உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, November 16, 2014

கனவில் வந்தது காந்தி சாந்தி அல்லயாருய்யா இந்த கில்லர்ஜி... என்னய்யா தலைப்பு இது.. 'கனவில் வந்த காந்தி' என்று அதற்கு பதிலாக கனவில் வந்த சாந்தி என்று வைத்திருக்கலாம் ஒரு கிளு கிளுப்பாகவது இருந்து இருக்கும்

யார் யார் கனவிலோ யார் யாரோ வரும் இக்காலத்தில் இவர் கனவில் காந்தி வந்திருக்கிறார். வந்ததுமட்டுமல்லாமல் கேள்வியும் கேட்டு அதையும் தொடர்பதிவாக எழுத சொல்லி போயிட்டார் போல.. காந்திஜியும் கில்லர்ஜியும் என் கண்ணில் பட்டால் அவ்வளவுதான்... நான் என்ன செய்வேன் என்றே எனக்கே தெரியாது.

சரி சரி நான் ஸ்கூலில் படிக்கும் போதே எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னது கிடையாது ஆனால் இங்கே கில்லர்ஜி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில் சொல்லி இருக்கிறேன். அதனால் படித்துவிட்டு ஒழுங்காக மார்க் இட்டு போகவும் அப்படி இடாதவர்களை நிறைய தொடர்பதிவுகள் ஆரம்பித்து அதை தொடரச் செய்யப் போகிறேன் ஜாக்கிரதை1.   நீ மறு பிறவியில் எங்கு பிறக்க வேண்டும் என்று நினைக்கிறாய்?
     மறுபிறவி என்று ஒன்று இருந்தால் கலைஞர் குடும்பத்தில்தான்(உதயநிதிக்கு பேரனாக) பிறக்க விரும்புகிறேன் காரணம் ஏழு தலைமுறைக்கு அல்ல எழுபது தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்திருப்பவர் அவரே. ஒரு வேளை அவர் இதற்கு மறுப்பு தெரிவித்தால் அம்பானி வீட்டில் பிறக்க ஆசைபடுகிறேன்

02.   ஒரு வேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால்?
ஆகா நல்ல கேள்வி அதுவும் மதுரைத்தமிழனை பார்த்து கேட்ட கேள்வி
 நான் ஆட்சியாளனாக வந்தால் ஒரு நல்ல அமெளவுண்டை வாங்கி சுவிஸ் பாங்கில் போட்டு விட்டு நாட்டை சீனாக்காரனிடம் விற்றுவிடுவேன். மவனே அதற்கு அப்புறம் எவனாவது வெட்டி பேச்சு பேசிக் கொண்டு இருக்க முடியாது.

03.   இதற்கு வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தால்? என்ன செய்வாய்?
எதிர்ப்பு தெரிவிக்கும் இந்தியர்களை பிடித்து பாகிஸ்தாங்காரனிடம் கொடுத்துவிடுவேன்

04.   முதியோர்களுக்கு என்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?
இவங்களுக்காகதானே நான் வருத்தபடாத வயோதிகர்கள்சங்கம் ஆரம்பித்து வைத்து இருக்கிறேன். அதுமட்டும் அல்ல இந்த முதியோர்கள் தினமும் வந்து என் பதிவுகளை படித்து கருத்துகள் கண்டிப்பாக இட்டால்தான் அவர்களுக்கு தினமும் உணவு. அதுமட்டுமல்லாமல் இவர்கள் தினம்தோறும் தெருக்களுக்கு சென்று கிறிஸ்துவ மதப் பிரச்சாகர்கள் பிரச்சாரம் செய்வது போல மக்களே உங்களை காக்க மதுரை தமிழன் வருவார் அது வரை அவரின் பதிவுகளை படித்து அவரை பாலோ செய்யுங்கள் என்று பிரச்சாரம் செய்யவேண்டும் என்று கட்டளை இடுவேன்

05.   அரசியல்வாதிகளுக்கு என்று புதிய திட்டம் ஏதாவது?
நிச்சயம் உண்டு... எல்லா அரசியல்தலைங்களையும் ஒரு இடத்தில் கூடச் செய்து அவர்களை கூண்டோட கைலாசம் போக ஏற்பாடு செய்வேன் ( இதுக்கு பயணக் கட்டுரைகள எழுதும் டில்லியில் உள்ள வெங்க்ட் சாரை உதவிக்கு அழைத்து கொள்வேன்)

06.   மதிப்பெண் தவறென, மேல்நீதி மன்றங்களுக்குப் போனால்?
அங்கு மாணவர்களுக்கு ஒரு மறு தேர்வு வைத்து நீதிபதி முன்னால் பரிட்சை எழுத செய்வேன்

07.   விஞ்ஞானிகளுக்கென்று ஏதும் இருக்கிறதா?
ஆமாம் ஆமாம்.. சரக்கு அடித்தவர்கள் பக்கத்தில் வந்தால் நாறுது என்கிறார்கள் அதனால் அப்படி நாறாத சரக்கு கண்டு பிடியுங்கள் என்று கேட்டு கொள்வேன்... பூரிக்கட்டையால் அடிபடும் காயங்கள் உடனடியாக ஆற மருந்து கண்டுபிடிக்க செய்வேன். நல்ல வாசனை திரவியம் கண்டுபிடிக்க செய்து அதை என் உடம்பில் அடித்து கொள்ளும் போது எனக்கு பிடித்த பெண் நயந்தாரா சினேகா போன்ற பெண்கள் மட்டும் என்னிடம் ஒட்டிக் கொள்ள வழி செய்ய சொல்வேன்


08.   இதை உங்களுக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் செய்வார்களா?
 எனது திட்டங்கள் பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா என்ன


09.   மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக?
டீக்கடைகள் பெட்டிக்கடைகள் எல்லாம் டாஸ்மாக் கடையாக ஆக்கப்படும்

10.   எல்லாமே சரியாக சொல்வது போல் இருக்கு. ஆனால் நீ மானிடனாய் பிறந்து நிறைய பாவங்களை செய்து விட்டாய். உனக்கு மீண்டும் மானிடப் பிறவி கொடுக்க முடியாது. ஆகவே வேறு என்ன பிறவி வேண்டுமென இறைவன் கேட்டால்?
நீ மானிடனாக பிற நான் கடவுளாக அவதரிக்கிறேன் என்று சொல்வேன்

இவ்வினியப் பதிவினைத் தொடர, நான் அழைக்கும் நண்பர்கள்

எனக்கு எல்லோருமே நண்பர்கள் என்பதால் அனைவரையும் அழைக்கிறேன்.


அன்புடன்
மதுரைத்தமிழன்.

டிஸ்கி : நான் மனம் போன போக்கில் எழுதுபவன் அதனால் இந்த தலைப்பில் எழுதவும் இப்படி எழுதவும் அப்படி எழுதவும் என்று விதிமுறை சொல்லி அழைத்தால் அப்படி எனக்கு எழுத வாராது. அதனால் இனிமேல் யாரும் எழுத அழைக்க வேண்டாம். அப்படியும் எழுத அழைப்புவிடுவிக்கும் நண்பர்களுக்கு நீங்கள் அழைப்பு விடுவிங்கள் பரவாயில்லை எனக்கு அது சம்பந்தமாக எழுத ஏதும் மனதில் தோன்றினால் நிச்சயம் எழுதுகிறேன். ஒருவேளை எழுத தோன்றாவிட்டால் தவறாக நினைக்க வேண்டாம்.


35 comments :

 1. கடைசி பதில் சூப்பர்.....:))) கைலாசம் கூட்டிப் போக சரியான நபரைத் தான் தேர்வு செய்திருக்கீங்க....:)))

  ReplyDelete
  Replies
  1. ரசிப்பிற்கு மிகவும் நன்றி....பயணப்பதிவுகளில் தனக்கென முத்திரை பதித்தவர் வெங்கட். அந்த ஏரியாவில் அதுவும் பயனுள்ள பதிவு எழுதுவதில் அவருக்க்கு நிகர் யாரும் இல்லை. கைலாசம் என்ற வார்த்தை வந்தவுடன் அவரின் நினைப்பு உடனே வந்ததால் அவரது பெயரையும் உள்ளே இழுத்துப் போட்டேன்

   Delete

 2. கில்லர்ஜியின் பட்டியலில் உங்கள் பெயரைப் பார்த்தவுடனேயே, இது மாதிரி தலைப்புகளில் மதுரைத் தமிழனின் நையாண்டி நன்றாகவே இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். எதிர்பார்த்தது வீண் போகவில்லை.
  த.ம. 1

  ReplyDelete
  Replies
  1. மதுரைத்தமிழனை மிகவும் நன்றாகவே புரிந்து வைத்து இருக்கிறீர்கள். நன்றி

   Delete
 3. நண்பா உன் வழி தனீ வழி என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபிக்கிறீர்கள்
  சிரிப்புத்தான் போங்கள்..

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் உங்களைப் போல உள்ளவர்களின் வழிக்காட்டல்தால்தான்

   Delete
 4. இந்த தொடர் பதிவுக்கு இதுவரை நான் படித்ததில் இந்த பதில்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாக இருக்கிறது! உங்கள் பாணியிலேயே பதில் சொல்லி அசத்திவிட்டீர்கள்! டிஸ்கியும் சூப்பர்! எனக்கும் இந்த தொடர்பதிவுகள் கொஞ்சம் போரட்டிக்கத்தான் செய்கிறது!

  ReplyDelete
  Replies
  1. படித்து ரசித்தற்கு நன்றிகள் .....


   தொடர்பதிவுகள் சில சமயங்களில் போரடிக்கத்தான் செய்யும் ஆனால் அழைப்பவர்கள் நண்பர்கள் என்பதால் அவர்களின் ஆசைகளை "நேரம் கிடைத்தால்" நிறைவேற்றுவதில் தவறு ஏதும் இல்லையே. அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதைவிட நமக்கு வேறு எப்படி சந்தோஷம் கிடைக்கப் போகிறது

   Delete
 5. நண்பரே எமது வார்த்தைக்கு மதிப்பளித்து அழகாக நகைச்சுவையாக, நையாண்டியாக பதில் அளித்து உள்ளீர்கள் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. என்னையும் ஒரு மனுஷனாக மதித்து கேட்ட பின் பதிவு போடாமல் இருக்க முடியுமா நண்பரே


   நண்பர்கள் என்பதால் அவர்களின் ஆசைகளை "நேரம் கிடைத்தால்" நிறைவேற்றுவதில் தவறு ஏதும் இல்லையே. அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதைவிட நமக்கு வேறு எப்படி சந்தோஷம் கிடைக்கப் போகிறது

   Delete
 6. சூப்பர் பதில்கள் தமிழரே....

  ReplyDelete
  Replies
  1. படித்து ரசித்தற்கு நன்றிகள் .....

   Delete
 7. ஒன்னுமட்டும் சொல்லறேன் சகா!! நாம யாரும் காந்திஜிக்கு பதில் சொன்ன மாதிரி தெரியல, எல்லோரும் கில்லர்ஜி க்கு தான் பதில் சொல்லிருக்கோம்:))) கனவில் வந்த சாந்தி சேச்சே!! காந்திகிட்ட டாஸ்மாக் கேட்டீங்க பாருங்க!! அங்க நிக்கிறீங்க:))

  ReplyDelete
  Replies
  1. காந்தி இன்னும் உயிரோடு இருந்து நானும் அவரை பார்க்கும் வாய்ப்பு இருந்தால் அவர் என்னிடம் தமிழா நான் கஷ்டப்பட்டு வாங்கி தந்த சுதந்திரத்தை இப்போது எப்படி கேலிக் கூத்தாக்கி இருக்கிறார்கள் பார்த்தியா இதை பார்க்கும் போது என் மனது கஷ்டமாக இருக்கிறது அதனால் என்னையும் டாஸ்மாக் கூப்பிட்டு போ என்று சொல்லி இருப்பார்.

   அல்லது நடிகர் சிவகுமார் சொன்னது போல நான் என் இளமை வயதில் தப்புகள் செய்ய வாய்ப்பு இருந்த போது மிக நல்லவனாக இருந்துவிட்டேன் ஆனால் இப்பொது உள்ளவர்களை பார்க்கும் போது நான் நிறைய மிஸ் பண்ணுகிறேன் என்று சொன்னது போல காந்தியும் நானும் நிறைய மிஸ் பண்ணிட்டேன் அதனால என்னையும் கூட்டிட்டு போ என்று சொல்லி இருப்பார்

   Delete
 8. நாலாவது கேள்வியை கேட்கும் முன்னரே வயோதிகர் சங்கம் தொடங்கி உங்களை முன்னோடி னு சொல்லலாமா சகா!!

  ReplyDelete
  Replies

  1. ஹலோ நாங்க என்றும் பதினாறுதான்... நல்லா ஞாபகம் வைச்சுகுங்க. வயதானவர்கள் தங்கள் வயதின் காரணமாக சங்கம் ஆரம்பிக்க முடியலைன்னு வருத்தப்பட்டதால்தான் நான் அதை ஆரம்பித்து வைத்தேன். நீங்கள் விருப்பபட்ட தங்கள் வூட்டுகாரரை அதற்கு தலைவாரக ஆக்கி விடுகிறேன் எப்படி வசதி .. அவருதான் தாடி வைச்சுகிட்டு இருக்கிறார் ஹீஹீ

   Delete
  2. ஆமா இளைஞர் அணி தலைவரா ஸ்டாலின் இருக்கும் போது வயோதிகர் சங்கத்திற்கு கஸ்தூரி மாதிரி யூத் தானே பெஸ்ட் சாய்ஸ்!!
   “He that hath a beard is more than a youth, and he that hath no beard is less than a man. He that is more than a youth is not for me, and he that is less than a man, I am not for him.” ஷேக்ஸ்பியர் சொன்னது:)

   Delete
  3. பாருங்களேன் வூட்டுகாரர் பற்றி ஒரு வரி சொன்னதும் இந்த புள்ள ஷேக்ஸ்பியரை இழுத்து வந்து கருத்து போடுறதை.. அடியம்மோவ்.... ஹீஹீ

   Delete
 9. Replies
  1. அட பாருங்கப்பா நானும் இங்கிலீஷ் டீச்சர் இங்கிலீஷ் டீச்சர் என்று சொல்லி இங்கிலஷில் கமென்ட் போட்டு போறாங்க... ஆமாம் கமெண்டில் என்னை திட்டி இருக்கீங்களா அல்லது பாராட்டி இருக்கிங்களா கொஞ்சம் தமிழில் மொழி பெயர்த்து சொல்லி இருந்தால் நன்றாக இருக்குமே... நானெல்லாம் கார்பரேஷன் பள்ளியில் படித்தவன் ஏதோ வழி தவறி இங்கே வந்துட்டேன்... நானெல்லாம் பாஸ் வருண்,பரதேசி ,விசு போல கான்வெண்ட்டில் படித்தவன் அல்ல

   Delete
  2. வழக்கம்போல புரிந்துகொண்டே ஹோம் ஒர்க் கொடுக்குறீங்க. சரி செய்றேன். ஆன ஏன் தேரை இழுத்து தெருவில் விடுறீங்க!! நான் வருணை பத்தி சொல்லல , சொல்லல.


   முதல் விடை முத்தான விடை
   போதுமா?

   Delete
  3. அது எப்படி ஐய்யா, எங்க ஒரு பிட் போட்டாலும் அதில் என் பெயரை சேர்த்து விடுகின்றீர் ?

   Delete
  4. வருங்கால கலிபோர்னியா மேயருக்கு அப்ப அப்ப ஒரு ஜே போட்டுக்குவோம். அப்பதான பாடிகார்ட் வேலையாவது கிடைக்கும் ஹீஹீ

   ஒன்ஸ்மோர்

   கலிபோரினியாவை காக்க வந்த தங்க தலைவன் விசுக்கு ஜே ஜே ஜே

   Delete
  5. பாஸ் மழை பகவான் (வருண்) வந்து கொட்டிச் சென்றாலோ அல்லது தட்டிக் கொடுத்தாலோ நமக்கு சந்தோஷம்தானே அதுதானுங்க

   Delete
  6. தல: Let me be honest (as always. :) ) நான் 1-5 படிச்சது நகராட்சி பள்ளியில், 6-10 தமிழ் மீடியம்தான், 11-12 (+2) ஆங்கில மீடியம் படிக்க ஆரம்பிச்சு எவ்வளவோ கஷ்டப்பட்டும், சரிவர ஆங்கிலத்தில் பேச எழுதத்தெரியாததோடு, ஆங்கிலத்தில் படித்த விஞ்ஞானமும் சரிவரப் புரியவில்லை. எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களுக்கும் எனக்கு புரியும்படி சொல்லிக்கொடுக்கத் தெரியவில்லை. I wanted to learn but nobody could help me and I did not have enough time either. மேற்படிப்பு படிக்கும்போதுதான் கொஞ்சம் கொஞ்சம் ஆங்கிலத்தில் எழுதப் பேச கத்துக்கொண்டேன். Started understanding the subject as I could slowly overcome the "lack of English knowledge" as time went on.

   இங்குள்ள கெமிஸ்ட்ரி புத்தங்களை இப்போது பார்க்கும்போது, நான் படிக்கும்போது இது மாதிரி புத்தகங்கள் எனக்கு கிடைக்கவில்லையே! எவனோ அரை வேக்காடு எழுதியதுதானே எனக்கு கிடைத்தது என்று இன்றும் எண்ணுவதுண்டு.

   அதனால்தானோ என்னவோ,, எதுக்கெடுத்தாலும் எங்க ஊரைப்போல வருமா? நாங்கதான் உலகிலேயே மேதைகள், னு நம்ம பெருமை பேசுபவர்களைப் பார்த்தால் கொலை வெறி வரும். It only shows how ignorant we are! And how closed minded we are!

   Delete
  7. இங்கேயும் அதே கதை தான். ஆங்கிலம் இன்னும் கடவுள் பாஷை தான்!

   Delete
 10. என்னைவிட நீங்கதான் காந்திஜீக்கு நல்லா தண்ணி காட்டி இருக்கீங்க !

  ReplyDelete
  Replies
  1. டாஸ்மாக் காரணால் மட்டும்தான் தண்ணி காட்ட முடியும். ஜோக்குலகின் முடிசூடா மன்னன் தட்டி கொடுக்கும் போது சந்தோஷமாகவே இருக்கிறது

   Delete
 11. மதுரைத் தமிழனின் ட்ரேட் மார்க் பதில்கள்

  ReplyDelete
  Replies
  1. படித்து ரசித்து பாராட்டியதற்கு மிக்க நன்றிகள்

   Delete
 12. தங்கள் பாணியில் நகைச்சுவையாய் அருமையான பதில்கள்...
  முதல் கேள்விக்கான பதில் சூப்பர்... அப்படித்தான் யோசிக்கணும்... அடுத்த பிறவியிலாவது கஷ்டப்படமா வாழ்வோமே.... ஆனா என்ன சந்தோஷம் போயிடுமே சகோதரா...
  பட்... உங்க பதில்கள் என்னை ரொம்பக் கவர்ந்திருச்சு...

  ReplyDelete
  Replies
  1. ரசித்து படித்தற்கு நன்றி நண்பரே

   Delete
 13. என்னோட கனவுல வரவுங்களை எல்லாம் இந்த கில்லர்ஜி கெடுத்துப்புட்டாரே!!!
  கில்லர்ஜி தலைப்பை கிளுகிளுப்பா கொடுக்கலைன்னா என்ன, அதான் நீங்க சூப்பரா இல்ல கொடுத்திருக்கீங்க.

  முதல் பதில் - ஆனாலும் நீங்க இவ்வளவு பேராசைக்காரானாக இருக்க கூடாது (எல்லாம் பொறாமை தான். ஹி..ஹி..ஹி)

  ReplyDelete
 14. உங்கள் பாணியே தனி தான்...!

  இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 15. அட! எப்படி விட்டுப் போச்சு உங்களின் இந்தப் பதில்கள்?! நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒன்று..சே நீங்க காந்திக்குத் "தண்ணி" காட்டிட்டீங்க....இது எங்களுக்குத் தண்ணி காட்டிருச்சு... ரொம்பவே ரசித்தோம்......கண்டிப்பா காந்தி இந்த் வலைல சுத்தி நம்ம எல்லார் பதில்லயும் நொந்து இனி யார் கனவுலயும் வர மாட்டேன்னு ஓடிப் போயிருப்பாரு...கில்லர்ஜியதான் கேக்கணும்....அது சரி காந்திக்குத் தமிழ் புரிஞ்சுருக்குமா?!!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog