உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, November 18, 2014

தமிழ் சமுகத்திற்கு காசு மற்றும் நேரம் செலவு செய்யாமல் உங்களுக்கு உதவ விருப்பமா?தமிழ் சமுகத்திற்கு காசு  மற்றும் நேரம் செலவு செய்யாமல் உங்களுக்கு உதவ விருப்பமா?

அப்படியானல் உங்களுக்கு இந்த பதிவுமதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியின் முன்னால் பேராசிரியரும், வலைபதிவர்களில் மூத்தவரும் எல்லோரும் மதிக்க கூடிய ஒரு நபருமான தருமி என்று அழைக்கப்படும் சாம் ஜார்ஜ் அவர்கள் தமிழக சமுதாயம் நலம் பெற வேண்டும் என்ற நோக்கில் ஒரு வேண்டுகோள் விடுவித்து இருக்கிறார். அதற்கு நம் ஆதரவை எதிர் நோக்கி இருக்கிறார். இதற்கு நீங்கள் காசு பணம் நேரம் செலவழிக்க வேண்டாம், அவர் கேட்பதெல்லாம் ஆன்லைன் பெட்டிஷனுக்கு உங்கள் ஆதரவு மட்டுமே அதை செய்ய உங்களால் முடியமா?

உங்களால் இயலும் என்றால் கிழே உள்ள விபரங்களை படித்து உங்கள் ஆதரவையும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவையும் தருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்டாஸ்மாக்கை விட அதிகம் அஞ்சுவது பக்கத்திலிருக்கும் பார்களை.  பார் வைத்திருப்பது இரட்டிப்பு சந்தோஷம் மக்களுக்கு. யார் வேண்டுமானாலும்,எப்போது வேண்டுமானாலும் குடித்துக் கொள்ளலாம் என்ற “சுதந்திரம்” குடிமக்களுக்கு.

 இந்த “சுதந்திர குடி” எளிதாய் ஒழிக்கக் கூடியது. அதில் நிச்சயமாக  பலருக்கு ஏற்படும் தடையால் அவர்களது குடி குறையும். நிச்சயமாக விபத்துகள் குறையும் என்று உறுதியாக நம்புகிறேன். ஏற்கெனவே தமிழ்நாட்டில் தான் விபத்துகள் அதிகம் என்ற செய்தி மனதை உறுத்துகிறது. பார்களை எடுத்தால் குடியை நிறுத்த முடியாது. ஆனால் நிச்சயமாக குறைக்க முடியும். அரசுக்கும் காசு நட்டம் ஏதும் கிடையாது.

மது விலக்கிற்கு எதிரான சிறிய ஆனல் முதல் படியாக இது இருக்கட்டுமே!

ஆகவே தமிழ்நாட்டு அரசுக்கு ஒரு விண்ணப்பம் எழுதியுள்ளேன். நம்பினால் ஓட்டளியுங்கள். அதோடு இதே விண்ணப்பத்தை உங்கள் பதிவிலும் பதிப்பித்து மேலும் இச்செய்தி பலரையடைந்து, விண்ணப்பத்திற்கு நிறைய கையெழுத்து வர உதவ கேட்டுக் கொள்கிறேன்.

Please join this campaign:நண்பர்களே முடிந்தால் இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடத்து எடுத்து சொல்லி ஆதரவு தாருங்களேன். மேலும் உங்கள் பேஸ்புக் தளத்திலும் கூகுல் பளஸிலும் சேர்த்து ஆதரவு தாருங்களேன்

அன்புடன்
மதுரைத்தமிழன்
தருமி சார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இது இங்கு வெளியிடப்படுகிறது

11 comments :

 1. எனது பக்கத்தில் பகிர்கிறேன். மதுவிலக்கு சம்பந்தமான பதிவு. நண்பர்கள் கையெழுத்திட வேண்டுகிறேன். நன்றி

  Avargal Unmaigal

  ReplyDelete
 2. இந்த பெட்டிஷனில் சென்ற வாரமே இணைந்து விட்டேன்! நல்லதொரு முயற்சி! கை கொடுப்போம்!

  ReplyDelete
 3. மீண்டும் நன்றி - தொடர்புக்கு

  ReplyDelete
 4. பகிர்து கொண்டதற்கு நன்றி. ஓட்டளித்து விட்டேன்,

  ReplyDelete
 5. அட. நல்ல விசயமாக இருக்கிறதே.....

  ReplyDelete
 6. கண்டிப்பாக பகிர்கிறேன்..

  ReplyDelete
 7. மிக நல்ல விஷயம்! செய்துவிட்டோம் தமிழா!

  தங்களுக்கு பிறந்த நாள் என்று துளசி சொன்னார். நான் ஃபேஸ் புக்கில் இல்லை.

  தங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! எங்களை எல்லாம் எப்பொதும் மகிழ்ச்சியில் ஆழ்த்த (உங்கள் குடும்பத்தாரையும் சேர்த்துத்தான்) நீங்கள் நிறைய, நீண்டநாள் எழுத வேண்டும் என்ற பிரார்த்தனையுடன்.
  --கீதா
  (பின் குறிப்பு. உங்கள் பிறந்த நாள் அன்று மட்டுமாவது பூரிக்கட்டை பூசை இல்லாமல் ஆகட்டும்! ஹஹ்ஹஹ் )

  ReplyDelete
 8. இதென்ன பெரிய நாளும் அதுவுமா கொள்கைக்கு எதிரான பதிவு!!!!!!

  ReplyDelete
 9. நல்லதொரு முயற்சி... எல்லோரும் இணைவோம்...

  ReplyDelete
 10. நானும் பதிவு செய்து விட்டேன் நண்பரே.....

  இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog