உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, November 3, 2014

அரசியல் செய்திகளுக்கு கலைஞர் பாணி நக்கல்கள் ( ராமதாஸ் வீட்டு கல்யாணத்தில் கலைஞர் கொடுக்க மறந்த மொய்ப்பணம்)
அரசியல் செய்திகளுக்கு கலைஞர் பாணி நக்கல்கள் ( ராமதாஸ் வீட்டு கல்யாணத்தில் கலைஞர் கொடுக்க மறந்த மொய்ப்பணம்) செய்தி :நாம் அனைவரும் இணைந்து காங்கிரசை பலப்படுத்த வேண்டும்- சிதம்பரம்

மதுரைத்தமிழன் : காங்கிரஸை பலப்படுத்துவதும் கங்கையை சுத்தப்படுத்துவதும் ஒன்றுதான் இரண்டுமே இயலாத காரியம்
செய்தி : காங்கிரஸ் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை இளங்கோவன்

மதுரைத்தமிழன் : தொண்டர்கள் இருந்தால்தானே பாதிப்பு இருக்கும்.செய்தி :2016 தேர்தலில் அதிமுக திமுக தவிர்த்து பாமக தலைமையில் புதிய கூட்டணி அமையும் - மருத்துவர் ராமதாசுமதுரைத்தமிழன் : கலைஞர், ராமதாஸ் வீட்டு கல்யாணத்திற்க்கு மொய்பணம் கொடுக்காம போய் இருப்பார் அந்த கோபத்தில் ராமதாஸ் இப்படி அறிக்கைவிட்டு இருப்பாரோசெய்தி பால் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க சார்பில் போராட்டம்

மதுரைத்தமிழன் : ஆமாம் இவங்க ‬ போராட்டம் பண்ணி முடிச்சவுடனே எல்லா விலையும் குறைஞ்சுடும்செய்தி : ஜி.கே.வாசன் பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம் - பொன்.ராதாகிருஷ்ணன் #

மதுரைத்தமிழன் :இல்லையென்றால் மோடி வந்து அவர் கூட டீ சாப்பிட்டு கூட்டணிக்கு அழைப்பார்செய்தி :அரசியலில் ஒரு புதியபாதையை அமைப்போம் - வாசன்

பழைய பாதையில் கடன்காரர்கள் இருப்பார்களோ என்னவோசெய்தி :வாசன் புதிய கட்சி தொடங்குகிறார்

மதுரைத்தமிழன் :தனியாக நிற்கும் வாசனுக்கு அவரது தந்தையின் நண்பர்(கலைஞர்) முதல் அழைப்பு ... நாங்கதான் முதல்ல துண்டை போட்டோம் கலைஞர் கெக்கேலிப்புசெய்தி : காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. அதனால் தமிழகத்தில் ஏற்படும் மாறுதல்கள் என்ன?

மதுரைத்தமிழன் :தமிழ்நாட்டுல இருக்கிற காங்கிரஸ்காரங்க எண்ணிக்கை 10 ல் இருந்து 4 ஆக ஆயிருச்சு.கட்சிகளோட எண்ணிக்கையோ 100 ல இருந்து 101 ஆக ஆயிருச்சு...இதுதாங்க தமிழகத்தில் ஏற்பட்ட மாறாட்டம்
செய்தி : இலங்கை இந்தியாவின் நட்பு நாடு

மதுரைத்தமிழன் : தப்பு தப்புங்க இலங்கை மோடியின் நட்பு நாடுங்கசினிமா :கத்தி படம் பற்றியும் முருகதாஸ் பற்றியும் என்ன சொல்லுறீங்க?

மதுரைத்தமிழன் :கத்தியை எடுத்தவன் கத்தியால் அழிவான்.முருகதாஸ் நீங்கள் சாதிபற்று உள்ளவரா ?

மதுரைத்தமிழன் எனக்கு பிரச்சனை வந்தால் மட்டுமே சாதியை பின்பற்றுவேன்

அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய

மதுரைத்தமிழன்

8 comments :

 1. தமிழ்வாணனின் கேள்விபதில் போல்
  மதுரைத் தமிழனின் கேள்வி பதிலும்
  பிரபலமாகிவிடும்போல் இருக்கே
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. செய்திகளுக்கு உங்களின் கமெண்ட்ஸ் அனைத்தும் சிறப்பு! ரசித்தேன்! நன்றி!

  ReplyDelete
 3. பலப்படுத்துவது இருக்கட்டும் . முதலில் காங்கிரஸ் என்று ஒன்று இருப்பதை கண்ணு புலப்பட வைக்கட்டும்

  கத்தி எடுத்தவன் கத்தியால் அழிவான் பக்கா சிலேடை பஞ்ச். சூப்பர்

  ReplyDelete
 4. சின்ன ஸ்பீக்கரைக் கூட கண்டுபிடித்து விட்டீர்களா......?

  ReplyDelete
 5. நேரம் காலம் தெரியாம சிரிச்சு சிரிச்சு (வீட்ல யாரும் இல்லாததால தப்பிச்சேன்) நானே உருண்டுகிட்டேன். உங்கள் கிண்டலுக்கு ஓர் அளவில்லயாய்யா..? பாவம் மன்மோகன்ஜியின் டர்பனை ஓ.பி. எடுத்துக் கிட்டா அவர் என்ன பண்ணுவாரு? அவரு தலையில ஒன்னுமில்லனு எல்லாரும் தெரி்ஞ்சிக்கணுமா? (ஆமா இப்படியான படங்களை எப்படி நீங்களே உருவாக்குறிங்க... கணினி வரைகலை?) உங்களின் வெற்றி ரகசியங்களை ரகசியமாக் கவனிச்சுக்கிட்டே வர்ரேன்...இருங்கஇருங்க..

  ReplyDelete
 6. ரசித்து படித்தேன். எனக்கு மிகவும் பிடித்தது - மொய்ப்பணம்...

  ReplyDelete
 7. முதல் படம் கலக்கல் மதுரைத் தமிழன்!

  இன்று ஒரு அறிக்கை படித்தீர்களா - ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது! என்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் இளங்கோவன் :)

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog