க அடுப்பில காரியமா இருக்கேன்...

சரி சரி வரும்  போது சூடா ஒரு காபிபோட்டு எடுத்துண்டு வா....நேக்கு டயர்டா இருக்கு....

சீதா மனதிற்குள் ஆமாம் இவளாக்கு மட்டும் ஆபிஸ் போயிட்டு வந்தா டயர்டா இருக்கு ஆனால் அவா போல ஆபிஸ் போயிட்டு வந்து கிச்சனில் இருக்கும் நேக்கு டயர்டா இருக்கான்னு ஒரு வார்த்தை கேட்க தோணுதா இந்த மனுஷனுக்கு...

ராம் டிவியை ஆன் செய்து ந்யூஸ் சேனலை போட்டது, உலகிலே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளின் லிஸ்டில் இந்தியா முதலிடம் வந்து இருக்கிறது என்று செய்தியாளர் செய்தியை வாசித்து கொண்டிருந்தார்

சில நிமிடங்கள் கழித்து... இந்தாங்கண்ணா காபி......என்று ராமிடம் காபியை கொடுக்கிறாள்

ஏய் மாலதி எங்கடி நேற்றில் இருந்து அவளை பார்க்கவே முடியலை பரிட்சைக்கு ஏதாவது படிச்சுண்டு இருக்காளா என்ன?


உங்க தங்கை நேத்து ஈவினிங்க் காலேஜில்  இருந்து வந்ததிலிருந்து சாப்பிடாமல் ருமிற்குள்ளே அடைந்து கிடக்கிறாள். காலையில் நான் எடுத்து வைச்ச சாப்பாடு கூட அப்படியே இருக்கு இன்று காலேஜ்ஜுக்கு கூட போகலை மாதிரி இருக்கு.... நான் அவ ரூமுக்கு போய் என்னாச்சு என்று கேட்டதற்கு ஒன்றுமில்லலை ருமைவிட்ட சித்த வெளியே போரேளா என்று கத்துகிறாள் நானும் எனக்காச்சுன்னு வந்துட்டேன்..வேணும்னா நீங்க போய் அவளை விசாரிங்கோ...


மாலதி ஏய் மாலதி  இங்க வாடி என்று ராம் கத்தினான்

அவனின் காட்டு கத்தலுக்கும் அவள் சிறிதும் செவி கொடுக்காமல்  இருந்ததினால் ராமே அவள் ரூமை நோக்கி சென்றான்..

ரூமோ வெளிச்சமாக இல்லாமல் இருட்டி கிடந்தது. உடனே லைட்டை போட்டு பார்த்தால் மாலதி அப்படியே கட்டில் துவண்டு போய் கிடந்தாள், அவள் அருகில் சென்று பார்த்த போது குளிக்காமல், தலை கூட வாராமல், கண்கள் எல்லாம் அழுது வீங்கி இருந்தது, அதை பார்த்த ராம் ஏய் மாலதி என்னடி ஆச்சு ஏண்டி இப்படி இருக்கிற... உடம்புக்கு ஏதாவது முடியலையா என்று கேட்டு போது அவள் ஓ...வென்று அழுக துவங்கினாள்..

ராமிற்க்கோ தங்கை மாலதி மீது அளவுகடந்த பாசம்.. அவள் அழுவதை பார்த்ததும் மனது துடித்து என்னடியம்மா  ஆச்சு என்று அவள் தலையை கோதியவாறு கேட்டான்...அப்போதுதான் கவனித்தான் அவள் கைகளில் முகங்களிலும் சில கீறல்கள் இருப்பதை அதை பார்த்ததும் என்னடியம்மா கிழே ஏதாவது வுழுந்துட்டியா என்று கேட்டான்


உடனே அவள் இல்லைன்னா என்று தேம்பியவாறு  என் பிரண்ட் மகேஷ் இருக்கான்னுல்லா....

ஓ எப்ப பார்த்தாலும் உன் ஸ்கூட்டியிலே காலேஜ்ஜுக்கு வருவான்ல் ...நீ கூட சொல்லுவியே நல்லா படிப்பான் ,ரொம்ப நல்ல கடவுள் பக்தி உள்ளவன் என்று ,அவந்தானே.... அவன் கூட போய் கிழே எங்கேயாவது வுழுந்திட்டியாடி அவனுக்கு ரொம்ப அடிப்பட்டுச்சா.. என்னாச்சு அவனுக்கு..


அவனுக்கு ஒன்றும் ஆகலைன்னா எனக்குதான் பாடத்தில் டவுட்  இருக்குன்னு அவன்கிட்ட கேட்டு கத்துக்கலாம் என்று போனேன் அப்ப அவன் வீட்டில் யாரும் இல்லைன்னா அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி என்னை கெடுத்திட்டான்னா என்று பெரும் குரல் எடுத்து அழுகலானாள்

என்னது அவன் உன்னை கெடுத்துட்டானா என்னடி பாவி இப்படி என் வயத்துல நெருப்பை அள்ளிக் கொட்டுற  ...... இப்ப நான்அவனை  என்ன பண்ணுறேன் பாரு எனக்கு தெரிந்த போலீஸ் ஆபிஸ்சர் முலம் சொல்லி அவனை அரஸ்ட் செய்து ஜெயில் அடைக்க வைக்கிறேன்..


நல்லவன் போல வேஷம் போட்டு இப்படியா மோசம் பண்ணுறான் பெருமாள் அவனைசும்மாவிட்டாலும் நான் அவனைவிடமாட்டேன் என்று சொல்லியாவறு எழுந்தான்..

இதையெல்லாம் கேட்டுண்டு இருந்த சீதா ஏன்னா இப்ப எதுக்கு ஊரை கூட்டப் போறேள் சித்த பேசாமல் இருங்கோ...ஏய் மாலதி பேசாமல் எழுந்து குளிச்சிட்டு சாப்பிட வா ...சாப்பிட்ட அப்புறம் போய் ஒரரு டாக்டரை பார்த்து மருந்து மாத்திரை வாங்கி சாப்பிடு எல்லாம் சரியாப் போயிடும் என்றாள்..

அவள் அப்படி சொல்லுவதை எதிர்பார்க்காத ராம் ஏய் முண்டை என் தங்கிச்சியை ஒருத்தன் ரேப் பண்ணி இருக்கான் அதை கேட்டு சும்மா இருக்க சொல்லுறியா என்று சீதாவை நோக்கி கோபத்துடன் கையை அடிப்பதற்காக ஒங்கினான்..

அவன் அடிப்பதை தடுத்த சீதா அவனை பார்த்து கேட்டாள். எங்க  சில வருஷம் முன்னால் என் கழுத்துல தாலி கட்டின அன்று இரவு ருமிற்குள் வந்த என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்கமால் என் மீது பாய்ந்து உறவு கொண்டீங்களே அப்போது ஒரு வார்த்தையாவது ஆறுதலாக  அன்பாக பேசி என் அனுமதி வாங்கித்தான் உறவு கொண்டீங்களா.. அன்றில் இருந்து இன்று வரை என்னிடம் எனக்கு விருப்பமா இல்லையா என்று கூட ஒரு வார்த்தை கேட்காமல் தினமும் உறவு கொள்ளுறீங்களே.. அது உங்களுக்கு ரேப்பாக தோணவில்லையா என்று கேட்டாள். கட்டிய மனைவியாக இருந்தாலும் அவள் அனுமதி இல்லாமல் அவள் கூட உற்வு கொள்வது சட்டப்படி ரேப்த்தான் என்பது படித்த உங்களுக்கு தெரியாதா என்ன? அப்படி இருக்க அந்த மகேஷிடம் போய் எந்த மூஞ்சியை வைத்து கேட்கப் போகிறீங்க

அப்படி அவள் பேசுவதை கேட்ட ராமிற்கு அவள் அவன் செவிட்டில் அறைந்தது போல இருந்ததால் செய்வதறியாமல் திகைத்து போய் நின்றான்


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : என்னங்க அரசியல் நையாண்டி பதிவாக போடுறீங்க என்று கேட்டவர்களுக்காக நான் எழுதி பதிந்த கதை....கதையை படித்தவர்கள் கருத்து சொல்லுங்க அப்படி சொல்லாமல் சென்றால் என்ன நடக்கும் எனோது எனக்கே தெரியாது

18 comments:

  1. அரேஞ்ச் மேரேஜின் பரிதாபங்கள்

    ReplyDelete
    Replies
    1. அரேஞ்சு மேரேஜில் மட்டுமல்ல காதல் திருமணத்திலும் இப்படிப்பட்ட பரிதாபங்கள் உண்டு

      Delete
  2. சொல்லாமப்போனா என்ன நடக்குமாம்? இப்படி மிரட்றது கூட வன்முறைதான் தமிழா.மிக நுட்பமான ஒரு உணர்வை எவ்வளவு எளிதாக எழுத்தில் கடத்தியிருக்கின்றீர்கள்...ஜெயகாந்தனின் சின்ன இழை தெரிகிறது..வாழ்த்துகள் தமிழா..இன்னும் இன்னும்....

    ReplyDelete
    Replies
    1. தட்டிக் கொடுத்து வாழ்த்தியதற்கு மிகவும் நன்றி

      Delete
  3. PINK பார்த்தீங்களோ...

    மனைவி கணவனை "ன்னா...: என்றும், தங்கை அண்ணாவை "ண்ணா..." என்றும் அழைப்பார்கள். அப்படியே மாத்திப் போட்டிருக்கேளே...!!!

    ReplyDelete
    Replies
    1. பிங்க் இன்னும் பார்க்கவில்லை...

      இந்த ன்னா.... ண்ணா நீங்கள் சொன்ன போதுதான் எனக்கு புரிந்தது.... எனது மைச்சினிவீட்டில் பேசும் பேச்சு முறையை வைத்து எழுதினேன் எழுதும் போது ன்னா என்ற சவுண்டை மனதில் வைத்து எழுதினேன் சில இடங்களில் டைப் பண்ணும் போது ன்னா.... ண்ணா என்று கைக்குவந்ததை டைப் பண்ணினேன் அவ்வளவுதாங்க

      நீங்கள் எதையும் மிகவும் ஆழ்ந்து படிப்பவர் என்பது புரிகிறது.. பாராட்டுக்கள்

      Delete
  4. தாலி கட்டிய மனைவியே ஆனாலும் ..இந்த வாடீ போடீ பிடிக்கலை .
    செல்லமா அழைப்பது வேறு மிரட்டல் தொனி நெருடுகிறது .
    உங்க கதை ஹீரோ வை கொஞ்சம் அனுப்புங்க எங்க ஊர்ப்பக்கம் சும்மா சும்மா கையும் வாயும் நீளுது அவருக்கு :) (மூச்சுக்கு முன்னூறுதரம் என்னடி /ஓங்கி அடிக்க கை நீள்வதெல்லாம் )
    பத்து விரல்கள் எல்லாம் ஒன்று போலிருப்பதில்லை அப்படிதான் மனிதர்களும்.எல்லா ஆண்களும் இக்கதையின் ராம் போலிருக்க மாட்டார்கள் . அதற்க்காக ரேப்புடன் வலுக்கட்டாய உறவை சேர்த்து நியாயப்படுத்தக்கூடாது சீதா .
    கதை நல்லா இருக்கு பொதுவாவே மனுஷருக்குள் ஒரு மிருகம் ஒளிந்திருக்கும் சிலது உடனே முகம் காட்டும் சிலது சந்தர்ப்பம் வாய்க்கும்போது .
    உங்களுடைய பேச்சு பாணியில் மொழி நடையில் இருந்தா இன்னமும் கதை நன்றாக இருந்திருக்குமோன்னு தோணுது .அதோட முதல் கதை ஒரு லவ் ஸ்டோரியா இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் :) இப்பவும் நாட் டூ லேட் நெக்ஸ்ட் ஒரு இனிய காதல் கதையை ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம் :)


    ReplyDelete
    Replies
    1. உங்கள் பேச்சு பாணி என்று சொல்வது :) குறும்பு நடை அதை சொன்னேன்

      Delete
    2. எனது மைச்சினிவீட்டில் பேசும் பேச்சு முறையை வைத்து எழுதினேன் அங்கு வாடி வாடா மிகவும் சகஜம் எனது மனைவியின் வீட்டு சைடில் அது சகஜமாக இருக்கிறது.... என் குழந்தை கூட என்னை டேய் வாடா என்றுதான் எண்டா படுத்துறே எனப்து போலத்தான் இருக்கும். இதில் வந்திருக்கும் ராம் கேரக்டர் எனது மைச்சினிச்சியின் கணவ்ர்தான் அவர் அப்படித்தான் அவரின் உண்மையான பெயரையே இந்த கதையிலும் வைத்திருக்கிறேன்

      எந்த ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல் வலுக்கட்டாய உறவு என்பது அது கட்டிய கணவன் அல்லது காதலானக இருந்தாலும் அது என்னை பொருத்தவரையில் ரேப்தான்


      எனக்கு என்று ஒரு பாணியும் கிடையாது மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே எழுதிவிடுவேன் அவ்வளவுதான் எதையும் ரொம்ப யோசித்து எழுதுவது கிடையாது.அப்படி எழுதியதையும் சிறிதும் யோசிக்காமல் பதிந்துவிடுவேன்.... அதனால் சில சமயங்களில் சிலர் சுட்டிக் காட்டும் போதுதான் அதில் உள்ள தவ்றுகள் புரியும்... உதாரணமாக இன்று ஸ்ரீராம் பதிந்த கருத்தை கவனியுங்கள் அவர் சுட்டிக் காட்டிய பிந்தான் நான் எழுதியது எனக்கே புரிகிறது

      தமிழா உன் காதல் கதையை எங்களுக்கு சொல்லு என்று நேரடியாக கேட்பதற்கு பதில் லவ் ஸ்டோரி எழுதுங்கள் என்று கேட்கிறீங்களே?


      நீங்கள் கேட்டபடி நான் எழுதி ஒருவேளை அதை என் மனைவி படித்து இப்படியெல்லாம் என்னை காதலிக்கவில்லையே என்று பிரச்சனை வரும் அப்போது அவளுக்கு முன் காதலித்தவர்களின் பட்டியல் வெளி வந்து குடும்பத்தில் பிரச்சனைகள் எழாலாம் அல்லவா. அதனால்தான் ஜாக்கிரதையாக இருக்கிறேன்


      இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கடந்த 2 நாட்களாக வந்த செய்திதான் இந்த கதையை எழுத தூண்டியது.

      Delete
    3. ஓகே ஓகே :) புரிகிறது :)

      // எனக்கு என்று ஒரு பாணியும் கிடையாது மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே எழுதிவிடுவேன் அவ்வளவுதான் எதையும் ரொம்ப யோசித்து எழுதுவது கிடையாது.அப்படி எழுதியதையும் சிறிதும் யோசிக்காமல் பதிந்து//

      ஹாஹா ஒரு காலத்தில் நான் அப்படிதான் .நான் .ஒரு சம்பவம் பற்றி நான் எழுத அதே விஷயம் இன்னொருவர் பட்ட அனுபவமாகி தொலைக்க இன்டைரக்ட்டா கேவலமா திட்டு வாங்கி தொலைச்சேன் .அதிலிருந்து ரொம்பவே யோசிச்சிதான் எழுதறேன் .சிலநேரங்களில் நாம் நாமாக இருக்க கூட முடியவில்லை :(

      Delete
    4. நீங்கள் ரொம்ப யோசிக்கிறதினாலாவோ என்னவோ உங்களிடம் இருந்து பதிவுகள் அதிகம் வருவதில்லை. இப்ப அதற்கு காரணம் தெரிந்துவிட்டது

      Delete
    5. உண்மைதான் 95 % ..ஆனாலும் நீங்க சரியா கண்டுபிடிச்சிட்டீங்க உங்களுக்கு ஏதாச்சும் தந்தே ஆகணும் னு அதிர பிளாக்கை சேர்ச் பண்ண கூகிளில் மை லண்டன் ஸ்டைல் தட்டு இட்லி படம்தான் வருது :)) சோதிக்க வேணாம்னு
      இதோ இந்த கேக்கை உங்களுக்காக கொண்டு வந்தேன் :)


      இன்னொரு 5 % இப்படி ஜாலியா கும்மி அடிக்கிறதிலும் சந்தோஷமே :)

      Delete
    6. ஹலோ கேக்கூ எங்க?:) இன்விசிபிள் கேக்கோ?:).. அவருக்கெதுக்கு கேக் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
  5. இதில் திருமணத்தில் தவறில்லை, தான் ஆண் .. தன் விருப்பத்துக்கு மனைவி அடிமை என நினைக்கும் ஆண்களால் உருவாகும் தவறு.

    ஆனா இன்னொன்று, மனைவி.. தனக்குப் பிடிக்கவில்லையாயின் மறுக்கலாமே... அப்போ பேசாமல் நல்லவவாக விட்டுவிட்டு இப்போ சான்ஸ் கிடைச்சதும் எதுக்கு இப்படிப் பேச்சு.. இதுதான் புரிவதில்லை சில பெண்களின் மனது:(

    ReplyDelete
    Replies
    1. அதிரா & ஏஞ்சல் உங்கள் இருவருக்கும் நல்ல கணவர் அமைந்திருக்கிறார். அதனால்தான் பிடிக்கவில்லையென்றால் அந்த நேரத்தில் மறுத்து இருக்கலாமே அதைவிட்டுவிட்டு மனதில் வைத்திருந்து கோபமாக சந்தர்ப்பம் வாய்க்கும் போது பேசுகிறாகளே என்று உங்களால் சொல்ல முடிகிறது.. பல குடும்பங்களில் அந்த நேரத்தில் பல பெண்கள் மறுத்தாலும் வலுக்கட்டாயமாக உறவு கொள்ளும் ஆண்களை பற்றி நீங்கள் அறிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன்

      Delete
  6. அதே அதே பார்த்திங்களா எங்க தலைவி மியாவ் சூப்பரா சொல்லிட்டாங்க :)
    எதையும் உடனே சொல்லிட்டா பிரச்சினையில்லை .அதை தூக்கி சுமக்கிரத்தில் வருத்தமும் கோபமும் மிஞ்சும் .

    ReplyDelete
    Replies
    1. உங்கள் தலைவி சொன்ன முதல் வரி சரி ஆனால் இரண்டாவது வரியின் உண்மை நிலை அவர்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது

      Delete
  7. டீ போட்டு பேசுவது கேரளத்தில் சாதாரணம் மனைவி விரும்பாதபோதுஎன்ன செய்தாலும் வன்முறை என்று கொள்ளலாம் சிறு கதை நல்ல முயற்சி

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.